tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

திருவண்ணாமலை மாவட்டம் ,வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், சட்டு வந்தாங்கல் ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ நவசக்தி துர்க்கை அம்மன் கோயில் எழுந்தருளி உள்ளது.

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் சிறிய அளவில் இருந்ததாக கூறப்படும் இக்கோயில் தற்பொழுது பிரசித்தி பெற்ற வடக்கு பார்த்த வாயில் கொண்டு கட்டப்பட்டுள்ள கோயிலில் குடி கொண்டிருக்கும் துர்க்கை அம்மன் வேண்டியவருக்கு வேண்டிய அருள் தந்து நிறைவேற்றி வைக்கும் சக்தி உள்ளதாக நம்பப்படுகிறது.

இக்கோயிலுக்கு செய்யாறுலிருந்தும், ஆற்காட்டிலிருந்தும், காஞ்சிபுரத்திலிருந்தும் பயணித்து ராந்தம் மெயின் ரோட்டில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பிரசித்தி பெற்ற நவசக்தி துர்க்கை அம்மன் கோயில்.

இத்திருக்கோயிலுக்கு வருகை தந்து அம்மனிடம் பிள்ளை வரம் கேட்டு பெறுவோரும் ,நீண்ட நாள் திருமணம் ஆகாதோர் விரைவில் திருமணம் முடித்தும், சுப காரியங்களுக்கான பத்திரிகைகள் அம்மன் மடியில் வைத்து பூஜை செய்தும், காது குத்தல் நிகழ்ச்சி ,திருமண நிகழ்ச்சி உள்ளிட்ட பல சுப நிகழ்வுகள் இக்கோயிலில் நடந்து வருகிறது.

அருள்மிகு நவசக்தி துர்க்கை அம்மன் கோயில் ராந்தம்-ஆற்காடு செல்லும் வழியில் பிரதான சாலையில் சட்டு வந்தாங்கல் கோயில் வரவேற்பு நுழைவு வாயில் உள்ளது. அங்கிருந்து வானிய தெரு வழியாக சென்று ,குளக்கரை தெரு முடியும் இடத்தில் குளம் அருகில் கோயிலை அடையலாம்.

வேறு எங்கும் இல்லாத அளவில் வடக்கு பார்த்த வாயில் கொண்டுள்ள அம்மன் நவ சக்தி கொண்டவளாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் உள் பிரகார மூலவர் சன்னதியில் அம்பாள் பெரிய அளவில் நாக வாகனத்தில் சூலாயுதத்துடன் வண்ண சிலையாக
ஓங்காரமாக வீற்றிருக்கின்றார். இதற்கு முன் அம்மன் சிரசாக அருள் பாலிப்பதாக நிறுவப்பட்டுள்ளது.

உட்புற கோயில் வாயில் அருகில் அவற்றை சுற்றி வரும் போது தென்மேற்கு திசையில் மகிஷாசுரவர்த்தினி உருவம் அழகாக சுவற்றில் வரையப்பட்டுள்ளது. கோயிலின் கிழக்கு புறம் கரக ஜோடிப்பு அறையும், பக்கத்தில் மழைக்காலங்களில் பயன்படுத்த சமையல் அறையும் உள்ளது.

இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோயிலில் அர்ச்சராக எம் .பாபு என்பவர் உள்ளார். இவர் கடந்த 36 ஆண்டுகளாக இக்கோயிலில் பூஜை செய்து வருவதாக கூறப்படுகிறது.

தினசரி காலை பூஜையும் ,மாலை ஆராதனையும், நடைபெறுவது வழக்கம். ஆடி மாதம் ,பொங்கல் திருவிழா நாட்களில் சிறப்பு அபிஷேகம் ஆராதனைக்கு பின் உற்சவர் அம்மன் திருவீதி உலா நடைபெறுவது வழக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது.

நூற்றாண்டுக்கும் மேலாக இருக்கும் நவசக்தி துர்க்கை அம்மனை தரிசிக்க சென்னை ,வேலூர், பாண்டிச்சேரி, உள்ளிட்ட மாநகரிலிருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து வணங்கி மகிழ்ந்து போவது அவர்களுக்கு அம்மன் மூலமாக நடந்தேறிய நல்ல நிகழ்வுகளை காட்டுவதாக தெரிய வருகிறது.

