tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

 

1.சூரியனுக்குரிய பரிகாரம்

 

ஞாயிற்றுக்கிழமை கோதுமையினால் செய்யப்பட்ட சப்பாத்தி ரொட்டி கோதுமை தோசை போன்றவற்றை செய்து தானும் சாப்பிடலாம். வீட்டுக்கு வரும் உறவினர்க்கும் கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு கோதுமை அல்வா வாங்கிக் கொடுத்து சந்தோஷப் படுத்தலாம். இதனால் மேலதிகாரிகள் கோபம் தணியும் .அரசு சம்பந்தமான காரியங்கள் கை கூடும்.

 

2. சந்திரனுக்குரிய பரிகாரம்

 

பலா மரத்தின் வடக்கு போகும் வேரை பூச நட்சத்திரத்தில் அல்லது அமாவாசை ஞாயிற்றுக்கிழமை கூடிய சுபதினத்தில் காப்புக் கட்டி எடுத்து வந்து தாயத்தாக்கி கட்டிக் கொள்ள சந்திர திசை முழுவதும் நலம் தரும். 

 

3.செவ்வாய் பகவானின் மூலிகையான சிவனார் வேம்பை முறைப்படி பூஜை செய்து காப்புக் கட்டி எடுத்து அணிந்து கொள்ள அதிகார பதவி கிட்டும். உடல் நலம் தேறும்.எதிரிகள் சரணடைவார் .உறவுகள் மேம்படும்.எதிலும் முக்கியத்துவம் கிட்டும்.செவ்வாயின் திசை முழுவதும் பலன் தரும்.சகோதரர்கள் நலம் பெறுவார். 

 

4.புதனுக்குரிய பரிகாரம் 

புதனுக்குரிய இருவேலி மூலிகை அல்லது செந்நாயுருவி வேருக்கு முறைப்படி பூஜை செய்து காப்புக் கட்டி உயிர் கொடுத்து பூஜையில் வைத்து புதன்கிழமை புதன் ஓரையில்( காலை 6:00 மணிக்குமேல் 7:00 மணிக்குள்) தாயத்தாககி கழுத்தில் அணிந்து கொள்ளுங்கள். இதனால் படிப்பவர்கள் பலன் பெறுவர்.தோல் நோய் வராது.சிந்தனைக்கு ஏற்ப சுப சந்தோஷ மேன்மையுண்டாகும். குடும்பத்தினர் மகிழ்வார்கள். பெண்களால் முன்னேற்றம் வரும்.

 

5.குருக்குரிய பரிகாரம் 

 

வியாழனின் சமித்தாகிய அரச மரத்தின் புல்லுருவியை முறைப்படி பூஜை செய்து தாயத்தாக்கி அணியவும். வியாழனின் திசையில் தனதான்ய அபிவிருத்தி புத்திர சுகம்.குருவருள்.இறையருள் கிடைக்கும்.

 

6. சுக்கிரன் பரிகாரம் 

 

சுக்கிரன் மூலிகையான கருஊமத்தன் செடிக்கு முறைப்படி பூஜை செய்து காப்புக்கட்டி சாப நிவர்த்தி செய்து உயிர் கொடுத்து எடுத்து வந்து. தாயத்தாக்கி அணியவும் நன்கு சிரத்தையுடன் தூபம் கொடுத்து வந்தால் சுக்கிரன் திசை முழுவதும் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம்,வீடு,நல்லதுணை அமையும்.சுக்கிரன் எந்த நிலையில் இருந்தாலும் திசை முழுவதும் நல்ல பலனைத் தரும்.அறுபத்தி நான்கு கலைகளிலும் தேர்ச்சி உண்டாகும் இயல் இசை நாடகத்தில் கலைத்துறையில் முழு வெற்றி கிடைக்கும். 

7.சனி பகவானுக்குரிய பரிகாரம் 

 

சனிபகவான் மூலிகையான செவ்வலரி வேரை முறைப்படி காப்புக்கட்டி பூஜை செய்து வடக்கு போகும் வேரை எடுத்து அணிந்து கொள்ள வெற்றிமேல் வெற்றி உண்டாகும். இது பெரும் சக்தியையும் சர்வ மேன்மையையும் தரும்.ஆயுள் முழுவதிலும் பலன் தரும். நினைத்ததை சாதிக்க வைக்கும்.ஏழரை சனி,அஷ்டமத்து சனி,கண்டச் சனி,விலக சர்வ சாபங்களும் விலகும்.சனி பகவான் திசை வருடம் பத்தொன்பதும் நல்ல பலன் கிட்டும்.

 

8. ராகுவுக்குரிய பரிகாரம் 

 

இராகு மூலிகை எட்டி மரத்தின் வடக்கு போகும் வேருக்கு காப்புக்கட்டி பூஜை செய்து எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து அந்த வேறுக்கு வாசனைத் திரவியங்கள் பூசி இராகுவின் காயத்ரி மந்திரம் 1008 முறை ஜெபித்து தாயத்தாக்கி அணிந்து கொள்ள இராகு திசை முழுவதும் நல்ல பலன் கொடுக்கும்.

