tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

எங்கள் குலதெய்வம் திருக்குற்றாலநாதர்

திருக்கோயில் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தின் பேரருவியின் அருகில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும்.திருகுற்றாலநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

இக்கோயில் பிறகோயில்களைப்போல சதுர அல்லது நீண்டசதுரமாக அமையாது சங்கு வடிவில் அமைந்து இருப்பது தனிச்சிறப்பாகும்.

இறைவன் - குற்றாலநாதர் - திரிகூடநாதர்

இறைவி - குழல்வாய் மொழியம்மை

 

 

இக்கோயிலில் குற்றாலநாதர், குழல்வாய்மொழி சன்னதிகளும், செண்பக விநாயகர், அம்பல விநாயகர். ஆறுமுக நயினார். தட்சணாமூர்த்தி, கன்னி விநாயகர். சந்திரன். வான்மீகிநாதர். சம்புகேஸ்வரர், அண்ணாமலைநாதர். திருமூலநாதர், ராமலிங்கர், சுப்பிரமணியர், சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், கைலாசநாதர், துர்க்கை, பராசக்தி, சைலப்பர், வல்லப விநாயகர், நன்னகர பெருமாள், பாபநாசர்-உலகம்மாள், நெல்லையப்பர்-காந்திமதியம்மாள், மணக்கோலநாதர், நாறும்பூநாதர், சகஸ்ரலிங்கம், பால்வண்ணநாதர், சொக்கலிங்கர்-மீனாட்சி, சாஸ்தா, மதுநாதேஸ்வரர்-அறம்வளர்த்த நாயகி, சோமலிங்கர், அகஸ்தியர், வாசுகி, மகாலிங்கம், சங்கரலிங்கம், காசிவிஸ்வநாதர், பெரிய ஆண்டவர் சாஸ்தா, சிவாலய முனிவர், பைரவர்உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர், கோயில் கல்வெட்டு போன்றவை உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

 

 

திருஞான சம்பந்தர் தேவார பதிகம் 

 

"வம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர்வேங்கைக்கொம்பார் சோலைக் கோலவண் டியாழ்செய் குற்றாலம்அம்பானெய்யோ டாடலமர்ந்தான் அலர்கொன்றைநம்பான் மேய நன்னகர் போலும் நமரங்காள்." 

 

சிவ தலங்களுள் பஞ்சசபைகளில் இது சித்திரசபை எனப்படும். 

 

குற்றாலநாதர் மூலவரின் வடதிசையில் அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றான தரணிபீடம் எனப்படும் பராசக்தி பீடம் சிறுகோயிலாக உள்ளது. இது சிவன் சிற்பரையின் மந்திர சக்திகள் அடங்கிய ஆலயம். இங்கு பராசக்தி அரி, அயன், அரன் மூவரையும் பயந்தாள். இவள் சன்னிதானத்தில் தானுமாலயப் பூந்தொட்டில் ஆடிக்கொண்டே இருக்கிறது

 

 

திருமால் சிவன் ஆனது திருவிளையாடல் புராணம் 

 

கயிலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயந்தது. இறைவன் அகத்தியரை நோக்கி தென்திசைக்கு சென்று வடதிசைக்கு சமனாய் பொதிகையில் வாழக்கடவாய் என ஆணையிட்டார். 

 

அப்போது முனிவர் இறைவனின் திருக்கல்யாண வைபவத்தயும் திருநடனத்தையும் காண இயலாதே என வருந்த இறைவன் திரிகூடமலையின் மகிமையை கூறி அங்கு விஷ்ணுவாயிருந்த தம்மை சிவலிங்கமாக்கி மகுடாகமப்படி பூசித்து வழிபட தம் கல்யாண வைபவத்தையும் நடனத்தையும் கானலாம் என் கூறி அனுப்பி வைத்தார். 

 

அகத்தியரும் அவ்வாரே தென்திசை சென்று வைணவர் வேடம் பூண்டு கோயிலுள் சென்று விஷ்னுவை வேதமந்திரத்தால் சிவலிங்கமாக்கி வழிபட்டார், அன்று முதல் இக்கோயில் சிவதலமாக உள்ளது என்பது புராண வரலாறு கூறுகின்றது. 

 

வைணவர்கள் விஷ்ணு மூர்த்தியை கானாது திகைத்து அகத்தியரை நிந்தித்தனர். முனிவர் அவர்களிடம் கோயிலின் தென்மேற்கு மூலையில் வைத்து பூசைசெய்யுங்கள் அரியும் சிவனும் ஒன்றே வேறுபாடு காட்டாதீர்கள் என உரைத்தார். 

 

முத்தனே முளரிக்கண்ணா மூலமென்றழைத்த வேழப்பத்தியி னெல்லைகாகும் பகவனெ திகிரியாளாகத்தனே யருள்சூற்கொண்டகந்தரக் கருப்பினானேநத்தணி செவியகோல நாடுதற் கரியநம்பிஎன்று சிவனுக்கும் விஷ்னு வுக்கும் பொதுப் பெயர்களைச் சொல்லி பாடி கோயிலுள் சென்றனர்.

