tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் சோளிங்கர் என்ற ஊரில் அமைந்துள்ளது அருள்மிகு லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோயிலாகும். சோளிங்கர், சோளிங்கபுரம் என்று தற்போது அழைக்கப்படும் இவ்வூர் பண்டைக் காலத்தில் திருக்கடிகை என்ற பெயரில் அழைக்கப்பட்டது. 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றாக சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் திகழ்கிறது. இக்கோவிலில் லட்சுமி நரசிம்மர் யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருடன் அமிர்தவல்லி தாயாரும் அருளாசி வழங்குகிறார்.

 

உலகை காக்கும் பரம்பொருளான இறைவன் நரசிம்மர் யோக நரசிம்மராக காட்சி தந்த அருள் பெற்ற திருத்தலம். தமிழகத்திலேயே அருள்மிகு ஆஞ்சநேயப் பெருமான் சங்கு சக்கரத்துடன் காட்சி தந்து அருளும் சிறப்பு வாய்ந்த திருத்தலம். தமிழகத்திலேயே பெருமாள் ஒரு மலையிலும் ஆஞ்சிநேயர் ஒரு மாலையிலும் உற்சவர் அடிவாரத்திலும் கோவில் கொண்டு அருளும் அபூர்வ திருத்தலம். சுமார் 1800 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த திருத்தலம் 108 வைணவ திவ்ய தேசங்களில் 64 வது திவ்ய தேசம். 

 

பேயாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், மந்நாத மாமுனிகள், திருக்கச்சி நம்பிகள், மணவாள மாமுனிகள் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருத்தலம். 

 

திருக்கடிகை சோழப் பரம்பரையின் புகழ் பெற்று விளங்கிய திருமாவளவன் கரிகால சோழன் காலத்தில் சோழநாடு 48 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அக் காலத்தில் இப்பகுதி கடிகை கூட்டம் என்றும் கடிகாசலம் என்று பெயர் பெற்று விளங்கியது பரந்தாமன் ஆன திருமால் இங்கு கோவில் கொண்டு அருள்வதால் இவ்விடம் திருக்கடிகை என பெயர் பெற்றது. புராண நூலின் படி இதன் பெயர் கடிகாசலம் என்பதாகும். கடிகா என்பதும் கால அளவின் ஒரு கூறு . அசலம் என்றால் மாலை. ஸ்ரீநரசிம்ம பெருமாள் பிரகல்லாதன் முதலிய அடியவர்களுக்கு கடிகை மாத்திரைப்பொழுதில் இம்மலை மீது யோக சமாதியில் காட்சியளித்து முக்கியளித்ததால் கடிகாசலம் எனப்பெயர் பெற்றது. இங்குள்ள யோக நரசிம்ம மூர்த்தி பழமையான ஒன்றாகும்.

 

திருமால் பிரகலாதனுக்காக சீற்றம் கொண்டு சிம்ம மூர்த்தியாக அகில உலகமும் திரும்பும்படி அவதரித்தார் அத்தகைய சிம்ம மூர்த்தி யோக நிலையில் காட்சி தந்து அருளும் ஒரே தலம் இதுவாகும் சோழ நாட்டிலேயே பெருமைக்குரிய சிவமூர்த்தி குடிகொண்டுள்ள ஊர் என்பதால் இவ்விடம் சோழபுரம் என்று பெயர் பெற்றது நாளடைவில் இதுவே சோளிங்கபுரம் என்று மருவி சோளிங்கர் என்று தற்போது அழைக்கப்படுகிறது.

