tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சாமுண்டீஸ்வரி சப்த கன்னியர்களில் ஒருவர்.  ருத்திரனின் அம்சமாவார். இவர் வெற்றி தேவதை. எதிரிகளிடம் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ளஇவரை வழிபட வேண்டும். 

 

முன்னொரு காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்த திருநெல்வேலியில் வசுசேனன் என்ற மன்னன் இருந்தான்.  நீண்ட நாட்களாக குழந்தை கிடையாது. ஒரு நாள் தன் மனைவியோடு சென்று சிவபெருமானிடம் கண்ணீர் விட்டு தங்களுக்கு குழந்தை பாக்கியம் அருள வேண்டிக்கொண்டான்.

 

கருணை வடிவான அன்னை பார்வதி தேவி இறைவனிடம் 

பிள்ளையில்லா அந்த தம்பதியருக்கு அருள கேட்டுக்கொண்டாள்.புத்திரப்பேறு யாவர்க்கும் எளிதில் கிடைப்பதன்று.  அந்த நல்வினை இல்லாமல் இவர்களுக்கு கொடுப்பது விதி அல்ல என்று சிவபெருமான் பார்வதியிடம் சொன்னார்.  மீண்டும் அன்னை வலியுறுத்தவே, 'சரி நீ புத்திரியாக அவதாரம் செய் நாமே வந்து உன்னை மணந்து அருளுவோம்.  உமக்கு பணிவிடை செய்ய சப்த மாந்தர்களுள் சிறந்த சாமுண்டி இருக்கட்டும் என்று அருளினார்.  

 

ஒரு நாள் அரசனும் அரசியும் தாமிரபரணியில் நீராடும் போது தாமரைப் பூவில் சங்குருவாக தோன்றினாள் அம்பிகை. அரசன்  அதைக் கையிலேந்தி கரையேற அது ஒரு அற்புதமான பெண் குழந்தையாகக் கண்டான்.  பின்னர் மனைவியிடம் கொடுத்தான். இருவரும் சிவன் சன்னதிக்கு எடுத்து சென்று ஈசனுக்கு நன்றி சொல்லி விட்டு குழந்தையோடு அரண்மனைக்கு சென்று 'ராஜ ராஜேஸ்வரி' என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள்.சாமுண்டியும் ஒரு செவிலித் தாயாக வந்து குழந்தையை வளர்த்து வந்தாள்.

 

குழந்தையாக வந்த அம்பிகை எல்லா கலைகளையும் கற்று நன்றாக வளர ஆரம்பித்தாள். குறிப்பாக சதுரங்க விளையாட்டில் சிறந்து விளங்கினாள்.  யாராலும் அவளை ஜெயிக்க முடியவில்லை. குறிப்பிட்ட வயது வந்ததும் மகளுக்கு தகுந்த மணவாளனை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற கவலை பெற்றோருக்கு வந்தது. சதுரங்கத்தில் வெல்பவன் தங்கள் மகளுக்கு மாலை சூடுவான் என்று அறிவித்தார்கள். யாராலும் வெல்ல முடியவில்லை.  கவலையில் ஆழ்ந்த மன்னனை ஒரு தவசி வந்து சந்தித்து சிவதல யாத்திரை செல்லுங்கள் உங்கள் எண்ணம் நிறைவேறும் என்று சொன்னார். அதன்படி  தனது குடும்பத்துடன் பல தலங்களுக்கு சென்று கடைசியாக பூவனூர் வந்து சேர்ந்தார்கள். அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டார்கள்.அப்போது சித்த வேடத்தில் வந்த எம்பெருமான் தான் ராஜ ராஜேஸ்வரியுடன் சதுரங்கம் ஆட வந்திருப்பதாக சொன்னார்.  பின்னர் அவளோடு சதுரங்கம் ஆடி அம்பிகையை தோற்கடித்தார்.  என்ன செய்வது என்று திகைத்து நின்ற மன்னன் முன்பு சிவபெருமான் காட்சியளித்து அனைத்தையும் சொல்ல, மகிழ்ந்த மன்னன் அறிவித்தபடி திருமணம் நடத்தி வைத்தார்.  அம்பிகையை சதுரங்கத்தில் வென்றதால் இறைவன் சதுரங்க வல்லபநாதர்ஆனார். ராஜ ராஜேஸ்வரி அம்பிகையாக செவிலித் தாயாக வந்த சாமுண்டீஸ்வரிக்கு தனி சந்நிதி உருவானது.  இதுதான் பூவனூர் சாமுண்டீஸ்வரி வரலாறு.

 

இந்த கோயிலில் சாமுண்டீஸ்வரி சுவாமி சன்னதிக்கு எதிரில் வடக்கு முகமாக இருந்து தனி கோயிலாக அமைந்து விளங்குகிறது.  சாமுண்டீஸ்வரி என்ற பெயரில் அம்பாள் குடிகொண்டுஇருக்கும் கோயில்கள் அரிது. புராதனமான சாமுண்டீஸ்வரி கோயில் தமிழகத்தில் உள்ளது இங்கு மட்டும்தான். 

 

இந்த அம்மன் விசேஷ சக்தி கொண்டவள்.  இங்கு பெண்கள் பிரார்த்தனை சீட்டு கட்டி வேண்டிக் கொள்கிறார்கள். அந்த பிரார்த்தனை 90 நாட்களில் நிறைவேறும் என்பது நம்பிக்கை. கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, திருமணத் தடை, புத்திர பாக்கியம் ஆகியவற்றிற்கும் இந்த அம்மனை வழிபடுகிறார்கள். 

 

எலிக்கடி, பிற விஷக் கடிகளால்  ஏற்படும் நோய்களால்  பாதிக்கப் படுபவர்கள் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.  இத்தலத்தில் தான் அகத்தியர் போகருக்கு விஷக்கடிக்கான மூலிகை சிகிச்சை முறைகளை போதித்துள்ளார்.  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விஷக்கடி நிவர்த்தி செய்ய அகத்தியர் பெருமானின் ஆசியோடு சாமுண்டீஸ்வரி சந்நிதி முன்பு மூலிகை வேர் ரட்சை கட்டப்படுகின்றது. 

 

சாமுண்டீஸ்வரியை குலதெய்வமாக கொண்டவர்கள் தமிழகத்தில் பல பகுதிகளில் உள்ளனர். மேல் நாடுகளிலும் உள்ளனர்.  அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல் காது குத்தல் வைபவங்களை இங்கு வந்து நடத்தி செல்கின்றனர்.சித்திரை மாதத்தில் பத்து நாட்கள் உற்சவம் நடைபெறும்.  கன்னி பொங்கல் அன்று கன்னி கப்பரை என்ற விழா நடைபெறும்.

 

மாதாமாதம் பௌர்ணமி பூஜை சாமுண்டீஸ்வரி சந்நிதி முன்பு நடைபெறும். கடம் வைத்து யாகம் நடத்துவார்கள். அதன் பிறகு கடம் கோவிலை வலம் வரும். அம்பாளுக்கு அபிஷேகம் நடந்து சிறப்பு பூஜை செய்வார்கள். பெளர்ணமி ஒரு அற்புதமான நாள் அந்த நாளில் அம்பாள் வழிபாடு செய்வது நல்லது. அதுவும் சாமுண்டீஸ்வரி வழிபாடு இன்னும் சிறப்பு.  தீய சக்திகள் அனைத்தும் நம்மை விட்டு விலகும். நம் சங்கடங்கள் தீர்ந்து வாழ்க்கை பிரகாசமாகும்.

                                                               ===

 

-திருமாளம் எஸ்.பழனிவேல்

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க