tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

எங்கள் ஊர் அதியமான் கோட்டையானது தர்மபுரி மாவட்டத்தின் தலைநகரும் சங்ககாலத்தில் தகடூர் என அழைக்கப்பட்ட நகரான தருமபுரியில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த கோட்டையாகும். இவ்வூரும் இப்பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இக்கோட்டையில் காலபைரவர் கோயில், சோமேசுவரர் கோயில், சென்னராயப் பெருமாள் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன. வழிவழியாக அதியமான் கோட்டை இருந்த இடமாக கூறப்பட்ட இடத்தில் 1981, 1982 ஆகிய ஆண்டுகளில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சங்ககாலத்ததாக கருதப்படும் கறுப்பு-சிவப்பு பானை ஓடுகள், வண்ணம் பூசப்பட்ட பானை ஓடுகள், வில் அம்பு போன்ற கீறல்கள் உள்ள பானை ஓடுகள் கிடைத்தன. மேலும் சுடுமண் மணிகள், இரும்பு ஆணிகள், போன்றவையும் கிடைத்தன. இங்கு மேடையுடன் கூடிய கெட்டியான களிமண்ணால் அமைக்கப்பட்ட தரைப் பகுதியும் கண்டறியப்பட்டது. இவற்றின் காலம் கி.மு.100 முதல் 300வரையிலான காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது.அதியமான் கோட்டை என்று அழைக்கப்படும் இந்த இடத்தில்தான் சங்க காலத்தில் இருந்து கோட்டை இருந்தது என்பதற்கு சான்றுகள் இல்லை. இங்குள்ள கோயில் கல்வெட்டுகளில் இந்த ஊர் மகேந்திர மங்கலம் என்றும் இவ்வூர் இறைவன் மயிந்தீசுவரமுடையார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கிராமத்தைச் சுற்றி முட்டை வடிவிலான கோட்டையின் எஞ்சிய பகுதியில் சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையினர் அகழாய்வு நடத்தினர். அவ்வாறு நடத்திய அகழாய்வில் இக்கோட்டை கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று முடிவு செய்தனர். இதன்படி பார்த்தால் பிற்கால சோழர் காலத்தில் இங்கிருந்து ஆண்டுவந்த இராசராச அதியமான் என்னும் அதியமான் மரபின் சிற்றரசன் காலத்தில் இக்கோட்டை கட்டப்பட்டிருக்கலாம் 

 

எங்கள் ஊர் அதியமான் கோட்டையில் சென்ன ராய பெருமாள் கோவில் என்ற வைணவ கோயில் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயில் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது 

 

இக்கோயிலில் எந்தக் கல்வெட்டுகளும் இல்லை என்றாலும், இக்கோயிலின் மகாமண்டபத்தின் விதானத்தில் மகாபாரத, இராமாயண காட்சிகளை விளக்கும் பழங்கால சுவர் ஓவியங்கள் உள்ளன. இவை சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.இக்கோயில் திருவுண்ணாழி, இடைநாழி, மகாமண்டபம் ஆகியவற்றைக் கொண்ட கோயிலாகும். திருவண்ணாழியில் திருமகள், நிலமகள் ஆகியோருடன் சென்னராயப் பெருமாள் நின்ற கோலத்தில் உள்ளார். பெருமாளில் நான்கு கரங்களில், பின்னிரு கரங்களில் சங்கும், சக்கரமும் முன்னிரு கரங்களில் வலக்கை வரத முத்திரையுடனும், இடக்கை தொடையில் பதிந்தபடியும் உள்ளன. அர்த்தமண்டபத்தில் வலப்புரத்தில் ஆழ்வார்களான நம்மாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகிய மூவரின் திருஉருவங்கள் உள்ளன. கோயிலின் விமானம் மூன்று தளங்களைக் கொண்டு கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. 

 

மேலும் அதியமான் கோட்டையில் காலபைரவர் திருக்கோயில் உள்ளது

இக்கோயிலை கட்டியது அதியமான் என கூறப்படுகிறது ஆனால் இதற்கு ஆதாரமில்லை. உண்மையில் இக்கோயிலைக் கட்டியது யார் என கல்வெட்டுகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. போசள 

மன்னனான வீர நரசிம்மனின் தானைத்தலைவனான 

மாதவ தண்ட நாயக்கனின் அமைச்சனான பரமெய் சகானி என்பவராலேயே இக்கோயில் கட்டப்பட்டது என கி.பி 1235 ஆம் ஆண்டு கல்வெட்டு குறிக்கிறது. அக்காலத்தில் இந்த கோயில் பரமேசுவரமுடையார் திருக்கோயில் என அழைக்கப்பட்டு வந்ததாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

 

முத்துக்குமார்

 சஞ்சீவி மலை

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க