tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

முனிவர் ஒருவர் பயங்கரமான ஒரு காட்டில் வாழ்ந்துவந்தார். அவரோடு ஒரு நாயும் மிகுந்த விசுவாசத்தோடு இருந்தது. முனிவர் தான் உண்ட காய்கறி, பழங்கள் போக மிச்சத்தை அந்த நாய்க்கு அளிப்பார். அதுவும் அதை மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்தது. முனிவரோடு இருந்ததால் அதற்கு அசைவம் உண்ணும் ஆசை வரவில்லை.

 

ஒரு நாள் திடீரென ஒரு சிறுத்தை அந்த நாயை கண்டு அதை வேட்டையாட துரத்தியது. சிறுத்தையை கண்டு மிகுந்த அச்சம் கொண்ட அந்த நாய் முனிவரிடம் வந்து தஞ்சம் அடைந்தது. நடந்தவை அனைத்தையும் அறிந்த முனிவர், பயப்படவேண்டாம் நீ என்னுடைய குழந்தை மாதிரி உனக்கு எந்த ஆபத்தும் நேராமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி ஒரு மந்திரத்தை ஜபித்து தன் கமண்டலத்தில் உள்ள நீரை அந்த நாய் மீது தெளித்தார். உடனே அந்த நாய் ஒரு மிக பெரிய சிறுத்தையாக மாறியது. உடனே அது தன்னை விரட்டி வந்த சிறுத்தையை விரட்டி அடித்தது.

 

சிறுத்தையாக மாறினாலும் அந்த நாய் விசுவாசத்தோடு முனிவரின் காலையே சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தது. ஒரு நாள் திடீரென ஒரு புலி பயங்கர பசியோடு அந்த சிறுத்தையை துரத்த ஆரமித்தது. மீண்டும் என்ன செய்வதென்று தெரியாமல் முனிவரிடம் வந்து சரணடைந்தது அந்த சிறுத்தை. உடனே அவர் மீண்டும் மந்திரத்தை ஜபித்து தன் கமண்டலத்தில் உள்ள நீரை அந்த சிறுத்தை மீது தெளித்தார். உடனே அது பலம் பொருந்திய புலியாக மாறியது. பின் தன்னை துரத்தி வந்த புலியை ஓட ஓட விரட்டியது.

 

ஆனால் இப்போது புலி பழைய மாதிரி காய்கறி பழத்தை எல்லாம் உண்பது கிடையாது. முனிவருக்கு தெரியாமல் அவ்வப்போது வேட்டைக்கு சென்று மான், முயல் என எது கிடைக்கிறதோ அதை வேட்டையாடி உண்டு வந்தது. இப்படியே நாட்கள் செல்ல ஒரு நாள் மிக பெரிய யானை ஒன்று அந்த புலியை துரத்தியது. மீண்டும் அந்த புலி முனிவரிடம் தஞ்சம் அடைய அவர் அதை ஒரு பலம் பொருந்திய சிங்கமாக மாற்றினார்.

 

காட்டிலே இது தான் பலம் பொருந்திய சிங்கம் என்பதால், தான் காட்டிற்கு ராஜா என்ற கர்வத்தோடு திரிந்தது. அதோடு முனிவரையும் எப்போவாவது ஒருமுறை தான் வந்து பார்த்தது. மற்ற நேரங்களில் தனக்கு பிடித்த மிருகத்தினை வேட்டையாடி கொன்று உண்டு கொண்டிருந்தது. அப்போது திடீரெனெ ஒருநாள் அந்த காட்டிற்கு வினோதமான மிருகம் ஒன்று வந்தது. அந்த சிங்கத்தை விட மிக வலிமையாக இருந்தது. அது இந்த சிங்கத்தை துரத்த ஆரமிக்க மீண்டும் அந்த சிங்கம் முனிவரிடம் தஞ்சம் அடைந்தது.

 

முனிவரோ மீண்டும் மந்திரத்தை ஜபித்து அந்த சிங்கத்தை சக்திவாய்ந்த வேறொரு மிருகமாக மாற்றினார். அந்த மிருகமானது இப்போது காட்டில் எதையுமே விட்டு வைக்காமல் அனைத்தையும் கொன்று தின்றுகொண்டிருந்தது. இந்த மிருகம் வரும் ஒளி கேட்டாலே மற்ற மிருகங்கள் ஓடி ஒளிந்தன. இதற்கு கர்வம் தலைக்கேறியது. நம்மை கண்டு இந்த காட்டில் அனைவருமே அஞ்சி நடுங்குகின்றனர். ஆனால் இந்த முனிவர் மட்டும் எப்போதும் நம்மை கண்டு அஞ்சுவதே இல்லை. ஆகையால் அவரை கொள்ளவேண்டும் என்று அந்த மிருகம் தீர்மானித்தது.

 

ஒருநாள் முனிவரை கொள்வதற்காக அந்த மிருகம் பாய்ந்து வந்தது. மிருகத்தின் நோக்கத்தை நன்கு அறிந்த முனிவர் மீண்டும் மந்திரத்தை ஜபித்து அதை ஒரு நாயாகவே மாற்றிவிட்டார். 

 

நீதி: கடவுள் நமக்கு கொடுத்ததை வைத்து நாம் அதை பயனுள்ளதாக மாற்றவேண்டுமே தவிர அதை வைத்து எதையும் அழிக்க நினைக்க கூடாது. கடவுளிடம் இருந்து பல வரங்களை பெற்ற அசுரர்கள் அதை தவறாக பயன்படுத்த, அவர்களின் நிலை என்ன ஆனது என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.

 

கவிதா சரவணன்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க