 

9.கேதுக்குரிய பரிகாரம் 

 

வேப்ப மரத்தின் வடக்கு போகும் வேருக்கு அசுவணி ,மகம்,மூலம் நட்சத்திரத்தில் காப்புக்கட்டி பூஜை செய்து எடுத்து வந்து தாயத்தாக்கி அணிந்து கொள்ள கேது பகவான் திசை முழுவதும் நல்ல பலன் தரும் .வாழ்வில் பிடிப்பு இல்லாதவர்கள் வீட்டில் துன்பம் ,துயரம் உள்ளவர்கள், நல்ல பெயரை எடுக்க இயலாதவர்கள் ,மேலதிகாரி தொல்லையுடையவர்களும், இம்மூலிகையால் இதன் மகிமையால் வாழ்நாள் முழுவதும் நல்ல பலனைத் தரும்.

 

காப்பு கட்டுதல் .அதாவது செடிக்கு சாபவிமோசனம் கொடுத்த பின் செடியின் அடிப்பகுதியில் வேரினை ஒட்டிஒரு மஞ்சள் நூலில் முனை முறியாத மஞ்சளை கட்டி அதனை கட்டி 3 முடிச்சுகள் போட வேண்டும். பின் கற்பூர தீபம் காண்பித்து தொட்டு வணங்கி அதன் பின் பிடுங்க வேண்டும்.இதுவே காப்பு.

 

சப விமோசனம் .

செடியின் முன் அமர்ந்து 

 

ஓம் மூலி உனக்கு இடப்பட்ட சக்தி சாபம் நசி நசி,சித்தர்கள் சாபம் நசி நசி ,தேவர்கள் சாபம் நசி நசி ,எவரிட்ட சாபமாயினும் அணைத்து சாபங்களும் நசி நசி ,ஓம் மூலி உன் உயிர் உன் உடலில் நிற்க சிவா.

 

3 முறை சொல்ல மூலிகையின் சாபங்கள் விலகும்.

 

இதுவே சாபவிமோசனம் கொடுத்து காப்பு கட்டி வேர் பிடுங்கும் முறையாகும். இந்த முறை அனைவரும் கையாலும் எளிமையான முறையாகும்.

 

இந்த மாதிரியான வேளைகலை தொழில் அறிந்தவர்கள் செய்தால்தான் பலன் கிடைக்கும் என்று என்ன வேண்டாம். அனைவரும் கையாலும் எளிமையாக முறைகளைதான் நான் பதிவிடுவேன்.

 

அனைவரும் செய்யலாம் தயக்கம் வேண்டாம். பயன்படுத்தி பயன் அடைவீர்.

ராசி பலன்

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் காணப்படும். பொன், பொருட்ச்சேர்க்கை சிலருக்கு உண்டாகும். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். நண்பர்களால் வருமான வாய்ப்புகள் உண்டாகும்.... மேலும் படிக்க

தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சமூகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள்... மேலும் படிக்க

இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் மறைமுகமாக சில இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். பயணங்கள் மூலம் புதிய... மேலும் படிக்க

அரசுப் பணிகளில் அனுகூலம் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். கடன் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். சேமிப்பு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும்.  நிலையான வருமானம்... மேலும் படிக்க

உயரதிகாரிகள் மூலம் ஒத்துழைப்புகள் ஏற்படும். குழந்தைகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். உல்லாச பயணம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தன வரவு மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். உடன் இருப்பவர்களால் புதிய... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். நீண்ட நாள் சேமிப்பு திட்டங்கள் பற்றிய எண்ணங்கள் உண்டாகும். பேச்சுக்களில் விவேகமும், பொறுமையும் வேண்டும். பெரியோர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத... மேலும் படிக்க

எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். சகோதரர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில்நுட்ப கருவிகளால் சில... மேலும் படிக்க

தடைகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற பாராட்டுக்கள் கிடைக்கும். பொன், பொருட்ச்சேர்க்கை உண்டாகும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். பேச்சு வன்மையால் காரிய சித்தி ஏற்படும். கணவன், மனைவிக்கு இடையே... மேலும் படிக்க

கலை பணிகளில் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிர்காலம் குறித்த சில முடிவுகளை எடுப்பீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி... மேலும் படிக்க

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதில் புது விதமான எண்ணங்களும் ஆசைகளும் உருவாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் சாதகமான சூழல்கள் ஏற்படும். பொழுதுபோக்கான விஷயங்களில் ஈடுபட்டு மனம்... மேலும் படிக்க


நண்பர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். கணிதம் சார்ந்த துறைகளில் வாய்ப்புகள் மேம்படும். விவசாயப்... மேலும் படிக்க

வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கற்பனை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை... மேலும் படிக்க