tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

இந்த ஏழு தீர்த்தங்களிலும் வாரத்தின் எந்தெந்த நாட்களில் நீராட வேண்டும் என்பது பற்றி ஒரு *நீண்ட பதிவு.*

 

 

   ⭕ 1)ஆதி வாரம் எனப்படும் (ஞாயிற்றுக்கிழமைகளில்) நீராட வேண்டிய காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் இஷ்ட தீர்த்தம்:

 

கச்சபேஸ்வரர் கோவில் கோபர வாசலில் நுழைந்தவுடன் வலக்கை பக்கமாக வெளிப்பிரகாரத்தில் இஷ்ட தீர்த்தம் அமைந்துள்ளது.

 

நெருப்பு வடிவமான சிவனிடம் இந்த அக்னி சொரூபத்தினை மறைத்து தோன்றி காட்சி தந்தருள வேண்டுமென அனைத்து தேவர்களும் வேண்டினர். 

 

ஈசன், அவ்வாறே, ஒரு குளத்தை உருவாக்கி அதன் கரையில் சிவலிங்கமாக இருந்து அருள்புரிந்தார். 

 

தேவர்களின் இஷ்டத்தை பூர்த்தி செய்பவராதலால் "இஷ்டசித்தீஸ்வரர்' ஆனார்.

 

பிருகு முனிவரின் வம்சத்தில் தோன்றிய தசீசி முனிவர் குபன் என்னும் அரசனுடைய நண்பராவார்.

 

ஒருநாள் அரசர், அந்தணர் இவர்களுள் யார் சிறந்தவர் என்ற விவாதம் வந்தது. 

 

ததீசி முனிவர் "அந்தணரே', எனவும், குபன், "அரசரே' எனவும் பேசினர்.

 

இந்த விவாதம் பெரும் போராக மாறியது. 

 

முனிவர் அரசனை அடித்தார். அரசன் முனிவரை வஜ்சிராயுதத்தால் வெட்டினான்.

 

வெட்டுண்டு விழும்போது முனிவர் சுக்கிரனை நினைத்துத் தரையில் விழுந்தார். 

 

சுக்கிரன், முனிவரின் துண்டுபட்ட உடலைப் பொருத்தி உயிர்பெறச் செய்து அவரிடம், காஞ்சிக்கு சென்று இஷ்டப்பட்டதை அருளும் இஷ்டசித்தீஸ்வரரை வணங்கி சாகாத் தன்மையைப் பெறுமாறு கூறினார்.

 

மேலும்,காஞ்சி கச்சபேசத்தில் இஷ்ட சித்தீஸ்வரர் சந்நிதி அருகில் உள்ள இஷ்ட தீர்த்தத்தில் நீராடி அருகில் உள்ள இஷ்ட சித்தீசப் பெருமானை வணங்கியே "மிருதசஞ்சீவினி" என்னும் இறந்தவரை எழுப்பும் மந்திரத்தை சுக்கிராச்சாரியார் பெற்றார். 

 

ஆதலால் அதில் மூழ்கினால் சிவபெருமானின் திருவருளோடு, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய பயன்கள் கிடைக்கும் .

 

இந்த இஷ்ட தீர்த்தத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடினால் நம்மை பிடித்திருக்கும் அனைத்து நோய்களும் தீரும்.

 

இஷ்ட தீர்த்தத்தின் வடபுறத்தில், தருமசித்தீஸ்வரர் சந்நதியும், தெற்கே காமசித்தீஸ்வரர்சந்நதியும், மேற்கில் மோஷசித்தீஸ்வரர் சந்நதியும்,

கிழக்கே முக்தி சித்தீஸ்வரர் சந்நிதியும் அமைந்துள்ளன

 

எனவே இந்த இஷ்ட தீர்த்தகரையில் தானம் செய்தால் பலன்கள் பன்மடங்கு ஆகும் என்று கூறினார் சுக்கிரர். 

 

இதைக் கேட்ட ததீசி காஞ்சி வந்து இஷ்ட தீர்த்தத்தில் நீராடி இஷ்டசித்தீஸ்வரரை வணங்கி என்றுமே சாகாத உறுதியான உடலைப் பெற்றார்.

 

வைகாசி, ஆடி, மாசி மாதங்களில் இந்த இஷ்டசித்தி தீர்த்தத்தில் நீராடி இஷ்டசித்தீசரை வழிபடுவது என்பது உண்டு என்றாலும் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் பெருமளவில் இதில் நீராடி, புதுமண்சட்டியில் பச்சரிசி மாவு, வெல்லம் சேர்த்து உருட்டி ஸ்தூல சரீரமாக உருவகித்தும் சூட்சும சரீரமாக , அகலில் நெய்யிட்டுத் தீபமேற்றி, தேங்காய், பூ, பழத்தை அந்த மாவில் வைத்து சட்டியைத் தலையில் வைத்துக் கொண்டு கோயிலை விநாயகர் சந்நிதியில் துவங்கி சுற்றி வருகின்றார்கள்.

