உலக மக்களை இன்னல்களிலிருந்து காப்பதற்காக அம்பாள் சக்தியின் உருவாக அவதரித்த தினம் ஆடிப்பூரம். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் அவதரித்த நாள் என்ற சிறப்பு மிக்க நாள்.
• சிவாலயங்களில் மட்டுமல்லாமல், பெருமாள் கோவில்களிலும் கொண்டாடப்படுவது ஆடிப்பூரம்.
• ஆண்டாள், உமாதேவி அவதரித்த அற்புத நாள்.
ஆடி மாதத்தில் வரக்கூடிய பல்வேறு விசேஷங்களில் முக்கியமான திருவிழாவாகப் பார்க்கப்படுவது ஆடிப்பூரம். இந்த விழா ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுகிறது. அம்மன்களுக்கு உரிய திருநாளாகவும், அம்மன் அவதரித்த நாளாகவும் நம்பப்படுகிறதுஆடிப்பூரம் அம்பாள் விசேஷம் :
ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நன்னாளில் உமாதேவி அவதரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.உலக மக்களை இன்னல்களிலிருந்து காப்பதற்காக அம்பாள் சக்தியின் உருவாக அவதரித்த தினம் ஆடிப்பூரம்.
இந்த ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாமல், வைணவ (பெருமாள்) ஆலயங்களிலும் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படக்கூடிய விழாவாகும்.திருமால் தான் எல்லாம் என வாழ்ந்தவர்களும், திருமாலின் புகழை எட்டுத்திக்கும் பரப்பியவர்கள் தான் ஆழ்வார்கள். அப்படிப்பட்ட ஆழ்வார்கள், பல்வேறு பகுதியில் அமைந்துள்ள திருமாலின் பெருமைகள், திருமாலின் லீலைகளைப் பாடி வழிபட்டனர்ஊரில் பல பெருமாள் ஆலயங்கள் இருந்தாலும், ஆழ்வார்களால் பாடல்பெற்ற தலம் என்றால் கூடுதல் விசேஷமாகப் பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஆழ்வார்கள் திருமால் மீது பாடப்பட்ட பல்வேறு பாடல்களை வைணவ நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. திருமாலின் பெருமைகளைப் பாடியதோடு, அவரையே மணக்க விரும்பியவர் ஆண்டாள் நாச்சியார்.ஆண்டாள் வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண் என்ற பெருமையைப் பெற்றவர்.
ஆடிப்பூர வழிபாடு பலன்கள் :
திருமணமாகாத பெண்கள் இந்த நாளில் ஆண்டாளை வழிபட்டால், அவர்களுக்கு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமண யோகம் உண்டாகும் என்ற நம்பப்படுகிறது.
மகான்கள் அவதாரம் :ஆடி மாத பூரம் நட்சத்திரத்தன்று அம்பாள், ஆண்டாளுக்கு உரிய தினம்.
இந்த ஆண்டின் ஆடிப்பூரம் 2024 ஆகஸ்ட் 7, புதன்கிழமை அன்று கொண்டாடப்படும். அனைவரும் மகிழ்ச்சியுடன், நம்பிக்கையுடன், அம்மனை வழிபட்டு, இறையருளைப் பெற வாழ்த்துக்கள்!பண்டிகையின் சிறப்பு நிகழ்வுகள்
ஆடிப்பூரத்தின் போது, தமிழகத்தில் உள்ள பல அம்மன் கோவில்களில் பண்டிகை மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். அலங்காரங்களுக்கு பலவகையான பூக்கள், பழங்கள், மற்றும் குங்குமம் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. பக்தர்கள் தங்களின் விரதங்களை கடைபிடித்து, அம்மனை பிரார்த்திக்கின்றனர்.
எனவே அற்புதமான இந்த ஆடிப்பூரம் விரதம் இருந்து அம்மனை வழிபடுபவர்களுக்கு சீக்கிரத்தில் திருமண வரம் கைகூடும். தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனிச் சிறப்பாகும். எனவே உலக உயிர்கள் அனைத்தையும் தன்னிலிருந்து உருவாக்கும் அன்னைக்கு இந்த ஆடி பூரம் நாளில் வளைகாப்பு சடங்கு நடத்தப்படுகிறது. மயிலாப்பூர் கற்பகவல்லி அம்மன், திருவாரூர் கமலாம்பாள், நாகப்பட்டினத்தில் நீலாயதாட்சி அம்மன், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை, ஆகிய தலங்களில் உள்ள அம்மனுக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும். இரவில் பல்லாயிரக்கணக்கான வளையல்களை கோர்த்து வளைகாப்பு நடத்தப்படும். அம்மன் கோயில்களில் ஆடி பூர தினத்தில் நடத்தப்படும் வளைகாப்பு சடங்கிற்கு வளையல் வாங்கிக் கொடுத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். வளைகாப்பு முடிந்ததும் அன்னையை அலங்கரித்த அனைத்து வளையல்களும் வளையல் பிரசாதமாக பெண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
ஆடி மாதத்தில் வருகின்ற ஆடிபூரம் நட்சத்திர தினம் அம்பாளுக்குரிய சிறப்பு தினமாகும். சித்தர்களும், முனிவர்களும் இந்த நன்னாளில் தான் தங்களுடைய தவத்தை தொடங்குவார்கள் என ஆன்மீக அறிஞர்கள் கூறுகின்றனர். ஆடி மாதத்தில் வரும் பூரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். இந்த சுப தினத்தில் தான் சக்தியாகிய உமாதேவி அவதரித்ததாக சிவபுராணம் கூறுகிறது. ஆடிப்பூர நாளில் தான் அன்னை பூமாதேவியே ஸ்ரீ வில்லிபுத்தூரில் துளசி மாடத்தில் ஆண்டாளாக அவதரித்தார் எனவும் கூறப்படுகிறது. நாராயணனாகிய ஸ்ரீனிவாசனின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த போது, பூமாதேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்து ஆன்மீகத்தில் ஆண் – பெண் சமத்துவத்தை நிலைநாட்டினாள்.
