tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

ஐயப்பன் கோவிலில் நெய்யால் ஐயப்பனுக்கு அபிஷேகம் நடக்கும். ஆனால் தனி நெய்யையோ, தனி தேங்காயையோ நிவேதனம் செய்யமாட்டார்கள். தேங்காய்க்குள் நெய் ஊற்றி நெய் தேங்காயையே நிவேதனமாக்கினார்கள்.

நெய் தேங்காய் :

🌟 முக்கண் கொண்ட தேங்காய் சிவனை ஞாபகப்படுத்தும். பசு நெய் கோபாலனாகிய மகா விஷ்ணுவை நினைவுப்படுத்தும். சிவன், விஷ்ணு இருவருடைய அருள் கதிரொளியின் சக்தியாக அவதரித்தவர் ஐயப்பன். இதனால் சிவவிஷ்ணு வடிவமான நெய் தேங்காயை அவருக்கு நிவேதனம் செய்கின்றனர்.

நெய் எதற்காக?

🌟 ஐயப்பனுக்கு காணிக்கையாய் நெய் கொண்டு செல்வது காலம் காலமாய் இருந்து வருகிறது. இந்த வழக்கம் ஏன் ஏற்பட்டது தெரியுமா?

🌟 பந்தள மன்னனின் மனைவி வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய்யுரைத்தாள். தாய்க்கு புலிப்பால் கொண்டு வர காடு நோக்கி புறப்பட்டான் ஐயப்பன்.

🌟 தந்தையான பந்தள மன்னன் மிக வருத்தத்துடன் மகனை வழியனுப்பும்போது, காட்டில் இருக்கும்போது உண்ணக்கூடிய உணவுகள் பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாக கட்டினார். அதே சமயம், சிவபக்தனான பந்தள மன்னன், முக்கண்ணனான சிவனின் அம்சம்போல் ஒரு தேங்காயை மற்றொரு முடியில் கட்டிக் கொடுத்தார்.

🌟 அந்த இருமுடிகளையும் ஏந்திய சிறுவன் மணிகண்டன், புலிப்பால் கொண்டு வர காட்டுக்கு சென்றான். இருமுடியை முதன்முதலில் தலையில் ஏற்றியது ஐயப்பன் என்று புராணம் கூறுகிறது. இவ்வாறு இருமுடியை தலையில் தாங்கி ஐயப்பனை வழிபடும் முறை நாளடைவில் நிலைத்துவிட்டது.

கொண்டு செல்லும் நெய்யை என்ன செய்வர்?

🌟 சபரிமலை ஐயப்பன் சிலை கடந்த 1800ஆம் ஆண்டு வரை 'தாரு சிலை" எனப்படும் மரத்தால் செய்யப்பட்ட சிலையாக தான் இருந்தது. அதன் காரணமாக அப்போது வரை சுவாமிக்கு நெய் அபிஷேகம் நேரடியாக செய்யும் வழக்கம் இல்லாமல் இருந்தது.

🌟 இதனால் ஐயப்ப பக்தர்கள் கொண்டு செல்லக்கூடிய நெய்யை அங்குள்ள நெய்த்தோணியில் கொட்டிவிட்டு வரும் பழக்கம் இருந்தது. தற்போது நேரடியாக ஐயப்ப சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்யப்பட்டு அந்த பிரசாதத்தை பக்தர்கள் வீட்டுக்கு கொண்டு வருகின்றனர்.

இருமுடியில் நெய் தேங்காய் சுமந்து செல்வதற்கான காரணம் :

🌟 தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும், தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்கு வருமாறும் ஐயப்பன் கூறினார்.

🌟 பந்தள மன்னன், மணிகண்டா! நீ காட்டுக்குள் குடியிருக்க போவதாய் சொல்கிறாய். நாங்கள் உன்னை காண வேண்டும் என்றால் மலைகளை கடந்து வர வேண்டும். வயதான நான் உன்னை காண எப்படி வருவேன்? என்றார். அதற்கு மணிகண்டன் உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டும். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்துவிடலாம் என அருள்பாலித்தார்.

🌟 அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனை காண பந்தள மன்னன் மலைக்கு செல்வார். மகனை காண செல்லும்போது ஐயப்பனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்து செல்வார். நெய் இலகுவில் கெட்டு போகாத ஒன்று. எனவே நெய்யில் செய்த பலகாரங்களை கொண்டு செல்வார்.

🌟 மேலும் நெய்யை தேங்காய்க்குள் ஊற்றி கொண்டு சென்றால் இன்னும் பல நாள் கெடாமல் இருக்கும். பந்தள மன்னன், ஐயப்பனை காண நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும். எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது.
 

Thanks and regards 
A s Govinda rajan
17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai 

ராசி பலன்

வியாபாரம் தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். சமூக நிகழ்வுகளால் மனதளவில் சில மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். சவாலான செயல்களையும்... மேலும் படிக்க

இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். வெளியூர் பணி வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். சமூகப் பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். எதிர்ப்பாராத சில இடமாற்றம்... மேலும் படிக்க

மனதளவில் குழப்பங்கள் தோன்றி மறையும். சந்தேக உணர்வுகளால் மகிழ்ச்சி இன்மை ஏற்படும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். சூழ்நிலை அறிந்து... மேலும் படிக்க

ஆன்மிகப் பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வியாபார முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான தருணம் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதிற்கு... மேலும் படிக்க

பணி நிமித்தமான முயற்சிகள் கைகூடும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். வாகனப் பயணங்களில் விவேகம் வேண்டும். பங்குதாரர்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். முன் கோபத்தால் சில விரயங்கள் நேரிடும். மற்றவர்கள் கூறும்... மேலும் படிக்க

பொழுதுபோக்கு செயல்பாடுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உணர்ச்சிப்பூர்வமாக செயல்படுவதை குறைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் எண்ணங்களை... மேலும் படிக்க

குடும்ப பெரியோர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மறைமுகமான போட்டிகளை சமாளிப்பீர்கள். உடலில் இருந்துவந்த பிரச்சனைகள் அகலும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். வாகனம் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வீடு கட்டுவது சார்ந்த... மேலும் படிக்க

எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனதளவில் தைரியம் உண்டாகும். காலி மனை மூலம் ஆதாயம் அடைவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தபால் துறைகளில்... மேலும் படிக்க

செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்வீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபார நெருக்கடிகள் விலகும். உத்தியோகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். குடும்பத்தில்... மேலும் படிக்க

இனம்புரியாத சில சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். புதுவிதமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் புதிய வாய்ப்புகள் உருவாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்காலம்... மேலும் படிக்க

அவசரம் இன்றி எதிலும் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளால் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உடல்... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்கள் வழியில் ஆதரவான வாய்ப்புகள் உருவாகும். வியாபார பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சபை பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும்.... மேலும் படிக்க