 

திருமாலின் எல்லா அவதாரங்களிலும் ஸ்ரீ நரசிம்மர் அவதாரம் பெருமை சற்றே அதிகம். தனது பக்தனின் நம்பிக்கையை நிலைநாட்டுவதற்காக பக்தன் வேண்டிய உடன் அவதரித்ததினால் திருமால் பக்தர்களால் ஸ்ரீநரசிம்மர் சற்று உயர்வாக கொண்டாடப்படுகிறார். ஆனால் ஸ்ரீநரசிம்மர் ’உக்ராவதாரம்’ என்பதால் அவர் சாந்தமான நிலையில் இருப்பதை பூசிப்பதை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஸ்ரீநரசிம்மர் லக்ஷ்மியுடன் இருக்கும் பொழுது சாந்தமாக இருக்கிறார் என்பதால் இவரை ’ ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்’ என்று பூசனைச் செய்கிறார்கள். அதனால் ஸ்ரீநரசிம்மரை வழிபடுவது கொடுமையான தீயசக்திகளையும் அழிக்க வல்லது என்பது நம்பிக்கை. ஸ்ரீநரசிம்மரின் மற்றொரு சாந்த ஸ்வரூபம் யோக நிஷ்டையில் உள்ள ஸ்ரீயோக நரசிம்மர்.

 

 *திருக்கோயில்* *_அமைப்பு :_* 

 

ஸ்ரீயோக நரசிம்மர் சுமார் 750 அடி உயரமுள்ள 1305 படிகள் கொண்ட மலை மீது குடிகொண்டுள்ளார். கோயிலின் முக்கிய துவாரம் வடக்கு நோக்கியுள்ளது. பகவான் கிழக்கு நோக்கியுள்ளார். பெரிய மலையிலிருந்து கீழே இறங்கி சற்று தூரத்தில் சிறிய மலை ஒன்று உள்ளது அம்மலையின் மேல் ஸ்ரீயோக ஆஞ்சநேயருக்கான கோயில் அமைந்துள்ளது. 350 அடி உயரமும் 406 படிகள் கொண்ட மலைக் கோவிலாகும். மலையின் மீது அரங்கநாத ராமர் சக்கரத்தாழ்வார் ஆகியோர் சன்னதிகளும் தீர்த்தம் குளமும் உள்ளது. இக்கோயிலில் மேற்கு நோக்கி ஸ்ரீயோக ஆஞ்சநேயர் குடிகொண்டுள்ளார். ஸ்ரீஆஞ்சநேயர் ஸ்ரீயோக நரசிம்மரை பார்த்த வண்ணம் யோக நிலையிலுள்ளார். நான்கு திருகரங்களுடன் யோக நிலையில் அமர்ந்திருக்கும் ஆஞ்சநேயரின் மேல் இரு திருகரங்களையும் பகவான் ஸ்ரீயோக நரசிம்மரால் கொடுக்கப்பட்ட சங்கும் சக்ரமும் அலங்கரிக்கின்றன.

 

சன்னதியின் எதிரில் தெரியும் துவாரத்தின் வழி நோக்கினால் ஸ்ரீயோக நரசிம்மர் குடி கொண்டுள்ள கோயில் தெரியும். நித்யம் பகவானை தியானித்து யோக நிலையிலுள்ள ஸ்ரீயோக ஆஞ்சநேயரை கண் குளிர தரிசிக்கலாம்.

 

திருமகள் தாயாராக அருள்மிகு அமிர்தவல்லி தாயார் பெரிய மலையில் பெருமாளுக்கு அருகில் கிழக்கு முகமாக தனிசன்னதியில் காட்சி தந்து அருளுகிறார். 

 

அருள்மிகு அரங்கநாதர் பெருமானுக்கு இங்கு பால அரங்கநாதர் என்பது திருநாமம். பால அரங்கநாதன் கிடந்த கோலத்தில் அழகு வடிவத்தில் காட்சியளிக்கிறார். இச்சன்னதியில் உற்சவரான அருள்மிகு பால அரங்கநாதர் ஸ்ரீதேவி பூதேவி ஆகியோரோடு காட்சி தந்து அருளுகிறார். ராமர் சன்னதியில் அருள்மிகு இராமபிரான் லட்சுமணன் சீதையுடன் காட்சி தருகிறார். மேலும் சக்கரத்தாழ்வார் மற்றும் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் சன்னதிகளும் உள்ளன.