•
பூரம் நட்சத்திரம் என்பது சுக்கிர பகவானுக்குரிய நட்சத்திரமாக இருக்கிறது. சுக்கிரனின் அருட்கடாட்சம் முழுமையாக கொண்ட பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இனிமையாக பேசுவார்கள். அனைவரையும் நேசிப்பார்கள். இவர்களும் பிறரால் நேசிக்க படுவார்கள். பூரம் சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரம். சுக்கிரனின் அம்சம் கொண்ட தெய்வம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர். எனவே தான் ஆடிப்பூரத்தில் பிறந்த ஆண்டாள் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை மனதில் கணவராக வரித்து, அவரையே மணந்தாள். காதல் கைகூடவும், மனதிற்கு பிடித்த நபரை கை பிடிக்கவும் காதல் கிரகமான சுக்கிரபகவானின் அருள் வேண்டும். சுக்கிரன் அருள் இருந்தால் மட்டுமே காதலில் வெற்றி, கணவன் – மனைவி ஒற்றுமை, தாம்பத்ய சுகம் போன்றவை உண்டாகும்.
-
எனவே அற்புதமான இந்த ஆடிப்பூரம் விரதம் இருந்து அம்மனை வழிபடுபவர்களுக்கு சீக்கிரத்தில் திருமண வரம் கைகூடும். தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனிச் சிறப்பாகும். எனவே உலக உயிர்கள் அனைத்தையும் தன்னிலிருந்து உருவாக்கும் அன்னைக்கு இந்த ஆடி பூரம் நாளில் வளைகாப்பு சடங்கு நடத்தப்படுகிறது. மயிலாப்பூர் கற்பகவல்லி அம்மன், திருவாரூர் கமலாம்பாள், நாகப்பட்டினத்தில் நீலாயதாட்சி அம்மன், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை, ஆகிய தலங்களில் உள்ள அம்மனுக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும். இரவில் பல்லாயிரக்கணக்கான வளையல்களை கோர்த்து வளைகாப்பு நடத்தப்படும். அம்மன் கோயில்களில் ஆடி பூர தினத்தில் நடத்தப்படும் வளைகாப்பு சடங்கிற்கு வளையல் வாங்கிக் கொடுத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். வளைகாப்பு முடிந்ததும் அன்னையை அலங்கரித்த அனைத்து வளையல்களும் வளையல் பிரசாதமாக பெண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
•
இந்த ஆடி பூரம் தினத்தில் பூமாதேவியே திருவில்லிபுத்தூரில் ஆண்டாளாக அவதரித்து ஸ்ரீரங்கம் ரங்கநாதரை மணந்து அவருடன் ஐக்கியமானாள். எனவே இந்த தினத்தில் திருவரங்கம், திருவில்லிபுத்தூர் போன்ற கோயில்களுக்கு சென்று பெருமாளையும், ஆண்டாள் தாயாரையும் வழிபடுவதால் பிரிந்த தம்பதியர் ஒற்றுமை உண்டாகும். சஷ்டாஷ்டக தோஷம் இருக்கும் தம்பதியர் தோஷம் நீங்கி மகிழ்ச்சியான இல்லறம் அமையும். தொழில், வியாபார போட்டி, பண விவகாரங்கள் போன்றவற்றால் பிரிந்த கூட்டாளிகள், நண்பர்கள் ஒற்றுமை ஏற்பட ஆடிப்பூர நாளில் ஆண்டாளை வணங்க மீண்டும் ஒன்றிணைவர்கள். திருவரங்கம், திருவில்லிபுத்தூர் கோயில்களுக்கு செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபட்டாலும் மேற்கூறிய பலன்களை பெறலாம்.
ஆண்டாள் ஸ்லோகம்:
அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்
அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:
தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நா
தந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:
கோதா ஸ்துதி
பொருள்:
ஆண்டாள் தேவியே, உனக்கு வந்தனம். சாத்திரங்கள் அனுமதிக்காத அபசாரங்கள் பலவற்றை நெடுங்காலமாக நாங்கள் செய்து வருகிறோம். ஆனாலும் எங்களுக்கெல்லாம் தங்கள் கணவரான அரங்கத்துப் பெருமாள் திருவருள் புரிகிறார். தவறு செய்யும் எங்களுக்கும் பெருமாள் அருளும் காரணம் என்னவாக இருக்கும்? அது, நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிருப்பதால்தான். அது மட்டுமல்லாமல் வீணையின் நாதம் போன்ற உன் குரலால் தீந்தமிழில் பிரபந்தமும் பாடித் துதித்திருக்கிறாய். அதனாலேயே உன் குழந்தைகளாகிய எங்களை பெருமாள் தண்டிக்காமல் விட்டிருக்கிறார். அதற்காக ஆண்டாள் தேவியே உனக்கு மீண்டும் வந்தனம்.
அனுப்புனர்: R.Radhika, Annanagar, Chennai-40
•