tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் உள்ளது முடிகொண்டான் 

கிராமம். இந்த கிராமத்தின் கிழக்குப் பகுதியில் உள்ளது புகழ்பெற்ற 

வட பத்ரகாளியம்மன் மடம். இங்கு எழுந்தருளி இருக்கிறார் வட பத்ரகாளியம்மன். 

ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தே இக்காளியை வழிபாடு 

செய்து கொண்டு இருக்கிறார்கள்.

 

 

சுமார் ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பு தொன்மையான அரச குடும்பங்கள் 

மலையாள பகவதி அம்மனாக இந்த அம்மனை வழிபட்டு வந்து இருக்கிறார்கள். 

முகம்மதியர்கள் படையெடுப்புக்கு பிறகு எல்லாமே சிதலமாகிக்கொண்டு இருந்த 

போது ஒரு பெரிய பேழையில் அம்மனை வைத்து அம்மனைப் பற்றிய ஓலைச் 

சுவடிகளையும் வைத்து ஆற்றிலே விட்டுவிட்டார்கள். இந்த ஊருக்கு அருகில் 

இருக்கும் திருமலைராஜன் ஆற்றில் பேழை ஒன்று மிதந்து வருவதைக் கண்ட 

கிராம மக்கள் ஆற்றின் கரையில் திரண்டு நின்றனர். சிலர் அந்த பேழையை 

எடுக்க முற்பட்டனர். ஆனால் அது யாருடைய கைக்கும் சிக்காமல் விலகிக் கொண்டே 

சென்றது. அந்த ஊரில் சக்தி பூஜை செய்து வரும் செங்குந்த மரபினர் சார்ந்த குடும்பத்தினர் 

அன்னை பராசக்தியை வேண்டி 'அம்மா இது இங்கு நன்மை செய்ய வந்ததா இல்லை 

தீமை செய்ய வந்ததா என்று உணர்த்து என்ற வேண்டுகோளை வைக்க அந்த பேழை அவர்கள் கைகளுக்கு

வந்தது. எல்லோருடைய முன்னிலையிலும் அந்த பேழை திறக்கப்பட, உள்ளே 

அம்மன் சிரசுடன், அஷ்ட புஜங்களுடனும் சூலம் கபாலங்களுடன், ஓலை சுவடுகள் உடன் 

காட்சியளித்தாள். ஓலைச்சுவடியில் அன்னை அனைவருக்கும் நல்லது செய்ய வந்திருக்கிறாள்.

பக்தர்களை பாரபட்சம் பார்க்காமல் காக்கும் காளியம்மன் அவள் என்று இருந்தது. எப்படி பூஜிக்க 

வேண்டும் என்று மக்கள் குழம்பி நிற்க 'தலை பிள்ளையின் ஒரு துளி ரத்தத்துடன் 

அன்னதானங்களோடு பூஜிக்க வேண்டும் என்று அசரீரியாய் அம்மன் குரல் ஒலித்தது.

மக்கள் மகிழ்வோடு மேள தாளங்கள் முழங்க அன்னையை கிராமத்துக்குள் 

எடுத்துச் சென்றனர்.

 

 

செங்குந்த மரபினர் அந்த காளியை தங்கள் இல்லத்தில் வைத்து பூஜிக்க ஆரம்பித்தனர்.

அவர்களின் சந்ததி வளர்ந்த பிறகு அவர்கள் காளியை ஒரு மடத்தில் வடக்கு பக்கம் பார்க்கும்படி 

பிரதிஷ்டை செய்தார்கள். அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கனவில் காளி தோன்றி 

தான் தனியாக இருப்பதாகவும் தன்னுடன் வந்த தனது சகோதரி இன்னொரு பேழையில் வந்தவள் 

நீண்ட தொலைவு சென்றுவிட்டதாகவும், தனக்கு துணை வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அவர் 

தங்கள் குடும்பத்தினர், மற்றும் கிராம மக்களுடன் கலந்து பேசி பேழையில் இருந்த அம்மன் 

போலவே ஆகம விதிகள் படி இன்னொரு அம்மனை செய்து இரண்டு அம்மன்களையும் வழிபட 

ஆரம்பித்தார்கள். காலப்போக்கில் தொடர்ந்து பூஜை செய்ய முடியாத சூழ்நிலை உருவாக 

அன்னை இருவரிடமும் 'அம்மா தினசரி எங்களால் பூஜை செய்ய முடியாத நிலை உள்ளது. 

ஒரு வருடத்திற்கு தேவையான பழங்கள், அன்னங்களை பேழையில் வைத்து விடுகிறோம்.

சூலம், கபாலத்திற்கு தினசரி பூஜை செய்கிறோம். ஆண்டுக்கு ஒரு முறை பேழையில் 

இருந்து எங்கள் அனைவரின் இல்லந்தோறும் நீ எழுந்தருள வேண்டும் என்று வேண்டுகோள் 

வைத்தனர். அம்பாள் ஏற்றுக்கொண்டாள். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அம்பாள் வீதி 

உலா வந்து அனைவருக்கும் அருள் பாலிக்கிறாள். 1999 ஆம் ஆண்டுக்கு பிறகு 

ஐம்பொன்னால் ஆன இரண்டு அம்பாள்களின் சிலையை குழந்தை வடிவில் 

செய்து கோயில் கட்டி அதில் வைத்து வழிபட ஆரம்பித்தார்கள். 

 

 

ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் இந்த காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று 

வருகிறது. செங்குந்த மரபினர் ஆண்டுதோறும் ஒரு மாதம் விரதமிருந்து அம்மனை 

சுமந்து கொண்டு 'காளியாட்டம்' நிகழ்ச்சியை பக்தி பரவசத்தோடு நடத்துகிறார்கள்.

 

 

திருமணத் தடை விலக குழந்தை பாக்கியம் கிடைக்க பிரார்த்தனை செய்தவர்கள் 

வேண்டுதல் நிறைவேறியதும் பல்லய வழிபாடு செய்வார்கள். பேழைக்குள் இருக்கும் 

அம்மனை சீர்வரிசையோடு மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வருவார்கள்.

பழவகைகளோடு அன்னதானமிட்டு பல்லய ஆராதனை செய்து வழிபடுவார்கள்.  

ஆடி, தை மாதங்களில் என்று இடைப்பட்ட காலங்களில் இந்த பல்லய வழிபாடு நடக்கும்.

 

 

இந்த கோயிலில் பூஜகராக இருப்பவர் திரு.பஞ்சநதம் அவர்கள். பெற்றோர்கள் தங்கள் 

பிள்ளைகளுக்கு இறை வழிபாடு முறைகளை சிறு வயதில் இருந்தே கற்றுக்கொடுத்தால் 

நல்லது என்று சொன்னார். கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு 

தீர்வு காண செய்ய வேண்டிய விஷயங்களை அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். 

 

 

"யாதுமாகி நின்றாய் - காளி 

 எங்கும் நீ நிறைந்தாய் 

 தீதும் நன்மையெல்லாம் - காளி 

 தெய்வ லீலை யன்றோ..? -பாரதி சொன்னபடி யாதுமாகி 

 நிற்கும் காளியை தரிசனம் செய்து வாழ்வில் பல நன்மைகளை பெறுவோம்.

 

 

திருவாரூர் மயிலாடுதுறை சாலையில்

முடிகொண்டான் பேருந்து நிறுத்தத்தில் இருந்து கிழக்கே சுமார் 1 கி.மீ. தொலைவில்

உள்ளது இந்த கோயில்.

 

                                     

 

                                         ===திருமாளம் எஸ்.பழனிவேல்

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க