அகத்தியர் திருமாலை சிவனாக்க தன் கைகளால் தொட்டதால் சிவலிங்கத்தின் தலைப்பாகத்தில் ஐந்து விரல்களும் பதிந்த வடு உள்ளது. முனிவர் தொட்டு அமுக்கியதால் உண்டான தலைவலி நீங்கவே இன்றும் சிவலிங்கத்திற்கு தைல அபிசேகம் நடைபெறுகின்றது. இறைவனுக்கு அபிசேகம் செய்யப்பட்ட மகாசந்தனாதித்தைலம் கோயில் அலுவலகத்தில் விற்பனை செய்யப்படுகின்றது. இது பல மூலிகைகைகள், வேர்கள் மற்றும் மருந்துகள் சேர்த்து மருத்துவ முறைப்படி பக்குவமாக காய்ச்சப்படுகின்றது. இது தலைவலி, வயிற்றுவலி சயரோகம் முதலான கொடிய நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகின்றது. 

 

பங்குனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதம் சித்திரை விசு, அமாவாசை, ஆவணி மூலம், நவராத்திரி, ஐப்பசி விசு, திருக்கல்யாணம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை. ஐப்பசி. மார்கழி மாதம் சித்திரை 5ம் திருநாள் ஐப்பசி 5ம் திருநாள். மார்கழி 5ம் திருநாள் தேரோட்டம் நடைபெறுகிறது. தை மாதம் தை மகம் திருவிழாவாக நடைபெறுகிறது. 

 

முதலாம் பராந்தகச் சோழ மன்னனின் கல்வெட்டு பாண்டிய நாட்டில் இத்திருக்கோயிலில் மட்டுமே காணப்படுகின்றது. இம்மன்னன் காலத்துக் கல்வெட்டுகளில் சூரிய கிரகண நாள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இம்மன்னனின் ஆட்சிக்காலத்தினை அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். 

 

முதலாம் இராசராசன் எனும் மாமன்னன் காலத்துக்கல்வெட்டுகள் மூன்று உள்ளன. இம்மன்னர் பழுதடைந்த கோயிலினைப் புதுப்பித்தவர். வட்டெழுத்துக் கல்வெட்டுகளைப் படியெடுத்து தமிழ்க் கல்வெட்டுகளை அமைத்தவர். சேர மன்னரின் கடற்படையைக் காந்தளூர்ச் சாலையில் சோழர்கள் அழித்த செய்தியும் வரலாற்றுக் கல்வெட்டுகள் மூலம் தெரியவருகின்றது. 

 

பாண்டியன் மாறன் சடையன் இரண்டாம் வரகுணபாண்டியன் கல்வெட்டு (கல்வெட்டு எண் 480), பாண்டியன் சடையன்மாறன் இரண்டாம் இராசசிம்மன் கல்வெட்டு (கல்வெட்டு எண் 417) போன்ற கல்வெட்டு செய்திகளும் தொல்லியல் துறையால் படியெடுக்கப்பட்டுள்ளன.

 

 

திரிபுவன சக்கரவர்த்தி என்று புகழப்பட்ட மாறவர்மன் இரண்டாம் சுந்தரபாண்டியன் காலத்தில் 512 பேர் கொண்ட சபை இருந்தது என்பதும் நீட்டலளவைக்கு ’சுந்தரபாண்டியன் கோல்’ எனும் கருவி பயன்பாட்டில் அக்காலத்தில் இருந்து வந்ததும் தெரியப்படுத்தும் கல்வெட்டுகள் உள்ளன

- ரா.பே.பொன்சரவணகுரு

செங்கோட்டை

ராசி பலன்

விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்கவும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பணி நிமித்தமான ரகசியங்கள் பகிர்வதை தவிர்க்கவும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும். நண்பர்களின்... மேலும் படிக்க

உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். கடன் செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். அரசு காரியத்தில் அலைச்சல் மேம்படும். பணிமாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மாறுபட்ட சிந்தனைகள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள்.... மேலும் படிக்க

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். விவசாய பணிகளில் லாபம் ஏற்படும். உற்பத்தி பணிகளில் மேன்மை அடைவீர்கள். கற்பனைத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.... மேலும் படிக்க

விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே வேறுபாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியான பயணங்களால்... மேலும் படிக்க

வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப நபர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தருணங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூர பயணங்கள்... மேலும் படிக்க

எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்துச் செயல்படவும். குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கால்நடைகள் மூலம் சில விரயங்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் செயல்களில் சிந்தித்து முடிவு... மேலும் படிக்க

உத்தியோக பணிகளில் இருந்துவந்த இடர்பாடுகள் குறையும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளின் வழியில் சுபச்செய்திகளும், சுபவிரயங்களும் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களால் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஆதாயம்... மேலும் படிக்க

எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளின் முக்கியத்துவம் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். பழைய பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். கால்நடை பணிகளில் லாபம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். முயற்சிகளை செயல்வடிவில் மாற்றுவீர்கள். உயர் கல்வியில் தெளிவுகள் ஏற்படும். மனதில் ஒருவிதமான ஏக்கம் ஏற்பட்டு நீங்கும். எதிலும் உணர்வுப்பூர்வமாக செயல்படுவீர்கள். மனதில்... மேலும் படிக்க

உத்தியோக பணிகளில் எதிர்பாராத சில பொறுப்புகள் மூலம் உயர்வுகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். பயணங்களின்போது உடைமைகளில் கவனம் வேண்டும். வழக்கு தொடர்பான விசயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள்... மேலும் படிக்க

வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். தடைப்பட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் குறையும். மனை சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் காணப்படும். சாதுரியமான பேச்சுக்கள் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள்... மேலும் படிக்க