கோயில் அர்ச்சகரான பாபு என்பவர் தமது அனுபவத்தை கூறியதாவது, தான் ஏழு வயதில் இருந்தே இக்கோயில் சிறிது அளவில் இருக்கும் போது வந்து சென்று பின்னர் குடியிருக்க வீடு இன்றி இவ்வூருக்கு வருகை தந்ததாகவும் ,பின்னர் இக்கோயிலில் பூசாரியாக சேர்ந்த பின்னர் தொகுப்பு வீடு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மெத்தை வீடு கட்டும் வாய்ப்பு  அம்மன் அருளால்தான் கிடைத்துள்ளது. திருமணம் நடந்து நீண்ட நாள் குழந்தை பாக்கியம் இன்றி பின்னர் குழந்தை பேறு பெற்று தன்னிறைவுடன் வாழ்க்கை இருப்பதாக தமது சொந்த அனுபவத்தைபெருமிதத்துடன் குறிப்பிடுகின்றார்  கோயில் பூஜாரி பாபு.

சட்டு வந்தாங்கல் மட்டுமின்றி அருகாமையில் உள்ள கிராமங்களில், பல்வேறு நகரங்களில்,  மாநிலங்களில் வசிப்பவர்களுக்கு குலதெய்வமாக அருள்மிகு நவசக்தி துர்கை அம்மன் விளங்குகின்றார்.

அருள்மிகு நவசக்தி துர்க்கை அம்மனிடம் கோரிக்கை வைத்து நிறைவேறிய பின்னர் நேர்த்திக்கடன் செலுத்துவது மரபாக உள்ளது என்று பக்தர்களும், பொதுமக்களும் தெரிவிக்கின்றனர். கோயில் சிறப்பு அம்சமாக வடக்கு திசை நோக்கி அருள் பாலிக்கும் நவசக்தி துர்க்கை அம்மனை வழிபடுவோம், அருள் பெற்று நலத்துடன் வளம் பெறுவோம்.

எறும்பூர் கை. செல்வகுமார்,
செய்யாறு.

ராசி பலன்

உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். அரசு செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். உடன் பிறந்தவர்கள் மூலம் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றங்கள் உருவாகும்.  தவறிப்போன சில பொருட்கள் மீண்டும்... மேலும் படிக்க

எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். தேவையில்லாத சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். எண்ணங்களை வெளிப்படுத்தும் போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதை குறைத்துக்... மேலும் படிக்க

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். கலைப் பணிகளில் இருப்பவர்களுக்கு பொருளாதாரம் மேம்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உருவாகும். இன்சூரன்ஸ் துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் காணப்படும். உயர் பொறுப்பில்... மேலும் படிக்க

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பழக்கவழக்கத்தில் சில மாற்றம் ஏற்படும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகங்களும், நட்புகளும் கிடைக்கும். புதிய வியாபாரம் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். எதையும் சமாளிக்கும்... மேலும் படிக்க

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு காரியங்களில் அலைச்சல்கள் ஏற்படும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். புதுவிதமான கற்பனைகள் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

வீடு மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உயரதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்துகொள்ளவும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு செயல்பாடுகளில் இருந்துவந்த... மேலும் படிக்க

திறமைகளை வெளிப்படுத்துவதில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள்.... மேலும் படிக்க

முயற்சியில் அலைச்சலும் அனுபவமும் அதிகரிக்கும். உயரதிகாரிகள் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு சுபிட்சம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய வியாபாரம் தொடங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில... மேலும் படிக்க

வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் வருகையால் மனதளவில் சில மாற்றம் ஏற்படும். கடன் சார்ந்த செயல்களில் பொறுமை காக்கவும். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள்... மேலும் படிக்க

கலகலப்பான பேச்சுக்கள் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். வெளியூர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். வழக்கு செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். நிர்வாகத் துறைகளில் மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும்.... மேலும் படிக்க

சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். எதையும் எதிர்கொள்ளும் மனஉறுதி மேம்படும். கல்விப் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். வெளியூர் பயணங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். பயனற்ற... மேலும் படிக்க

மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் சாதகமான சூழல் காணப்படும். கடன் பிரச்சனைகள் குறையும். வருமான ஆதாரங்களை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய... மேலும் படிக்க