tamilnaduepaper
❯ Epaper

ஆடித் தபசு

ஆடித் தபசு
Join Whatsapp Channel Join Telegram Channel

சைவமும், வைணவமும் பிளவுபடக்கூடாது என்பதற்காக, அரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக இறைவன், ‘சங்கரநாராயணராக’ தோன்றிய அற்புதமான திருத்தலம், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம். இக்கோவிலில் ஆடி மாத பவுர்ணமியன்று உத்திராட நட்சத்திரத்தில் ஆடித்தபசு விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

 

ஆடித்தபசு

 

‘தபசு’ என்றால் ‘தவம்’ என்று பெயர். தற்போது அமைந்திருக்கும் கோமதி அம்பாள் சன்னிதி முன்பு, நடு மண்டபத்தில் நாகச்சுனை ஒன்று இருக்கிறது. இந்த நாகச்சுனை இருக்கும் இடத்தில் அந்த காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரு நாகர்கள் வசித்து வந்தனர். இதில் சங்கன் என்னும் நாகர், சங்கரனாகிய சிவபெருமான் மீதும், பதுமன் என்னும் நாகர் பாற்கடலில் பள்ளி கொண்டருளும் மகாவிஷ்ணு மீதும் அதீத பக்தி கொண்டிருந்தார்கள். இருவரும் சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்று தங்களுக்குள் வாதம் செய்து கொண்டனர். அது பற்றி அறிந்து கொள்வதற்காக பார்வதிதேவியிடம் சென்று முறையிட்டனர். அம்பாள் சிவபெருமானை வேண்ட, ஈசன் அம்பாளை பொதிகை மலை பகுதியில் புன்னை வனத்தில் தவம் செய்யும்படி கூறினார்.

 

அதன்படி அம்பாள் தற்போது சங்கரநாராயணர் கோவில் அமைந்திருக்கும் இடத்திற்கு வந்து தவம் செய்தார். அப்போது ஈசன் சங்கரநாராயணராக வந்து அம்பாளுக்கு காட்சி கொடுத்தார்.

 

அரியும் அரனும் ஒருங்கே இணைந்து ஓர் உருவில் காட்சி கொடுத்தனர். இந்தக் காட்சியை அம்பாளின் அருளால் சங்கனும், பதுமனும் தரிசித்து நற்பேறு பெற்றனர். சங்கரநாராயணரின் சிவனுக்குரிய வலது பாகத்தில், தலையில் கங்கை, பிறை நிலா, அக்னி, ஜடாமுடியுடன் கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் போன்றவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடைபிடிக்கிறான். அதே போல் மகாவிஷ்ணுவுக்குரிய இடது பாகத்தில் நவமணி கிரீடம், கையில் சங்கு, மார்பில் துளசி மற்றும் லட்சுமி மாலைகள் இவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான்.

 

இவ்வாறு தவம் செய்த அம்பாளுக்கு சிவபெருமான் சங்கரநாராயணராக திருக்காட்சி கொடுத்த மாதம் ஆடி மாதம் என்கிறது புராணம். இதைத்தான் ஆடித்தபசு என்று கொண்டாடுகிறோம்.

 

சங்கரன்கோவில் ஆலயத்தில் வீற்றிருக்கும் சங்கரநாராயணர் சன்னிதியில் காலை நடைபெறும் பூஜையில் துளசி தீர்த்தம் தருகிறார்கள். பகல், மாலை மற்றும் இரவு நேரப் பூஜைகளில் திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சங்கர நாராயணருக்கு வில்வமும், துளசியும் சாத்தப்படுகிறது. இங்கு சங்கர நாராயணருக்கு அபிஷேகம் கிடையாது. ஸ்படிக லிங்கமாக வெள்ளிப் பேழையில் உள்ள சந்திர மவுலீஸ்வரருக்குத் தான் அபிஷேகம் செய்கிறார்கள். இத்தல உற்சவருக்கே சிவராத்திரி மற்றும் ஏகாதசி நாட்களில் அபிஷேகங்கள் நடைபெறும். ஆடித்தபசு நாளில், இந்த உற்சவரே அம்பாளுக்கு சங்கர நாராயணராக எழுந்தருளி காட்சி தருகிறார். ஆலய வடக்குப் பிரகாரத்தில் சொர்க்கவாசல் உள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படும்.

 

ஆடித்தபசு விழா இத்தலத்தில் 12 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். அன்றைய தினம் காலையில் தங்கச் சப்பரத்தில் கோமதி அம்மன் எழுந்தருளி தபசு மண்டபம் வந்தருள்வாள். மாலை 4 மணிக்கு ஈசன், சங்கர நாராயணராக வெள்ளி ரிஷப வாகனத்தில், தெற்கு ரத வீதியில் உள்ள காட்சி மண்டப பந்தலுக்கு வருகை தருவார். தொடர்ந்து அம்பாளும் காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்வாள். அங்கு அம்பாள் தனது வலது காலை உயர்த்தி, இடது காலால் நின்றவாறு தலையில் குடம் வைத்து, அதை இரு கைகளால் பிடித்தபடி தபசுக் காட்சி அருள்வாள். மாலை 6 மணிக்கு ஈசன், சங்கர நாராயணராக அம்பாளுக்கு காட்சி தருவார். அப்போது பக்தர்கள், தங்கள் வயலில் விளைந்த பொருட்களான நெல், பருத்தி, கம்பு, சோளம், பூ, மிளகாய் போன்றவற்றை ‘சூறை விடுதல்’ என்ற பெயரில் அம்பாள் மீது வீசியெறிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

 

மீண்டும் தவக்கோலம்

 

பின்பு அம்மன் மீண்டும் தவக்கோலம் பூணுகிறாள். எதற்காக மீண்டும் தவம்? அம்பாளின் அண்ணன் மகாவிஷ்ணு, சிவபெருமானின் ஒரு பாதியில் வீற்றிருந்து சங்கர நாராயணராக உள்ளார். ஈசனின் ஒரு பாதியில் அண்ணன் இருப்பதால் ஈசனை எவ்வாறு மணப்பது?. எனவேதான் அம்மன் மீண்டும் ஈசனை வேண்டி சங்கரலிங்கமாக காட்சி அருள வேண்டுகிறாள். இரவு 11.30 மணிக்கு சுவாமி கோவிலில் இருந்து வெள்ளி யானை வாகனத்தில் புறப்பட்டு காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்கிறார். சரியாக இரவு 12 மணிக்கு ஈசன், கோமதி அம்மனுக்கு சங்கரலிங்கமாகக் காட்சி கொடுக்கிறார். பின் அம்பாள் ஈசனுக்கு திருமண மாலை மாற்றி மணந்து கொள்கிறார். பின்னர், சுவாமி அம்பாள் ஊஞ்சல் சேவை நடைபெறும்.

 

விழா தொடங்கியது

 

இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு விழா கடந்த 11-ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக, தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் 21-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை 9.30 ஸ்ரீ கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்கார பரிவட்டம் சாத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

 

தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு மேல் தங்கச்சப்பரத்தில் தவக்கோலத்தில் கோமதி அம்மன் தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டகப்படியில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 6.05 மணிக்கு மேல் சிவபெருமான் அரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் சங்கர நாராயணசுவாமியாக ரிஷப வாகனத்தில் கோமதி அம்மனுக்கு தபசு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 11.45 மணிக்கு மேல் சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் கோமதி அம்மனுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

 

அரவிந்தன் தஞ்சை

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க