tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

எங்கள் குலதெய்வமான திருப்புடைமருதூரில் உள்ள நாறும்பூநாதர் கோவில் ‘கடையார்ச்சுனம்’ என்று போற்றப்படுகிறது. இந்த ஆலயமானது சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு கோமதி உடனாய நாறும்பூநாதர் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார். 

தாரகா சக்தி பீடமாக உள்ள இத்தலத்தின் அம்பிகைக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நடராசரின் சிலை ஓம் வடிவ திருவாசியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள யோக தட்சிணா மூர்த்தி இரு கால்களையும் மடக்கி அமர்ந்தபடி உள்ளார் 

இங்குள்ள இறைவன் நாறும்பூநாதர் சுயம்பு மூர்த்தி ஆவார். இவர் கருவறையில் கருவூர் சித்தரின் குரலுக்கு செவி சாய்த்த கோலத்தில் இடப்புறம் சாய்ந்த திருமேனியராய் காட்சித் தருகிறார். இவரின் மேனியில் மானின் காலடி பட்ட தழும்பும், வீரர்கள் கோடரியால் வெட்டிய தழும்பும் உள்ளது. 

திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் 28 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது வீரவநல்லூர். இங்கிருந்து பிரியும் சாலையில் 7 கிலோமீட்டர் தூரம் சென்றால், திருப்புடைமருதூர் திருத்தலத்தை அடையலாம். செவி சாய்த்துக் கேட்கும் ஈசன் திருப்புடைமருதூர் நாறும்பூநாதரை தரிசிப்பதற்காக, கருவூர் சித்தர் வந்தார். அப்போது தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதனால் அவரால், ஆற்றைக் கடந்து மறுகரையில் இருந்த கோவிலுக்குச் செல்ல முடியவில்லை. அதனால் இருந்த இடத்திலேயே மனமுருக ஈசனை வேண்டினார். ஈசனை மனதில் நினைத்து பாடல் ஒன்றையும் பாடினார். அந்தப் பாடலை ரசித்து கேட்க விரும்பிய ஈசன், தனது இடது காதில் கை வைத்து, ஒரு புறம் சாய்வாக திரும்பினார். பின்னர் கருவூர் சித்தரிடம், “என்னை நினைத்தபடியே ஆற்றில் இறங்கி நடந்து வருக” என்றார். கருவூராரும் அப்படியே செய்து, ஆற்றைக் கடந்து சிவனை தரிசித்தார். பின்னர் ஈசனிடம், “ஐயனே.. எக்காலத்திலும் இங்கு வரும் பக்தர்களின் பிரார்த்தனையை செவி சாய்த்து கேட்டு, அதனை நிறைவேற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். அதன்படியே இன்றளவும் இத்தல ஈசன், பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு, அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை கேட்க செவிசாய்த்தபடி இருப்பதாக சொல்லப்படுகிறது. 

உள் திருச்சுற்றில் 63 நாயன்மார்கள் சன்னதி உள்ளது. கருவூர் சித்தரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக நாயன்மார்கள் வரிசையில் கருவூர் சித்தரையும் நிறுவியுள்ளனர். 

ஜாதகரீதியாக கெடுபலன் உள்ளவர்கள், இந்த பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டால், அவர்கள் நிலை நல்லவிதமாக மாறும் என்பது ஐதீகம். இதில் கலந்துகொள்ளும் பக்தர்கள், தங்களின் வேண்டுதல்களை ஒரு தாளில் எழுதி சமர்ப்பிக்கும் வகையில், பிரார்த்தனைப் பெட்டி வைக்கப் பட்டுள்ளது. ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் சிரமப்படாமல் இருக்க, வீரவநல்லூர் மற்றும் முக்கூடல் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து திருப்புடைமருதூர் ஆலயத்திற்கு மதியம் 2 மணி முதல் பேருந்துகள் இலவசமாக இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

திருக்கோவிலின் கோபுரத்தில் பல மூலிகை வர்ணம் பூசிய ஓவியங்களும் மிகுந்த கலை நுட்பம் உடைய வேலைப்பாடுகளும் கொண்ட மர சிற்பங்களும் அமையப்பட்டுள்ளது. 

சூரியன் வழிபடும் தலமாகவும் இது அமைந்துள்ளது. மாசி மாதம் முழுவதும் சூரிய ஒளி சுவாமியின் சிரசில் பட்டு தொடர்வது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மகாசிவராத்திரி அன்று காலை 6.15 க்கு மேல் 7.00 மணிக்குள் இந்த மாபெரும் அதிசயம் இத்திருக்கோயிலில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. 

திருப்புடைமருதூர் திருக்கோவில் அமைந்த ஆற்றங்கரையில் உள்ள தீர்த்த கட்டத்திற்கு, ‘சுரேந்திர மோட்ச தீர்த்தம்’ என்று பெயர். இந்திரனும், அவனது மனைவி இந்திராணியும் இந்த இடத்தில் தவம் செய்து, தங்களுடைய தோஷம் நீங்க வேண்டி, இந்த தீர்த்த கட்டத்தில் நீராடியதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. ஐந்து நிலைகளையும், 11 கலசங்களையும் கொண்டதாக, இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் திகழ்கிறது.
கோபுரத்தின் தளங்களில் ஏராளமான சுவர் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், கந்தபுராணம், தசாவதாரம் போன்றவற்றின் காட்சிகளும், கோவில் தல வரலாறு குறித்த காட்சிகளும், சீன நாட்டு வணிகர்களின் வருகை பற்றிய தகவல்களும் வரையப்பட்டுள்ளன. 