 

யோக நரசிம்மரின் உற்சவரான அருள்மிகு பக்தோசித சுவாமி மலை அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் தனி கோயில் கொண்டுள்ளார். ஆண்டுதோறும் சித்திரை மாதம் பத்து நாள் பிரம்மோற்சவம் இவருக்கு சிறப்பான முறையில் நடைபெறுகிறது . உற்சவர் அருள்மிகு பக்தோசித சுவாமி சுதாவல்லி அமிர்தவள்ளி என்னும் தனது இரு தேவியருடன் தனி கோயில் கொண்டுள்ளார் அமிர்த தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் ஆகியவை பக்தோசித சுவாமி கோயில் அருகில் உள்ளன.

 

அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் உப நாச்சிமார் உடன் கிழக்கு முகமாக நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார் பெரிய மலைக்கு சென்று சேவிக்க இயலாதவர்கள் இவருக்கு ஆராதனை செய்கின்றனர்

 

 *ஸ்தல வரலாறு:* 

 

இந்திரதூமன் என்னும் அரசர் ஒரு முறை தனது மனைவியுடன் திருமலை திருப்பதிக்குச் சென்று திருமலை திருவேங்கடமுடையானைச் சேவித்து தங்களுக்கு மோட்சம் வேண்டுமென்று பிரார்த்திக்க அதற்கு அவர் சோளிங்கபுரம் என்கிற திருகடிகைக் குன்றின் பெரியமலை மீது வீற்றிருக்கும் அருள்மிகு யோக நரசிம்ம சுவாமியிடம் சென்று வணங்கி வழிபட்டு உன்னுடைய போற்றினை பெறுவாயாக என்று அருள் கூர்ந்தார்.

 

அதன்படி இந்திரதூமன் மகாராஜன் தன்னுடைய ஷத்திரிய தர்மத்திற்கு விரோதமாக ஆயுதங்கள் செய்து நரசிம்மனை வழிபட்டார். அச்சமயம் திருக்கடிகை என்னும் படியான இது தன்டாகாருண்ய வனம் போல் காட்சியளித்தபடியால் ரிஷிகள் பகவானை வழிபட தவம் செய்து வருகிற சமயத்தில் நிகும்பன் என்னும் அரக்கனாலே துன்பப்பட்டு வந்தார்கள்.

 

இந்திரதூமன் ராஜா வந்தவுடன் அவரிடம் தங்களுடைய துயரத்தினை போக்க வேண்டும் என்று பிரார்த்திக்க அரசனும் தான் ஆயுதங்கள் செய்து விட்டபடியால் அரக்கருடன் போர் செய்ய இயலாது என்று கூற அதற்கு அவர்கள் மறுத்து உன்னுடைய ஷத்திரிய தர்மத்தை விட்டுவிட்டு வேறு தர்மத்தை எடுத்துக்கொள்வது பெரும் அபாயத்தை விளைவிக்கக் கூடியது.

 

ஆகவே நீ எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது உன்னுடைய தர்மமும் கடமையும் ஆகும் என்று தெரிவித்து விட்டார்கள் அன்று இரவு அரசனும் ரிஷிகளும் தனது சங்கல்பத்தை மாற்ற முடியாமலும் மிகவும் கலந்து நொந்தார்கள். எம்பெருமான் நேரில் சேவை கொடுத்து சங்கல்பத்தை ரிஷிகளுடைய பிரார்த்தனையும் சிறிய மலையில் தியானம் செய்து வரும் சிறிய திருவடிக்கு (அருள்மிகு யோக ஆஞ்சநேய சுவாமி) கார்த்திகை வெள்ளிக்கிழமை அன்று இந்திரதூமன் மகாராஜாவுக்கு சகாயமாக நீ யுத்தம் செய்து நிகும்பன் என்ற அரக்கனை மாய்த்து வர வேண்டியது என பணிந்து தனது சுதர்ஸன ஆழ்வாரை (சுக்கரம்) கொடுத்து அனுக்கிரகித்து அனுப்பி வைத்தார். அவ்வண்ணமே சிறிய திருவருடியும் அரக்கனை கொன்று அரசனுக்கு உதவியதாக ரிஷிக்கூட்டங்கள் மங்களத்தை செய்து வைத்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகும்.

