tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

*துளசி கல்யாணம்*🍀

 

வீட்டில் செல்வம் தங்கவும், மகாலஷ்மி நிலைத்திருக்க வும் துளசி வழிபாடு அவசியம் . துளசி வழிபாடு என்பது சகல ஐஸ்வர்யங் களையும் அள்ளித்தருவ தோடு குழந்தைப்பேறை தரும்.

 

கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தன்று துளசித்தாய் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. அன்று துளசித் தாய்க்கு விரதமிருந்து பூஜை செய்வது மிகுந்த பலனை தரும். துளசி பூஜை செய்ய வாரத்தில் செவ்வாய்க் கிழமையும், வெள்ளிக் கிழமையும், கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசியும் ஏற்ற நாட்கள் ஆகும்.

 

கார்த்திகை மாதம் ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி அன்று மகாவிஷ்ணு துளசியைத் திருமணம் செய்து கொண்டார். அந்த நாளை ‘‘பிருந்தாவன துளசி’’ அல்லது ‘துளசிக்கல்யாணம்’ எனக் கொண்டாடுவார்கள். அன்று காலை சுமங்கலிப் பெண்கள் குளித்துவிட்டு, விரதமிருந்து துளசி மாடத்தை சுற்றி மெழுகி, கோலமிட்டு காவி பூச வேண்டும். சாதம், பால் பாயாசம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பழங்கள், தேங்காய் வைத்து பூஜை செய்ய வேண்டும். ஒரு விளக்கு திரியை நெய்யில் வைத்து, தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.

 

துளசி லட்சுமி வடிவானவள். துளசி செடியுடன் நெல்லிமரக்குச்சி (மகாவிஷ்ணு வடிவம்) சேர்த்து வைக்க வேண்டும். வீட்டில் சாளகிராமம் இருந்தால் அதனையும் துளசி மாடத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டும். நிவேதனமாக சர்க்கரை பொங்கல் வைத்து வணங்க வேண்டும். துளசி பூஜைக்கு முன்னர் விக்னேஸ்வர பூஜை செய்ய வேண்டும்.

 

பூஜை முடிந்ததும் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பூ, கண்ணாடி வளையல்கள் வைத்து கொடுக்க வேண்டும். ஒரு ஏழை அந்தண சிறுமியை மனையில் அமர வைத்து சந்தனம் பூசி, குங்குமம், புஷ்பம், புதுத்துணி கொடுக்க வேண்டும். பால் பாயாசத்தை பாத்திரத்துடன் தானம் கொடுக்கலாம்.

 

துளசி, இந்த துளசி இலையின் நுனியில் பிரம்மனும், அடியில் சிவபெருமானும், இடையில் விஷ்ணுவும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது. துளசி என்றால் தன்னிகர் இல்லாத பெண். ஸ்ரீ மகாலஷ்மியின் அம்சமாக கருதப்படும் துளசி திருமாலின் மார்பை அலங்கரிப்பதிலும் முக்கிய இடம்பிடித்துள்ளது. துளசியில் சகல தேவதைகளும் வாழ்வதாக சொல்கிறார்கள் ஆன்மிக பெரியவர்கள்.

 

துளசி இலை பட்ட தண்ணீர், கங்கை நீருக்குச் சமமா னதாக கருதப்படுகிறது. துளசி செடியில் தேங்கியி ருக்கும் நீர் புண்ணிய தீர்த்தத்துக்கு நிகரானது. செவ்வாய், வெள்ளிக்கிழமை களில் துளசி பூஜை செய்தால் எட்டு வகை செல்வங்களும் பெறலாம் என்பது ஐதிகம். கன்னிப்பெண்கள் திருமணத் தடை நீங்க துளசி வழிபாடு செய்தால் விரைவில் மாங்கல்ய தோஷம் நீங்கி மண வாழ்க்கை அமையும்.

 

துளசி தண்ணீர் ஜோதிட சாஸ்திரமானது வீட்டில் செல்வம் தங்கவும், மகாலஷ்மி நிலைத்திருக் கவும் துளசி வழிபாடு அவசியம் என்கிறது. 

 

மேலும் துளசியானது மகாலஷ்மியின் அம்சம் என்பதால் சுக்கிரனின் அம்சத்தையும் செவ்வாயின் காரகத்தையும் கொண்டிருக் கிறது. துளசியை வணங்கி னால் செவ்வாய், புதன், சுக்கிரனிடம் நன்மைகளைப் பெறலாம்.

 

கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள் பகவானுக்கு சமர்ப்பிக்கும் ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள். கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்ம ஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள். கார்த்திகை மாதம் முழுவதும் காலையிலும், மாலையிலும் வீட்டு நிலை வாசலுக்கு முன்பு விளக்கேற்றுவது வீட்டில் லட்சுமி கடாட்சத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

 

ஆயிரம் குடம் பாலைக் கொண்டு தரிசிப்பதை விட ஒரு குடம் துளசி தீர்த்தத்தால் உள்ளம் மகிழ்வார் விஷ்ணு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஒரு துளசி மாலை தந்துவிடும். மங்கலமாய் என்னை வணங்கினால் உங்கள் தீங்கை குறைத்து நல்வினை தருவேன் என்கிறாள் மகாலஷ்மியின் அம்சமான துளசி.!

 

ஸ்ரீ பத்ம புராணத்தில் துளசி வழிபாடு பற்றி சிறப்பாக கூறப்பட்டுள்ளது. தசரத மகாராஜன் குழந்தை பேறு வேண்டி முதலில் துளசி பூஜை செய்ததாகவும் துளசி தேவி காட்சி தந்து துளசி காஷ்டம் என்னும் துளசி குச்சிகளைக் கொண்டு புத்திரகாமேஷ் என்னும் யாகம் செய் உனக்கு இறைவனே மகனாக பெறும் பாக்கியம் பெறுவாய் என்றாள். துளசி வழிபாடு என்பது சகல ஐஸ்வர்யங்க ளையும் அள்ளித்தருவதோடு குழந்தைப்பேறை தரும் என்பதையும் இதிலிருந்து அறியலாம்.✍🏼🌹

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க