இந்த ஆலயத்தில் சிவபெருமான், ‘திருநாறும்பூநாதர்’ என்ற பெயரில் லிங்க உருவத்தில் காட்சி தருகிறார். இவரது திருமேனி சற்றே சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. அம்பாளின் திருப்பெயர் ‘கோமதி.’ மிகச்சிறந்த வரப்பிரசாதியாகவும், பெருங்கருணைக் கொண்டவளாகவும் விளங்கும் இந்த அன்னை, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில், இத்தல அம்பாள் தன்னுடைய உச்சி முதல் பாதம் வரை ருத்ராட்சத்தை தாங்கியபடி வீற்றிருப்பது விசேஷமான அமைப்பாகும். 

பெரும்பாலும் சிவாலயங்களில் சிவலிங்கம் தான் சுயம்புமூர்த்தியாக இருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில், சிவலிங்கம், அம்பாள் இருவருமே சுயம்பு மூர்த்தியாக இருப்பது அரிதிலும் அரிதான சிறப்புக்குரியது. காசியில் பாயும் கங்கையானது, தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பாய்வதைப் போல, திருப்புடைமருதூரில் பாயும் தாமிரபரணியானது, தெற்கில் இருந்து வடக்காக பாய்கிறது. எனவே இந்த தலத்தை ‘தென்னக காசி’ என்றும் அழைக்கிறார்கள்.


வீரமார்தாண்டவர்மன் என்ற மன்னன், ஒரு முறை மருத வனமாக இருந்த இந்தப் பகுதிக்கு வேட்டையாட வந்தான். அப்போது அவனது கண்ணில் ஒரு மான் தென்பட்டது. அந்த மானை நோக்கி மன்னன் அம்பு எய்தான். அந்த மான் அங்கிருந்த ஒரு மருத மரத்திற்குள் சென்று மறைந்தது. மன்னனும் அந்த மரத்தின் அருகில் சென்று, அதில் இருந்த பொந்துக்குள் உற்று நோக்கினான். அப்போது அதிசயிக்கும் விதமாக அந்த மான், சிவலிங்கமாக மாறி, இந்த ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் நாறும்பூநாதராக மன்னனுக்கு காட்சியளித்தது. இதையடுத்து வீரமார்த்தாண்டவர்மன், இந்தப் பகுதியில் இறைவனுக்கு ஆலயம் எழுப்பியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.


மருத மரத்தில் சிவபெருமான் எழுந்தருளிய திருத்தலங்கள், ‘அர்ச்சுன தலங்கள்’ என்று போற்றப்படுகின்றன. ‘அர்ச்சுனம்’ என்றால் ‘மருதமரம்’ என்று பொருள். அந்த வகையில் அர்ச்சுன தலங்களில் ‘தலையார்ச்சுனம்’ என்று அழைக்கப்படுவது ஸ்ரீசைலம். இது தேவார வைப்புத் தலம் ஆகும். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில், ‘இடையார்ச்சுனம்’ என்று அழைக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூரில் உள்ள நாறும்பூநாதர் கோவில் ‘கடையார்ச்சுனம்’ என்று போற்றப்படுகிறது. 

தைப்பூசம் 10 நாட்கள், ஆனி உத்திரம், ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி கந்தசஷ்டி, பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன

 

-பே.ராமலட்சுமி 
க/பெ 
அ.பேச்சியப்பன்
174/135, மீனாட்சி திரையரங்க சாலை, சந்தன மாரியம்மன் கோயில் அருகில், இராசபாளையம் 626117

ராசி பலன்

வியாபாரம் தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். சமூக நிகழ்வுகளால் மனதளவில் சில மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். சவாலான செயல்களையும்... மேலும் படிக்க

இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். வெளியூர் பணி வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். சமூகப் பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். எதிர்ப்பாராத சில இடமாற்றம்... மேலும் படிக்க

மனதளவில் குழப்பங்கள் தோன்றி மறையும். சந்தேக உணர்வுகளால் மகிழ்ச்சி இன்மை ஏற்படும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். சூழ்நிலை அறிந்து... மேலும் படிக்க

ஆன்மிகப் பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வியாபார முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான தருணம் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதிற்கு... மேலும் படிக்க

பணி நிமித்தமான முயற்சிகள் கைகூடும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். வாகனப் பயணங்களில் விவேகம் வேண்டும். பங்குதாரர்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். முன் கோபத்தால் சில விரயங்கள் நேரிடும். மற்றவர்கள் கூறும்... மேலும் படிக்க

பொழுதுபோக்கு செயல்பாடுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உணர்ச்சிப்பூர்வமாக செயல்படுவதை குறைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் எண்ணங்களை... மேலும் படிக்க

குடும்ப பெரியோர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மறைமுகமான போட்டிகளை சமாளிப்பீர்கள். உடலில் இருந்துவந்த பிரச்சனைகள் அகலும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். வாகனம் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வீடு கட்டுவது சார்ந்த... மேலும் படிக்க

எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனதளவில் தைரியம் உண்டாகும். காலி மனை மூலம் ஆதாயம் அடைவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தபால் துறைகளில்... மேலும் படிக்க

செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்வீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபார நெருக்கடிகள் விலகும். உத்தியோகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். குடும்பத்தில்... மேலும் படிக்க

இனம்புரியாத சில சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். புதுவிதமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் புதிய வாய்ப்புகள் உருவாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்காலம்... மேலும் படிக்க

அவசரம் இன்றி எதிலும் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளால் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உடல்... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்கள் வழியில் ஆதரவான வாய்ப்புகள் உருவாகும். வியாபார பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சபை பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும்.... மேலும் படிக்க