 

இதனால் தலைவலி, காதுவலி, காதில் சீழ்வடிதல், தலைக் குத்து போன்றவை நீங்கும். 

 

மாவிளக்குப் போடுவதாக வேண்டிக் கொள்ளுதல் கச்சபேசுவர தலத்துக்குரிய சிறப்பாகும். 

 

   ⭕ 2)சோம வாரம் எனப்படும் (திங்கட்கிழமைகளில்) நீராட வேண்டிய காஞ்சிபுரம் சிவகங்கை தீர்த்தம்:

 

இந்த சிவகங்கை தீர்த்தம் கச்சியம்பதியின் வார தீர்த்தங்கள் ஏழினுள் சோமவாரத்திற்கு

(திங்கட்கிழமைக்குரிய) உரிய தீர்த்தமாகும். இத் சிவகங்கை தீர்த்தம் காஞ்சி திருஏகம்பரேசுவரர் திருக்கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் இறைவன் சந்நிதிக்கு முன்னே கிழக்கே அமைந்துள்ளது. இந்த சிவகங்கை தீர்த்தத்தில் திங்கட்கிழமையன்று நீராடுவோரது பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கிறது. 

 

   ⭕ 3)மங்கள வாரம் எனப்படும் (செவ்வாய்கிழமையன்று) நீராட வேண்டிய காஞ்சிபுரம் மங்கள தீர்த்தம்: 

 

மங்கள தீர்த்தம் எனப்படும் இத் திருக்குளம் காஞ்சி மாநகரின் வட பகுதியில் உள்ள ஸ்ரீசங்கர மடத்திற்கு அருகில் சிவகாஞ்சியில் உள்ள கங்கைகொண்டான் மண்டபம் - நகரப் பேருந்து நிறுத்தத்தருகே காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலின் தென்கிழக்கில் மங்களேசுவரர் கோயிலில் அமைந்துள்ளது. 

 

சிவன் பார்வதி திருமணத்தின்போது, மணமகள் பார்வதிக்கு பணிவிடை செய்ய தேவலோகத்திலிருந்து வந்தவள்தான் மங்களாம்பிகா.

 

பார்வதி தேவிக்கு தோழியாக இருந்து சகல உதவிகளையும் செய்து வந்தாள். சிவன் பார்வதி திருமணம் முடிந்தபின், சிவபூசை செய்ய விரும்பினாள் மங்களாம்பிகா.

 அதற்காகவே சிவலிங்கம் ஒன்றையும்தீர்த்தம் ஒன்றையும் உருவாக்கி இவள் உருவாக்கிய தீர்த்தத்தால்

தினமும் சிவனுக்கு அபிசேகம் செய்துவழிப்பட்டாள். 

 

சிவன் அவளின் பூசையை ஏற்று மோட்ச சக்தியை அருளினார்.

 

மங்களாம்பிகா வழிபட்டமையால் இச்சுவாமிக்கு மங்களேஸ்வரர் 

எனும் திருநாமம் விளங்கிற்று. இக்கோயில் தீர்த்தம் மங்கள தீர்த்தம் என பெயர்பெற்றது.

 

மங்களேஸ்வரர் கோயிலின் பின்புறமுள்ள 

வேப்பமரத்தடியில், 

செவ்வாய்க்கிழமைதோறும் 

காஞ்சி பெரியவர் 

இக்கோயிலின் மங்கள தீர்த்தத்தில் நீராடி தவம் செய்வது வழக்கமாக கொண்டிருந்தார்.

 

திருமணத் தடையுள்ளவர்கள்,

இந்த மங்கள தீர்த்தத்தில் செவ்வாய் கிழமைகளில் நீராடி மங்களேசுவரனை வழிபட்டு வந்தால் தக்க வாழ்க்கைத்துணை அமைந்து எல்லா நலங்களும் பெற்று இன்புற்று வாழ்வார்கள் என்பது தொன்னம்பிக்கை (ஐதீகம்).

