tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

கொங்கு மண்டலம் கோவை மாவட்டம் அன்னூரில் அமைந்துள்ள

மன்னீஸ்வரர் திருக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது இந்த இடம் வள்ளி வனமாக இருந்தபோது வேடர்கள் கிழங்கு பறித்து உணவாக உண்டு வாழ்ந்து வந்தார்கள் அன்னி என்ற வேடன் உணவுக்காக பூமியில் கிழங்கு தோண்டிய போது கோடாரியில் மண்ணை வெட்டிய இடத்தில் பெரும் சத்தம் கேட்டது அருகில் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடிவந்தனர் அங்கே சுயம்பு லிங்கவடிவில் சிவபெருமான் இருந்தார் மண்ணிலிருந்து கட்டி இழுக்க முயற்சித்தார்கள் ஆனால் வெளியே வரவில்லை அருகில் இருந்த சேர மன்னனிடம் செய்தியை தெரிவிக்க வள்ளி வனத்திற்கு மன்னர் வந்தார் லிங்கத்தை சங்கிலியால் கட்டி யானையில் இழுக்க முயற்சித்தும் வரவில்லை அப்போது 

இடியுடன் அசரீரி இவ்விடத்தில் இறைவன் கோயில் கொள்ள இருப்பதாக தெரிவித்து சுயம்புலிங்கமாக சிவபெருமான் காட்சியளித்தார் ஆலயம் கட்ட அசரீரி சொன்னது வேடன் கோடாலியால் வெட்டியதையும் மன்னர் சங்கிலியால் கட்டி இழுத்ததையும் இறைவன் மன்னித்து அருள் புரிந்தார் இதனால் இத்தலம்  

மன்னீஸ்வரர் திருப்பெயரில் அமையப் பெற்றது இவ்வூர் வேடன்

அன்னியன் பெயரில் அன்னியூர் என்று அழைக்கப்பட்டது தற்போதும் மருவி அன்னூர் என்று இப்போது அழைக்கப்படுகிறது இறைவன் கைலை மலையில் இருப்பது போல் சுயம்புவாக காட்சியளிக்கிறார் இதுபோல் தமிழகத்தில் வேறு எந்த கோவிலிலும் இல்லை தென்காளகஸ்தி மேற்றலை தஞ்சாவூர் என்று போற்றப்படுகிறது அருந்தவ செல்வி அம்மன் ஆலயம் 1937 இல் கட்டப்பட்டது அன்றிலிருந்து அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரர் என்று அழைக்கப்பட்டது மேலும் விநாயகர், முருகர், சூரியன், சந்திரன், சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், ஞானபைரவர், சனீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன் என்று தனித்தனி சன்னதிகள் உண்டு 63 நாயன்மார்களுக்கும் சிலை வைக்கப்பட்டு உள்ளது 2004 ஆம் ஆண்டு ஏழு நிலை ராஜகோபுரம் குடமுழுக்கு நடத்தப்பட்டது கார்த்திகை நாளில் முருகர் சிறிய தேரில் கோவில் பிரகாரத்தில் வலம் வருவார் சிவன் ராத்திரி, அன்னாபிஷேகம், குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும் 2000ம் ஆண்டு முதல் புதிய தேர் திருமுருகன் அருள் நெறி கழகம், பொதுமக்கள் சார்பாக அமைக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் மிகச் சிறப்பாக கொடியேற்றத்துடன் துவங்கி மன்னிஸ்வரர் அருந்தவ செல்வி அம்மன் தேரில் பவனி வர ஆயிரக்கணக்கான மக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து சிறப்பாக தேர் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது வரும் 10 -1 -2025, தேதியில் 25 ஆம் ஆண்டு தேர் திருவிழா விமர்சையாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது அனைவரும் வருக ..வருக.. இறையருள் பெறுக இக்கோயில் சிறப்பு இங்கு 21 தீபம் ஏற்றி 21 முறை கோவிலை சுற்றி வந்தால் முன் ஜென்ம பாவ தோஷங்கள் நீங்கும் கோவை இல் இருந்து அன்னூர் வர 30 கிலோமீட்டர் தூரம் ஆகும் அன்னூர் பேருந்து நிலையத்திற்கு அருகே கோவில் உள்ளது

 

 

பொன்விழி அன்னூர்அருள்மிகு அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரர்

- பொன்விழி அன்னூர்

ராசி பலன்

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் காணப்படும். பொன், பொருட்ச்சேர்க்கை சிலருக்கு உண்டாகும். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். நண்பர்களால் வருமான வாய்ப்புகள் உண்டாகும்.... மேலும் படிக்க

தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சமூகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள்... மேலும் படிக்க

இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் மறைமுகமாக சில இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். பயணங்கள் மூலம் புதிய... மேலும் படிக்க

அரசுப் பணிகளில் அனுகூலம் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். கடன் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். சேமிப்பு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும்.  நிலையான வருமானம்... மேலும் படிக்க

உயரதிகாரிகள் மூலம் ஒத்துழைப்புகள் ஏற்படும். குழந்தைகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். உல்லாச பயணம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தன வரவு மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். உடன் இருப்பவர்களால் புதிய... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். நீண்ட நாள் சேமிப்பு திட்டங்கள் பற்றிய எண்ணங்கள் உண்டாகும். பேச்சுக்களில் விவேகமும், பொறுமையும் வேண்டும். பெரியோர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத... மேலும் படிக்க

எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். சகோதரர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில்நுட்ப கருவிகளால் சில... மேலும் படிக்க

தடைகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற பாராட்டுக்கள் கிடைக்கும். பொன், பொருட்ச்சேர்க்கை உண்டாகும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். பேச்சு வன்மையால் காரிய சித்தி ஏற்படும். கணவன், மனைவிக்கு இடையே... மேலும் படிக்க

கலை பணிகளில் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிர்காலம் குறித்த சில முடிவுகளை எடுப்பீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி... மேலும் படிக்க

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதில் புது விதமான எண்ணங்களும் ஆசைகளும் உருவாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் சாதகமான சூழல்கள் ஏற்படும். பொழுதுபோக்கான விஷயங்களில் ஈடுபட்டு மனம்... மேலும் படிக்க


நண்பர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். கணிதம் சார்ந்த துறைகளில் வாய்ப்புகள் மேம்படும். விவசாயப்... மேலும் படிக்க

வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கற்பனை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை... மேலும் படிக்க