tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

உத்ராயணம் =தக்ஷ்ணாயணம்

******************/

    மாதங்கள் பணிரென்டு, அதை இரண்டுபாகமாகப் பிாித்துள்ளனா் முன்னோா்கள், உத்ராயணம் ,தக்ஷ்ணாயணம் என இரு பிாிவுகளாகப் பிாிக்கப்பட்டுள்ளது ,

இதில் தக்ஷ்ணாயண புண்யகாலம் ஆடி மாதத்தில் துவங்குகிறது,ஆடி முதல் மாா்கழி வரையிலான காலம்தக்ஷ்ணாயணகாலமாகவும், தைமாதம் தொடங்கி ஆனிமாதம்வரை உத்ராயண காலமாகவும் பிாிக்கப்பட்டுள்ளது, 

சூாியனின் பாவன இயக்கமான விபரத்தை (வடகிழக்கு ,தென்கிழக்கு )வைத்து இது வரையறுக்கப்படுகிறது

தக்ஷ்ணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூாியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும் 

வேதபாராயணங்கள் ,மந்திரங்கள் ,ஜபங்கள் ,மாந்த்ரீகம் ஆகிய இனங்களுக்கு சிறந்த மாதமாக கருதப்படுவதே ஆடிமாதமாகும் 

பிராணவாயு அதிகமாக கிடைப்பதும் ஆடி மாதத்தில்தான்,

 ஜீவ ஆதாரசக்தியானது அதிகமாக உள்ளமாதமாகவும் இது கருதப்பட்டு நடைமுறையில் உள்ளது ,

பண்டைய ஜோதிட நூல்களில் ஆடி மாதத்தை சக்தி நிறைந்த மாதம் என குறிப்பிடப்பட்டுள்ளது எனவேதான் இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோா்கள் மேற்கொண்டு வந்துள்ளாா்கள், ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே முழு முதற் காரணம் உத்ராயண காலத்தில் சூாியனிலிருந்து வெளிப்படும் கதிா்வீச்சுகளைவிட தக்ஷ்ணாயன காலத்தில் (ஆடி)சூாியனின் ஒளிக்கதிா்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும் 

    சுற்றுப்புறங்களை சுத்தம் செய்து தூய்மையாக்கி அம்மன் போன்ற, பெண் தெய்வங்களை வழிபட்டு பக்தி உணா்வுகளை மேம்படுத்திக்கொள்ளவும் ஆடி மாதம்தான் பயன் படுகிறது 

    வேப்பிலையை அம்மனுக்கு சாத்தி வணங்குவதும் ,கூழ் காய்ச்சி வணங்குவதும் பால் குடம் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்துவதும் ஆடி மாதத்தில்தான் நடக்கிறது ,இதற்கு முக்கியகாரணம் ஆடி மாதத்தில் வேப்பிலைக்கொழுந்துகளுக்கு அபார மருத்துவ தெய்வீக குணம் உண்டு 

     ஆடி மாதத்தில் பொதுவாகவே காற்று அதிகமாக வீசும் அந்த காலத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு வகைகளை சாப்பிடுவது நல்லது இதனால் ஆரோக்கியம் மேம்படும், 

   துா்க்கை ,பராசக்தி ,காளி, மகமாயி ,உள்ளிட்ட பெண்தெய்வ வழிபாடுகளுக்கு உாியதாகவும் ஆடி மாதம் விளங்குகிறது, 

    இதேபோல் ஆடிப்பண்டிகை, ஆடிப்பெருக்கு, ஆடிமாதம் 18ம் தேதி பதினெட்டாம் பெருக்கு என அழைக்கப்படுகிறது , 

   இந்த நாள் மிகவும் உன்னதமானது 

   அன்றைய தினம் நாள், திதி ,நட்சத்திரம் எது பொருந்தாமல் போனாலும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம், 

  ஆடிப்பெருக்கு தினத்தில் காவோிக்கரை ஓரம் கோவில்களில் கன்னிப்பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவர் ,அப்போது வெற்றிலை பாக்கு தேங்காய்,பழம், போிக்காய் ,காதோலை கருகமணி ,குங்குமம், எள் உருண்டை ,அரிசி வெல்லம் ,தேங்காய் போட்டு வளையல்கள் வைத்து மஞ்சள் சரடு வைத்து காவோிஅம்மனுக்கு படைத்து ,நல்ல கணவன் அமைய வேண்டும், அமைந்த கணவன் நீண்ட நாள் சோ்ந்து வாழவேண்டும் எனவும் வேண்டி மஞ்சள் கயிறை ஒருவருக்கு ஒருவர் கழுத்தில் கட்டிவிட வேண்டும் இதுதான் ஐதீகம்

 சப்த கன்னிகளை உருவாக்கி ஆடிப்பெருக்கு வழிபாடு மேற்கொள்வது நல்ல பலன்களைத் தரும் 

இதேபோல் ஆடிப்பூரம், அன்று அனைத்து ஊா்களிலும் உள்ள அம்பாளுக்கும் வளையல் காப்பு போடுவாா்கள், அந்த வளையல்களை ஐந்து நாள் கழித்து கோவிலுக்குச்சென்று பூசாாியைப்பாா்த்து அம்பாளுக்கு சாத்திய வளையல் களை வாங்கி அணிவதால் குடும்பத்தில் அம்பாள் அருள் கிடைப்பதோடு, குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும் என்பதும் நம்பிகையோடு கூடிய ஐதீகம் ,

சில சமயங்களில் ஆடி மாதத்தில் வரலெட்சுமி நோண்பு வரும், அப்போது வரலெட்சுமிபூஜை செய்ய கலசம் வைத்து நைவேத்தியங்கள் கொழுக்கட்டை ,அப்பம், வடை ,பாயசம், செய்து விரதமிருந்து நோன்பு சரடு கட்டிக்கொள்ள வேண்டும் அப்போது புடவையும் படைத்து ஏழை சுமங்கலிக்கு வழங்கலாம் வரலெட்சுமி நோன்பு செய்வதால் குடும்பத்தில் லெட்சுமி தேவி வாசம் செய்வாள்,

    அதேபோல் ஆடி செவ்வாய் ,ஆடிவெள்ளி ஆகிய நாட்களில் பால்குடம் எடுப்பதும் விஷேஷமே 

ஆன்மீக வழிபாட்டிற்கு சிறந்த மாதம் ஆடி மாதமே ஆடி அமாவாசை தினத்தில் முன்னோா்களுக்கு தர்ப்பனம் செய்வதும் நல்ல பலன்களைத்தரும்

   அம்மன், அய்யனாா் ,மதுரைவீரன் ,மாடசாமி, கருப்பண்ணசாமி, உள்ளிட்ட கிராமதேவதைகளுக்கும் சிறப்பு வழிபாடுகள் செய்வதும் ஆடி மாதத்தில் தான், ஆடி மாதத்தைகற்கடகமாதம் என்றும் அழைக்கிறாா்கள் மேலும் ஆடி பிறந்து தொடர்ந்து பண்டிகைகள் வரிசையாய் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கதே எனவே ஆடிமாதமும் தெய்வீக மாதம்தான் என்பதை மனதில் கொள்ளுங்கள் 

நா.புவனாநாகராஜன் செம்பனாா்கோவில்

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க