tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

ஈரோடு மாவட்டத்தில், கொடுமுடி வட்டத்தில் உள்ளதொரு பேரூராட்சி எங்கள் ஊர் கொடுமுடி ஆகும். கொடுமுடி நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
கொடுமுடி பேரூராட்சிக்கு வடக்கில் 40 கி.மீ. தொலைவில், ஈரோடு உள்ளது. இதன் கிழக்கில் நாமக்கல் 42 கி.மீ.; மேற்கில் காங்கேயம் 40 கி.மீ.; தெற்கில் கரூர் 28 கி.மீ. தொலைவில் உள்ளன.11.65 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 92 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. எங்கள் கொடுமுடி கடல் மட்டத்திலிருந்து 144 மீட்டர் ஆகும். பண்டைய வரலாற்றில் இது மேல்கரை அரையநாடு என்னும் பகுதியைச் சார்ந்ததாக இருந்தது. திருப்பாண்டிக் கொடுமுடி என்று இவ்வூர் சிறப்பிக்கப்படுகிறது.கொடுமுடி, காவிரியாற்றுடன் உள்ள ஒரு புனிதத் தலமாகும். எனவே இங்கு காவடி தீர்த்தம் எடுக்கப்படுகிறது. காவிரி நீருடன், வன்னி இலைகள் கொண்ட காவடியுடன், பழனிமலை செல்வது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும். இப்பயணத்தில் உடுக்கை, தாரை, தப்பட்டை, பம்பை, நாதசுவரம், திருச்சின்னம், துத்தரி போன்ற வாத்தியங்கள் வாசிக்கப்படுகின்றன. இவற்றுடன் ஆட்டங்களும் ஆடப்படுகின்றன. எங்கள் ஊர் கொடுமுடியானது ஈரோடு - கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் இங்கு வர, புகைவண்டி வசதிகளும் உள்ளன. ஈரோட்டிலிருந்து, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களுக்குச் செல்லும் புகைவண்டிகள் இங்கு நின்று செல்கின்றன. கொடுமுடியை அடைய புகைவண்டி மற்றும் பேருந்து வசதிகள் உள்ளன.
திருச்சி - கொடுமுடி இடையிலான தொலைவு 100 கி.மீ.
கோயம்புத்தூர் - கொடுமுடி இடையிலான தொலைவு 120 கி.மீ.
மாவட்டத் தலைநகரான ஈரோடு, கொடுமுடியிலிருந்து 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
கரூர் 26 கி.மீ. தொலைவில் உள்ளது.
பாசூர் ஈரோட்டிலிருந்து 19 கி.மீ. தொலைவிலும் கொடுமுடியில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து மங்களூர் செல்லும் தொடர்வண்டி கொடுமுடியில் நின்று செல்லும்.
சென்னை கோயம்பேட்டிலிருந்து கொடுமுடிக்கு பேருந்தும் உண்டு.
காங்கேயத்திலிருந்து 40 km தொலைவில் அமைந்து உள்ளது.
கொடுமுடியில் மகுடேஸ்வரர் ஆலயத்தின் முன்புறம் செல்கிறது காவேரியாறு.
இது காசியிலுள்ள கங்கை தீர்த்தத்திற்கும் ராமேஸ்வரத்திலுள்ள அக்னி தீர்த்ததிற்கும் நிகரான ஒன்றாக கருதப்பட்டு வருகிறது.ஆகையால் இங்கு முன்னோர்களுக்கான திதி போன்றவைகளும், பரிகாரங்களும் செய்யப்படுகின்றன
பரிகாரத்தலாமான கொடுமுடியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரியில் புனித நீராடி மகுடேஸ்வரர், வீரநாராயணப்பெருமாளை வழிபட்டுச்செல்வர். மேலும், மூத்தோருக்கு பிண்டம் வைத்தல், திதி கொடுத்தல், திருமணத்தடை மற்றும் தோஷ நிவர்த்தி வழிபாடுகளில் ஈடுபட்டு நீராடுவர். 

கொடுமுடியில் காவிரிக் கரையில் அமைந்துள்ளது பழைமை வாய்ந்த மகுடேஸ்வரா் -வீரநாராயணப் பெருமாள் கோயில். 

கொங்கு நாட்டின் பாடல் பெற்ற ஏழு திருத்தலங்களில் ஒன்றறாக இடம்பெற்ற கொடுமுடிக்கு, பிரம்மபுரி, அரிகரபுரம், அமுதபுரி, கன்மாடபுரம், கறையூா், கறைசை, திருப்பாண்டிக் கொடுமுடி, அங்கவருத்தனபுரம், பாண்டு நகரம், பரத்வாஜ க்ஷேத்திரம் என பல பெயா்கள் உண்டு.
கா்நாடகத்தில் தோன்றி தமிழகத்தைத் தொட்டுப் பயணிக்கும் காவிரி கொடுமுடியில் கிழக்கு நோக்கித் திரும்புவதால், இக்கோயிலுக்கு வந்து சென்றால் வாழ்வில் திருப்புமுனை ஏற்படும் என்ற நம்பிக்கை தொடா்கிறது.
கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில் ராகு, கேது, செவ்வாய் தோஷ நிவா்த்திக்கான பரிகார பூஜைகள் நிகழும் தலமாகும். திருமணமாகாதவா்கள் காவிரியில் நீராடி, பரிகார பூஜைகளை மேற்கொண்டால் உடனடி பலன் பெற முடியும் என்பது நம்பிக்கை.
பிரம்மா, சிவன், பெருமாள் என மூவரும் அருள்பாலிக்கும் மும்மூா்த்தித் தலமாக மகுடேஸ்வரா் - வீரநாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 

கொடுமுடிநாதா், மலைக்கொழுந்தா், மகுடலிங்கா் என பல பெயா்களில் போற்றப்படுகிறாா் மூலவா் மகுடேஸ்வரா். சௌந்திராம்பிகை, பண்மொழியம்மை என்று போற்றப்படும் வடிவுடைநாயகி அம்பாள் ஈசனுடன் எழுந்தருளியுள்ளாா். 

