tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 பழங்காலம் தொட்டே அய்யனார் வழிபாடு தமிழரிடையே இருந்து வருகிறது. அய்யனார் வழிபாட்டைக் குலதெய்வ வழிபாடு என்றும் சமய ஆய்வாளர்கள் குறிப்பிடுவதுண்டு. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஊர்களிலும் காவல் தெய்வம் ஆக இவரை வழிபடுகின்றனர்.

அய்யனார் என்ற சொல்லானது அய்(ஐ) அன், ஆர் என்ற மூன்றால் ஆனதாகும். இதில் ஐ என்ற எழுத்து தலைவன் என்றும் அன் என்பது ஆன்பால் ஈரு ஆகும். ஆர் என்பது மரியாதைக்குரிய விருதியாகும். கிராமங்களில் ஊருக்கு வெளியே காடுகளிலும் கண்மாய் கரைகளை அடுத்தும் கோவில்கள் அமைத்தும் அய்யனார் வழிபாடு நடைபெற்று வருகிறது. அய்யனார் கிராமத்தைக் காப்பவராகவும் விளைச்சலைப் பெருக்குபவராகவும்  கால்நடைகளைக் காப்பாற்றுபவராகவும் திகழ்கின்றார். .கிராமத் தேவதை வழிபாடு விரைந்து பயனளிக்கும் என்ற நம்பிக்கை கிராமத்து மக்களிடம் மிகுந்து காணப்படுவதால் கருப்பர், வீரபத்திரர், காளியம்மன், மாரியம்மன் முதலியவைகளைக் காவல் தெய்வமாய் கருதி உத்திராயண காலத்தில் சிவராத்ரி, பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் பச்சை வாழை இலையைப் பரப்பி பொங்கல், பயறு வகைகள் வைத்துப் படைத்து தங்களுடைய வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகள் நன்கு நடைபெற வேண்டுமென்றும், தங்களுடைய கால்நடைச் செல்வங்களான மாடு, ஆடு, சேவல் முதலியவைகளை நோய்நொடி இல்லாமல் இருக்க வேண்டுமென்றும் 

பக்தர்கள் வேண்டிக் கொள்வர்.

எங்கள் குலதெய்வம்  பெருங்காரையடி மீண்ட அய்யனார்  திருக்கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி வட்டத்தில் உள்ள குளமங்களம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் வில்லுணி ஆற்றின் வடபுறமாக அமைந்துள்ளது.இக்கோவில் கட்டப்பட்ட ஆண்டு எதுவென்பது சரியாகத் தெரியவில்லை. 8ஆம் நுற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தற்போது இக்கோவில் தமிழ்நாடு அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது..இங்கு மிகப்பெரிய குதிரை சிலை உள்ளது. இக்குதிரைச் சிலை 33 அடி உயரமுள்ள சிலை ஆகும். இது ஆசியாவிலேயே மிக உயரமான குதிரை சிலை ஆகும். இது பண்டையத் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சிறந்து விளங்குகிறது

 

 

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி அய்யனார் கோவில்களில் யானை சிலை அமைப்பது அரிதான நடைமுறை என்றாலும், இக்கோவிலில் அமைந்துள்ள குதிரை சிலையின் எதிரே யானை சிலையும் அமைக்கப்பட்டிருந்துள்ளது. மேலும் இது இந்த கோயிலின் முக்கியத்துவமாக கருதப்பட்டது. கடும் மழைக்காலம் ஒன்றில் வில்லுணி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் யானை சிலையின் அடிப்பகுதியை மட்டும் விட்டு விட்டு யானை சிலை முற்றாக அழிந்தது தெரிய வந்தது. 

 

கோயில் உருவாகும் முன்பு அந்த இடத்தில் காரைச்செடிகள் அடர்ந்திருந்ததால் ஆடு மேய்க்கும் சிறுவர்கள் விளையாடும் போது அந்த இடத்தில் வைத்து ஆடு வெட்டி விருந்து வைத்து விளையாடியதாகவும், ஆடு வெட்ட அரிவாள் இல்லாததால் மண் அரிவாள் செய்து வெட்டினார்கள். அதில் ஆடு வெட்டுப்பட்டு ரத்தம் பீரிட்டதாகவும் அதனால் அந்த இடத்தில் சக்தி உள்ளது என்று கிராம மக்கள் கோயில் கட்டி விட்டனர் என்றும் கூறப்படுகிறது. 

 

இந்த கோயிலைச் சுற்றி உள்ள கிராமத்திலிருந்து மட்டும் இன்றி பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். 1940 கால கட்டத்தில் குதிரை சிலை சேதம் அடைந்துள்ளதையடுத்து மறுசீரமைப்பு செய்ய முயன்ற போது அதன் வயிற்றுப் பகுதியை உடைக்க முடியாததால் அதன் மேலேயே மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. 

 

 

அதன்பிறகு பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடன் செலுத்த 33 அடி உயர குதிரை சிலைக்கு அதே உயரத்தில் காகிதப்பூ மாலை செய்து போடுவது வழக்கமாகி இருக்கிறது.

 

 

ஆண்டு தோறும் மாசிமகம் அன்று திருவிழா நாளில் லட்சம் பக்தர்கள் கூடும் இந்த கோயிலில் குதிரைக்கு மட்டும் சுமார் 1000 காகிதப்பூ மாலை போடப்படும் 

 

இங்கு ஆண்டு தோறும் மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் நாளில் நடைபெறும் மாசி மகம் திருவிழா சிறப்புடையது. இரண்டாம் நாள் தெப்ப உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறும். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர். பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்கள் நிறைவேறியவுடன் , வண்ணமயமான காகிதங்கள் மற்றும் மலர்களால் கட்டப்பட்ட பெரிய குதிரை சிலையின் உயரம் கொண்ட மாலைகளை தங்களுடைய மகிழுந்து, டிராக்டர், போன்ற நான்கு சக்கர வாகனங்களில் எடுத்து வந்து குதிரை சிலைக்கு காணிக்கையாக அணிவிக்கின்றனர். குதிரைக்கு கோவில் நிர்வாகம் சார்பாக முதல் மாலை அணிவிக்கப்படும். அதன் பிறகு பக்தர்களின் மாலைகள் போடப்படும். இந்த திருவிழாவின்போது கோவிலை சுற்றிலும் ஆங்காங்கே கோவில் நிர்வாகத்தாலும், பக்தர்களாலும் அன்னதானம் வழங்கப்படும். 

 

திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்காக அரசால் சிறப்பு வசதிகள் செய்யப்படும். அறந்தாங்கி, கீரமங்கலம், ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும். மற்ற நாட்களில் சொந்த வாகனங்களில் வருவதையேg அறிவுறுத்தப்படுகிறது.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க