 

  ⭕ 4)புது வாரம் எனப்படும்(புதன் கிழமையன்று) நீராட வேண்டிய காஞ்சிபுரம் இந்திர தீர்த்தம்: 

 

இந்த தீர்த்தம் கச்சியம்பதியின் கிழக்கு பகுதியில் காரை (முட்) செடிகள் நிரம்பியிருந்த கச்சிநெறிக், “காரைக்காடு” (தற்போது திருக்காலிமேடு)என்று பெயர் பெற்ற சத்தியநாதசுவாமி திருக்கோயிலில்

அமைந்துள்ளது.

 

இப்பகுதியில் வேப்பமரங்கள் அடர்ந்திருந்தமையால் இத்தீர்த்தம் இங்குள்ள மக்களால் வேப்பங்குளம் என்றழைக்கப்பட்டு வருகிறது.. 

 

இப்பெயரில் உள்ள “பெரிய வேப்பங்குளம் என்பதே பண்டைய இந்திர தீர்த்தம்.ஆனால் இது தற்போது பயன்பாட்டில் இல்லை. தற்போது பயன்பாட்டில் உள்ள“சிறிய வேப்பங்குளம்” என்பது குடிநீர் குளமாகப் பயன்படுகிறது.

 

இத்தலத்திலுள்ள இறைவனை புதன் வழிபட்டு கிரகநிலை பெற்றதால், ஜாதகத்தில் புதன் வலுவிழந்து இருப்பவர்கள் இத்தலம் வந்து புதன்கிழமையன்று இந்திர தீர்த்தம் என்கிற வேப்பங்குளத்தில் நீராடி இத்தல இறைவன் சத்தியவிரதேஸ்வரரை

வணங்குதல் சிறப்புடையது. 

 

இத்தலத்திலுள்ள இறைவன் சத்தியவிரதேஸ்வரர் என்ற பெயரையொட்டியே காஞ்சிக்கு ‘சத்தியவிரதக்ஷேத்திரம்’ என்ற பெயருண்டாயிற்று. 

 

இந்த இந்திர தீர்த்தத்தில் எல்லா நாள்களிலும் மூழ்கி பயன் அடையலாம் என்றாலும் புதன் கிழமையன்று முழ்குவோர் பிற நாள்களில் மூழ்குவோரின் பெரும் சிறப்பை பெறுவார்கள்.

 

 ⭕ 5)குரு வாரம் எனப்படும்(வியாழ கிழமையன்று) நீராட வேண்டிய காஞ்சிபுரம் காயா ரோகண தீர்த்தம்: 

 

இந்த தீர்த்தம் காஞ்சிபுரம் காயா ரோகண ஈஸ்வரர் கோவிலில் கோயிலுக்கு தெற்கில் காயாரோகணத்தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு தாயார்குளம் என்ற பெயரும் உள்ளது.

 

காயா ரோகண ஈஸ்வரர் கோவில் ஒரு குரு ஸ்தலம். பிருகஸ்பதியாகிய குரு, இத்தலத்தில் சிவனை வழிபட்டு சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றார்.

 

தேவகுருவான இவர் காயாரோகணேஸ்வரருக்கு எதிரில் மேற்கு நோக்கி வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார்.

 

இவரது கைகள் மார்புக்கு நேராக குவிந்த நிலையில் உள்ளது. குருவின் அருள் இருந்தால் தான் ஒருவரின் வாழ்வில் திருமண யோகம், குழந்தைபாக்கியம் உண்டாகும்.

 

குருவிற்குரிய வியாழக் கிழமையில், இங்கு வழிபட்டால் நன்மை உண்டாகும்.

 

எமதர்ம ஈஸ்வரர்:காயாரோகண தீர்த்தத்தின் மேற்குக் கரையில் எமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் தனிக் கோயிலாக அமைந்துள்ளது.

 

எமதர்ம ஈஸ்வரர் என இவர் அழைக்கப்படுகிறார். நெய்தீபம் ஏற்றி இவரை வழிபட மரணபயம் நீங்கும். 

 

பெரியவர் வழிபட்ட சிவன்:காஞ்சிபுரம் சங்கரமடத்தின் 13வது பீடாதிபதியான சத்சித்கனேந்திர சரஸ்வதி சுவாமி கி.பி.272ல் இக்கோயிலில் சிவனோடு ஐக்கியமாகி ஸித்தி பெற்றார். 

 

இதன் காரணமாக, காஞ்சிப்பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி, ஆண்டுதோறும் தவறாமல் இங்கு வழிபடுவதை தன் வழக்கமாக கொண்டிருந்தார்.

 

இந்த காயாரோகண தீர்த்தத்தில் வியாழக்கிழமை நீராடுவது சிறப்பு.