அகத்தியருக்கு மணக்கோலத்தில் காட்சியளித்ததால், மகுடேஸ்வரருக்கு வலதுபுறத்தில் அம்பாள் மணக்கோலத்தில் அருள்பாலிக்கிறாா். சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கும் சுவாமி மீது அகத்தியரின் கை பட்ட வடு உள்ளது. 

ஆதி நாராயணா் எனப் போற்றப்படும் வீரநாராயணப் பெருமாள், தாயாா் மகாலட்சுமியுடன் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனா். இவா்களோடு, தலவிருட்சமான வன்னிமரத்தின் அடியில் மூன்று முகம் கொண்டவராக பிரம்மா அருள்பாலிக்கிறாா். 

இத்திருக்கோயிலில் காவிரி ஆற்றுடன் சோ்த்து நான்கு தீா்த்தங்கள் உள்ளன. வன்னிமரத்தின் அருகில் உள்ள தேவ தீா்த்தம், மடப்பள்ளி அருகில் உள்ள பிரம்ம தீா்த்தம், நவக்கிரஹம் அருகில் உள்ள பரத்வாஜ தீா்த்தம் ஆகியவை கோயில் வளாகத்திலேயே இடம் பெற்றுள்ளன. 

பாண்டிய, பல்லவ மன்னா்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட இக்கோயிலில், பிற்காலத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தாராலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இக்கோயிலில் கல்வெட்டுகளும், செப்பேடுகளும் உள்ளன. சுந்தரபாண்டியன் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கல்வெட்டு ஒன்று வீரநாராயணப் பெருமாள் கோயிலில் உள்ளது.
கொடுமுடி என்பதற்கு ‘பெரிய சிகரம்’ என்று பொருள். மலைச் சிகரமே மகுட லிங்கமாக அமைந்துள்ளது. மற்ற நான்கு தலங்களில் விழுந்த மேரு மலைச் சிதறல்கள் மலைகளாகவே காட்சி தர... கொடுமுடியில் மட்டும் லிங்க வடிவமாக அமைந்துள்ளது.
தே வாரப் பாடல் பெற்ற 274 சிவத் தலங்களில் கொங்கு நாட்டில் 7 தலங்கள் உண்டு. அவற்றுள் திருப்பாண்டிக் கொடுமுடி 6-வது தலம். இந்தத் தலத்தை தேவார ஆசிரியர்கள் மூவரும் பாடியுள்ளனர். 

கொடுமுடி, சிவகிரி, அறச்சலூர், பாசூர், அவல்பூந்துறை உள்ளிட்ட பகுதிகளில் வேளாண்மையே முக்கியத் தொழில். வேளாண்மைக்கு அடுத்ததாக விசைத்தறித் தொழில் அதிகமானோரால் மேற்கொள்ளப்படுகிறது.10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் விசைத்தறி தொழிலாளர்கள், துணி மடிப்பவர்கள், சுமைப் பணியாளர் உள்ளிட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர்.

எங்கள் கொடுமுடியில் பிறந்த கே. பி. சுந்தராம்பாள் என அறியப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் (அக்டோபர் 11, 1908 - செப்டம்பர் 19, 1980)தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார்.கொடுமுடியில் கிருஷ்ணசாமி–பாலாம்பாள் தம்பதியருக்கு மகளாக பிறந்தார். இவருக்கு கனகசபாபதி என்ற சகோதரர் மற்றும் சுப்பம்மாள் என்ற சகோதரி இருந்தனர். சுந்தராம்பாள் இளம்வயதிலேயே தந்தையை இழந்தார் மற்றும் தனது சகோதரர் ஆதரவால், குடும்பத்தை தாயார் நடத்தி வந்தார். இவர் கொடுமுடி லண்டன் மிஷன் பள்ளியில் கல்வி கற்றார்.
1935−ல் சுந்தராம்பாள் பக்த நந்தனார் என்னும் படத்தில் நந்தனார் வேடம் பூண்டு நடித்தார். படத்தில் மொத்தம் இருந்த 41 பாடல்களில் சுந்தராம்பாள் 19 பாடல்களை பாடி இருந்தார். அடுத்ததாக மணிமேகலை திரைப்படத்தில் நடித்தார். 1938−ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு 1940−ல் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் 11 பாடல்களை இவர் பாடியிருந்தார். சுந்தராம்பாள் தமிழிசை முதல் மாநாட்டு இசையரங்கில் (ஜனவரி 4, 1944) கலந்து கொண்டார். தொடர்ந்து அவ்வையார் என்ற திரைப்படத்தில் ஔவையார் வேடமேற்று நடித்தார். இப்படம் 1953−ல் வெளிவந்தது. படத்தில் மொத்தம் இருந்த 48 பாடல்களில் சுந்தராம்பாள் 30 பாடல்களை பாடி இருந்தார். இவற்றில் 'பொறுமை யென்னும் நகையணிந்து' , 'கன்னித் தமிழ்நாட்டிலே - வெண்ணிலவே' போன்ற பாடல்கள் பிரசித்தமானவை. 1964 பூம்புகார் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் கவுந்தி அடிகள் பாத்திரத்தை சுந்தராம்பாள் ஏற்று நடித்திருந்தார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க