tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி

குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார் சடைமேல்

பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த

புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே!

 

 

மனிதரும், தேவரும் = மனிதர்களும், தேவர்களும்

மாயா, முனிவரும் = இறப்பில்லாத (இறவாத சிரஞ்சீவி பட்டம் பெற்ற முனிவர்களும். திருக்கடையூரை பொறுத்தவரை சிரஞ்சீவி பட்டம் பெற்றவர் மார்க்கண்டேயர் சிரஞ்சீவி பட்டம் பெற்றவர்)

 வந்து சென்னி = உன்னிடம் வந்து (சென்னி - தலை) தலை

குனிதரும் = வணக்கம் செய்யும்

சேவடிக் கோமளமே = சிவந்த திருவடிகளை உடைய கோமளமே

கொன்றைவார் சடைமேல் = கொன்றை மலர் அணிந்த சடையில்

பனிதரும் திங்களும் = குளிர்ச்சியை பொழியும் நிலவும்

பாம்பும் பகீரதியும் படைத்த = பாம்பும் ஆகாய கங்கையும் அணிந்த 

புனிதரும் நீயும் = புனிதரான சிவனும் நீயும்

என் புந்தி = என்னுடைய புத்தியில்

 

ஒரு பட்டியல் சொல்லும் போது, ஒரு முறை இருக்கிறது.

 

முதலில் சிறந்ததைச் சொல்லி, பின் சிறப்பு குறைவானதைச் சொல்ல வேண்டும்.

பேராசிரியரும், மாணவர்களும் வந்தார்கள் என்று சொல்ல வேண்டும்.

மாணவரைவிட பேராசிரியர் உயர்ந்தவர்.

ஒரு மேடையில் வணக்கம் சொல்லும் போது , அந்த விழாவிற்கு பல்கலைக் கழக பதிவாளர் வருவதாக இருந்தால் முதலில் பதிவாளரையும், பிறகு துறை தலைவரையும், பேராசிரியர்களையும், மாணவ செல்வங்களையும் சொல்ல வேண்டும்.

அதே விழாவிற்கு துணை வேந்தர் வந்தால் முதலில் துணைவேந்தரையும், பதிவாளரையும் (முதலாவது பட்டியலில் இருந்த பதிவாளர் இரண்டாவது இடத்திற்கு சென்றுவிடுவார்) பிறகு துறை தலைவரையும், பேராசிரியர்களையும், மாணவ செல்வங்களையும் சொல்ல வேண்டும். இது ஒரு நெறிமுறை.

ஆனால், இங்கே பட்டர்,

மனிதரும், தேவரும், மாயா முனிவரும் என்று சொல்லுகிறார். மனிதர்களுக்கு என்ன அவ்வளவு சிறப்பு? தேவர்களும், முனிவர்களும் இறைவனை வழிபடுவதையே தொழிலாக கொண்டவர்கள். மனிதர்களுக்கு ஆயிரம் வேலைகள் பிரச்சனைகள். அதற்கு நடுவில் வழிபாடும் செய்கிறார்கள் என்றால் அது சிறப்புத்தானே என்று அவர் நினைத்து இருக்கலாம்.

மனிதர்களும் , தேவர்களும் , இறவாத வரம் பெற்ற முனிவர்களும் வந்து உனது திருவடியில் தலை வணங்கி போற்றப்படும் கோமளமே. தனது சடையில் கொன்றை மலர் மாலையையும், குளிர்ச்சியை தரக்கூடிய நிலவின் கீற்றையும், பாம்பையும், கங்கை நதியையும் அணிந்த புனிதரான உனது கணவரும் எனது புத்தியில் எந்நாளும் பொருந்திஇருக்க வேண்டும் என வேண்டுகிறார்.  

நாம் கூட திருமண பத்திரிக்கையில் 'தம்பதி சமேதராய் வந்திருந்து வாழ்த்தியருள வேண்டும்" குறிப்பிடுவோம். இதன் மூலம் தம்பதியினரின் சிறப்பு அறியப்படுகிறது,  

சிவன் தந்து தலையில் நீரை தரக்கூடிய கங்கையை அணிந்தவராய் குறிப்பிடப்படுகிறார். நமக்கு அருவி போன்ற உயர்ந்த நிலையில் இருந்துதான் தண்ணீர் கிடைக்கின்றது. நமது வீட்டில் கூட மாடியின் உச்சியில்தான் தண்ணீர் டேங்க் அமைக்கின்றோம். அதற்க்கு 'ஓவர் ஹெட் டேங்க்' என சொல்கிறோம். பட்டர் சிவனின் தலை உச்சியில்தான் கங்கை நீர் பெருக்கெடுத்து வருகிறது என்கிறார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க