வியாழக்கிழமையில் இந்த தீரத்தத்தில் மூழ்குவோர்

பொருட் செல்வத்தையும், கல்வி செல்வத்தையும், எல்லா நலன்களையும் எளிதில் பெறுவர். 

 

  ⭕ 6)சுக்கிர வாரம் எனப்படும்(வெள்ளிக்கிழமையன்று) நீராட வேண்டிய காஞ்சிபுரம் உலகாணி தீர்த்தம்: 

 

பஞ்ச கங்கை எனப்படும் இந்த உலகாணிதீர்த்தம் காஞ்சி மாநகரின் நடு நாயகமாக விளங்கும் காமாட்சி தேவியின் சந்நிதியில் உள்ளது.

 

இத்தீர்த்தத்தில் வெள்ளிக்கிழமை மூழ்குவதே சிறப்பு. 

 

வெள்ளிக்கிழமைகளில் இந்த உலகாணி தீத்தத்தில் நீராடி காமாட்சி அன்னையை வணங்குபவர்களது விருப்பங்கள் தடையின்றி

நிறவேறபெறுவார்கள்.

 

காசி திருத்தலத்தில், கங்கை நதிக்கரையில், பஞ்சகங்கா எனும் ஸ்நானகட்டம் உள்ளது. அதனை நினைவூட்டுவதே காமாட்சியம்மன் கோயிலில் அமைந்த பஞ்ச கங்கை தீர்த்தம் எனப்படும் உலகாணி தீர்த்தம்.

 

பஞ்சபூதங்கள் பெயரால் உருவாக்கப்பட்ட தீர்த்தமாதலின் பஞ்சதீர்த்தம் என்பர்.இந்த தீர்தத்தில் வெள்ளிகிழமையன்று நீராடுபவர்களுக்கு பஞ்சபூதசக்திகள் பற்பல நன்மைகளைத் தரும்.

 

இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர்கள் யாராயினும் அவர்களுக்கு முக்தி கிடைக்கும். பாவம் செய்தவர்கள் இந்த தீர்த்தத்தில் மூழ்கினால் புண்ணியராகிவிடுவார்கள். 

 

  ⭕ 7)சனி வாரம் எனப்படும் (சனிக்கிழமையன்று) நீராட வேண்டிய காஞ்சிபுரம் சர்வதீர்த்தம்:

 

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு அருகில் காஞ்சிபுரம் - வேலூர் சாலையில் சர்வதீர்த்தம் அமைந்துள்ளது.

 

சகல தோஷங்களையும் நீக்கி, முக்தியைத் தரும் சக்தி கொண்டது இந்த சர்வதீர்த்தம்.

 

அம்பிகை மணலால் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டபோது, அம்பிகையின் மன உறுதியை சோதிக்க நினைத்த சிவபெருமான், அனைத்து நதிகளையும் காஞ்சியில் வெள்ளமாகப் பெருக்கெடுக்கச் செய்தார்.

 

வெள்ளப் பெருக்கைக் கண்டு அச்சம் கொண்ட அம்பிகை, பெருமானின் லிங்கத் திருமேனியைக் காக்கும் பொருட்டு, ஆரத் தழுவிக் கொண்டார். 

 

சிவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்றாள்.

 

எனினும் நதிகள் வருந்தின. அன்னையின் சிவ பக்தியை சோதிக்கும் பொருட்டு சிவனாரின் ஆணைக்கு இணங்கவே, நதிகள் பெருக்கெடுத்து வந்தன.

 

எனினும் தங்களுடைய அந்தச் செயல் உகந்தது அல்ல எனக்கருதி விமோசனம் பெற முற்பட்டன.

 

அதனால் இத்திருத்தலத்திலேயே சர்வ தீர்த்தங்களும் இறைவனைச் சரணடைந்து, இறைவனை தீர்த்தேஸ்வரராக வழிபட்டன.

 

அவற்றின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன், ‘‘நீங்கள் எல்லோரும் இங்கேயே சர்வதீர்த்தம் என்ற பெயருடன் திகழ்வீர்கள்.

 

உங்களில் நீராடி தர்ப்பணம், தானம் செய்பவர்கள் சகல பாவங்களும் நீங்கி, அனைத்து நன்மைகளும் பெற்று, நிறைவில் முக்தியும் பெறுவர்’’ என்று அருள்புரிந்தார்.

 

இறைவனின் திருவருளால் தீராத கொடிய பாவங்கள் தீரப்பெற்று எல்லா இன்பங்களையும் பெறுவதற்கு இந்த சர்வ தீர்த்தத்தில சனிக்கிழமையன்று தீர்த்தமாடுவது மிகச்சிறப்பு.

 

🙏🏻

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க