 

ஆகவே ஞாயிற்றுக்கிழமை அன்று அருள் மிகு யோக ஆஞ்சநேய சுவாமி சங்கு சக்கரங்களை பெற்று ஸ்ரீ வைஷ்ணவ பரிபூர்த்தியை அடைந்ததாக சரித்திரம் கூறுகிறது. அந்த சக்கரத்தை சிறிய மலையில் உள்ள புஷ்பகரணியில் (குளம்) திருமஞ்சனம் செய்து அதை பரிக்ரஹித்தார். அந்த குளத்திற்கு இன்றும் சக்கர தீர்த்தம் எனப்பெயர் வழங்கப்பட்டுவருகிறது.

 

கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை சக்கர தீர்த்தத்தில் நீராடி படிக்கட்டுகளில் படுத்து விரதம் இருந்தால் அவர்களுக்க அருள்மிகு யோக ஆஞ்சநேயர் சொப்பணத்தில் காட்சி கொடுத்து விருப்பத்தை நிறைவேற்றுவதை இன்றும் காணலாம். கார்த்திகை மாதத்தில் ஒவ்வொறு ஆண்டும் வெள்ளி ஞாயிறு தினங்களில் பெரிய மலையில் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் அலங்காரம் மற்றும் உற்சவம் நடத்தப்படுகிறது. அதே போல் சிறிய மலையிலும் ஞாயிறு அன்று அருள்மிகு யோக ஆஞ்சநேயருக்கும் சிறப்பு திருமஞ்சனம் அலங்காரம் மற்றும் பிரார்த்தனைகள் உற்சவங்கள் விஷேசமாக நடத்தப்படுகிறது.

 

 *தீர்த்தம் பரிகாரம்:* 

 

தீராத வியாதி உள்ளவர்கள், பில்லி, சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி மலை மீது அமர்ந்து அருள் பாலிக்கும் யோக நரசிம்மரையும் யோகா ஆஞ்சநேயரையும் பிரார்த்தனை செய்வதால் நோய்கள் நீங்கப் பெறலாம் என்பது நம்பிக்கை.

 

 *நேர்த்திக்கடன்:* 

 

கல்கண்டு படைத்தல், வெல்லம் படைத்தல், வாழைப்பழம் தருதல், வேட்டி சேலை படைத்தல், தயிர்சாதம் செய்து பிரசாதம் படைத்தல், அபிஷேக ஆராதனைகள் ஆகியவை இங்கு முக்கியமான நேர்த்திகடன்களாக பக்தர்களால் கடைபிடிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை தோறும் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறும். திருமேனியில் சேர்க்கப்படும் பால், தயிர், தேன், சர்க்கரை முதலியவற்றைச் சேர்த்துப் பிசைந்து பஞ்சாமிர்தம் செய்து பிரசாதமாக வழங்கப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் எவரேனும் தாயாருக்கு பிரார்த்தனை கட்டணம் செலுத்தினால் உற்ஸவம் நடைபெறும். பெருமானுக்கு மண்டகப்படி செய்வதும் மண்டபம் எழுப்பியும் கட்டளை ஏற்படுத்தியும் உற்சவம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.

 

சோளிங்கர் தலத்தில் ஒரு நாழிகைக்கு வழிபாடு செய்தாலே போதும், 48 நாட்களுக்கு விரதம் இருந்து வழிபட்ட பலன் கிடைக்கும். நம்பிக்கையுடன் ஒரு முறை நேரில் சென்று ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை பிரார்த்தனை செய்து விட்டு வரவும்

🪷🪷🪷

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க