tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

தருமபுரி என்றாலே அதியமான் ஒளவைக்கு கொடுத்த நெல்லிக்கனிதான் ஞாபகத்திற்கு வரும். அதற்கடுத்தாற்போல் தருமபுரியின் அடுத்த சிறப்பு அதியமான்கோட்டை தட்ஷிணகாசி காலபைரவர் கோவில்தான். இந்தியாவில் காலபைரவருக்கு என்று சிறப்பான இரண்டு இடங்களில் கோவில்கள் உள்ளன. 

 

   முதலில் காசியில் உள்ளது. இரண்டாவதாக தருமபுரி அதியமான்கோட்டையில் உள்ள தட்ஷிணகாசி காலபைரவர் கோவிலாகும். ஆதியும் இவரே.. அந்தமும் இவரே.. மொத்தம் 64 வகையான பைரவர் உள்ளனர். அதில் முதன்மையான பைரவர் உன்மந்திர பைரவர். அந்த பைரவர்தான் இங்கு வீற்றிருக்கின்றார்.

 

   தருமபுரியை அதியமான் என்ற சிற்றரசர் ஆண்டு வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. என்னதான் அரசர் என்றாலும் மன்னருக்கு பயமும் பதற்றமும் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருந்துள்ளது. தனக்கு பகை ஏதும் நேராமல் இருக்க என்ன செய்யலாம் என்று தனது அமைச்சர்களையும் ராஜகுருக்களையும் கலந்து ஆலோசித்தார். 

 

   பிறகு முடிவாக தனக்கு தெய்வ சக்தி இருந்தால் நல்லது என்றும் அந்த தெய்வசக்தி காலபைரவர்தான் என்றும் முடிவெடுத்தார்.

 

   சிவன் ஆலயங்களில் ஈசானிய மூலையில் நாய் வாகனத்துடன் இருக்கும் கால பைரவர்தான் தனக்கு துணையாக இருக்க முடியும் என்று எண்ணி காலபைரவருக்கு ஓர் ஆலயம் ஏற்படுத்த விரும்பினார்.

 

   தனது ராஜகுரு, அமைச்சர்களை காசிக்கு அனுப்பி காலபைரவர் சிலையை எடுத்து வர சொன்னார். அவர்கள் வருவதற்குள்ளாக அதியமான்கோட்டையில் ஆலயம் கட்டும் பணியை தொடங்கினார் அதியமான்.

 

   கோவில் வேலை முடிவதற்குள்ளும் காலபைரவரின் விக்கிரகம் வருவதற்குண்டான நேரமும் சரியாக இருந்தது. பிறகு கட்டிய ஆலயத்தில் காலபைரவரை பிரதிஷ்டை செய்தார் அதியமான். 

 

    காலபைரவரின் கருவறையில் நவக்கிரகங்களின் திருவடிகளையும் வடித்தார். நவக்கிரகங்களின் ஆற்றல் கோவிலுக்குள் இருக்க வேண்டும் என்று எண்ணிதான் காலபைரவரின் சன்னதிக்குள்ளேயே நவக்கிரகங்களை அதியமான் வடித்ததாக கூறப்படுகிறது.

 

   அதியமான் தனது நாட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பிரதிஷ்டை செய்யப்பட்ட காலபைரவரின் கரத்தில் போர்வாள் இடம்பெற்றிருக்கும்.

 

    ஆலயத்தில் அதியமானின் ஆட்சி முறையும் மக்களின் அன்றாட நடைமுறைகளையும் சிற்பங்களாக காணலாம். காசிக்கு அடுத்தபடியாக தனியாக காலபைரவர் இங்கு பக்தர்களுக்கு காட்சி தருவதால் இந்த ஆலயத்தை முக்தி ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.

 

    தருமபுரி மட்டுமல்லாது கேரளா கர்நாடகா மாநில மக்களும் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். 

 

  ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மாதந்தோறும் வரும் தேய்பிறை அஷ்டமி அன்று காலை கணபதி, லட்சுமி ஹோமமும், அஷ்டமி நாளில் அஷ்ட பைரவ ஹோமம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

 

  அன்று நள்ளிரவு 1008 கிலோ மிளகாய் மற்றும் 108 கிலோ மிளகு கொண்டு சத்ரு சம்ஹார ஹோமமும் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.

 

     தட்ஷிணகாசி காலபைரவருக்கு பூசணி தீபம் ஏற்றி வழிபட்டால் எதிரிகளின் தொல்லைகளில் இருந்து தப்பிப்பதுடன் நினைத்த காரியம் முக்தியடையும் என்றும் நம்பப்படுகிறது.

 

அதியமான் மன்னரால் 9ம் நூற்றாண்டில் இக்கோவில் கட்டப்பட்டது. இது 1200 ஆண்டுகள் பழமையான கோவிலாகும். 

 

   அதியமான்கோட்டை தட்ஷிணகாசி காலபைரவரை ஒருமுறையேனும் வழிபட்டால் நினைத்த காரியத்தில் முக்தி கிடைக்கும்.

 

தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் சாலையில் 7 வது கி.மீட்டரில் அதியமான்கோட்டை அமைந்துள்ளது. அடிக்கடி பேருந்து வசதி, ஆட்டோ வசதி உள்ளது.

 

     - வெ.சென்னப்பன், அரூர், தருமபுரி 

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க