tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

எங்கள் ஊர் கமுதியானது இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இது கவின்மிகு முல்லை திருநகர் என்றும் அழைக்கப்படுகிறது.உலகில் மிகப்பெரிய சூரிய மின் சக்தி நிலையம் இங்கு செயல்பட்டு வருகிறது
கமுதி பேரூராட்சி இராமநாதபுரத்திலிருந்து 85 கி.மீ தொலைவிலும், மானாமதுரையிலிருந்து 39 கி.மீ தொலைவில் உள்ளது. பரமக்குடி, மதுரை, அருப்புக்கோட்டை, இராமநாதபுரத்திலிருந்து கமுதிக்குப் பேருந்து வசதிகள் உள்ளது. கமுதி நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது
இது 5.10 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும்,101 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
செவ்வாய்க் கிழமை நடைபெறும் சந்தை சுற்றுவட்டாரத்தில் பிரபலம் ஆகும். அருகில் உள்ள கிராமங்களிலிருந்து மக்கள் சந்தையில் தேவையான பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கிச் செல்வர்.
கமுதியில் உள்ள பள்ளிகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகளில் சில. இங்குள்ள பள்ளிகள் பரமக்குடி கல்வி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டவை. சத்திரிய நாடார் ஆண்கள் தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், மீனாட்சி பாலபோதினி பெண்கள் தொடக்கப்பள்ளி, சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சத்திரிய நாடார் மெட்ரிகுலேசன் பள்ளி, ரஹ்மானியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, கௌரவ உயர்நிலைப்பள்ளி ஆகியவை இங்குள்ள பள்ளிகள் ஆகும். கமுதி கோட்டைமேட்டில் பசும்பொன் திரு. உ. முத்துராமலிங்கத்தேவர் நினைவுக் கல்லூரி உள்ளது.
கமுதியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. இக்கோவில் ஊரின் நடுவில் அமைந்திருக்கிறது. மேலும் வங்காருபுரம் எனும் கிராமத்தில் உள்ள ‌‌‌பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. மற்றொரு சிறப்புமிக்க கோவில் ஸ்ரீமீனாட்சி சமேத சொக்கநாதர் ஆலயம் ஆகும். இது பல ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் மன்னர்களால் கட்டப்பட்டு இன்றும் இராமநாதபுரம் சமஸ்தானத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சேகனாதபுரம் அருகில் மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று இருந்தது .அது பிற்காலத்தில் வெறும் கட்டடம் மட்டுமே உள்ளது. அதே ஊரில் முசுலீம் மக்கள், இந்து சேர்த்து வழிபடக் கூடிய காதரியம்மன் தர்கா ஒன்று உள்ளது கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் இங்குக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் பதுவை புனிதர் அந்தோணியாரின் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் ஜூன் மாதம் முதலாம் திங்கள் கொடியேற்றபட்டுத் திருவிழா நடைபெறும். கிறிஸ்தவர்கள் மட்டும் அல்லாது மற்ற சமய மக்களும் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள். இந்த ஆலயத்தின் உள்ளே 1856 ஆண்டு இறந்த வெளிநாட்டுக் கிறிஸ்தவ மதபோதகர் கல்லறையும் உள்ளது. அவரின் பெயர் தந்தை சர்டூரியா. கர்த்தநாதர் சுவாமி என்று இவரை அங்குள்ள மக்கள் அழைக்கின்றனர். அவர் வாழ்ந்த காலத்தில் அவர் இங்குள்ள மக்களின் காலரா நோயைப் போக்க அரும்பாடுபட்டதாகவும், இறுதியில் அவரையே காலரா நோய் தாக்க அவர் இறந்தார். அவரின் உடல் இங்கே கமுதி ஆலயத்தினுள் உள்ளது. 

வருடாவருடம் பங்குனி மாதம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெறும் பங்குனித் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. சுமார் மூன்று வாரங்கள் நடைபெறும் விழாக்கள் கோவிலில் காப்புக்கட்டுடன் தொடங்கும். பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து அம்மனை வழிபட்டு வருவார்கள். பின் பொங்கல், அக்கினிச் சட்டி எடுத்தல், தீ மிதித்தல், திருவிளக்கு பூஜை, முளைப்பாரி ஆகியன வெகுவிமரிசையாக நடைபெறும். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் ஆன்மீக விழா மற்றும் தேவர் ஜெயந்தி விழா அக்டோபர் மாதத்தில் வெகு விமரிசையாக நடைபெறும் மேலும் முத்தாலங்குளம் கிராமத்தில் உப்பிடாதி அம்மன் புரட்டாசி திருவிழா மேலவீட்டார் வகையறாக்கள் தலைமையில் வருடா வருடம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

கமுதியில் குண்டாற்றின் கரையில் ஒரு கோட்டை உள்ளது. இது சிவகங்கை மன்னர்களால் கட்டப்பட்டது. இந்திய விடுதலைக்கு அரும்பாடுபட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை சிலகாலம் இக்கோட்டையில் ஆங்கிலேயர்களிடம் இருந்து மறைந்து வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த இடம் கோட்டைமேடு என்று அழைக்கப்படுகிறது. 

சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவகம் கமுதிக்கு அருகே உள்ள பசும்பொன் என்ற கிராமத்தில் உள்ளது 

கமுதியில் குண்டாறு பாய்கிறது. மேலும் கண்ணார்பட்டி ஊருணி, செட்டிஊருணி என நீர்நிலைகள் இருந்தாலும், அவை மழைக்காலத்தில் மட்டுமே நிறைகின்றன. 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியின் அடையாளமாகத் திகழும் மன்னர் விஜய ரெகுநாத சேதுபதி கட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க கமுதி கோட்டை பல வரலாற்றுத் தகவல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
.கி.பி.1713 முதல் கி.பி.1725 வரை சேதுநாட்டை ஆண்ட திருவுடையத்தேவர் என்ற முத்து விஜய ரெகுநாத சேதுபதி மன்னர் பிரான்ஸ் நாட்டுப் பொறியியல் வல்லுநர்கள் உதவியுடன் வட்ட வடிவில் கமுதியில் குண்டாற்றின் கரையில் இந்த கோட்டையை கட்டினார். இக்கோட்டை உள் கோட்டை, வெளிக்கோட்டை என இரண்டு அடுக்கில் கட்டப்பட்டது.கோட்டைகளுக்குள் செல்ல இரண்டடுக்குப் பாதுகாப்பு முறை இருந்துள்ளது. இரு கோட்டைகளுக்கும் இடையில் மேற்கில் குடிநீர் குளம், வடக்கில் நெற்களஞ்சியம், தெற்கில் பங்களா இருந்துள்ளது.ஒவ்வொரு கோட்டைக்கும் ஒன்று என இரு நுழைவு வாயில்கள் இருந்துள்ளன. உள் கோட்டை நுழைவு வாயில் மற்றும் நெற்களஞ்சியம் இருந்த இடத்தில்தான் தற்போது கோட்டை முனீஸ்வரர் கோயில் உள்ளது. தற்போது உள்ளது உள் கோட்டையும் பங்களாவும் மட்டுமே. வெளிக்கோட்டை ஆங்கிலேயர்களால் இடித்து அகற்றப்பட்டுவிட்டது.
சுவரின் இரு பக்கமும் பாறைக் கற்களை வைத்து அதன் நடுவில் செங்கல், சுண்ணாம்பு சாந்தை நிரப்பி இக்கோட்டையை கட்டியுள்ளனர். இக்கோட்டையின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் குண்டாற்றின் கரையில் பலவிதமான பாறைகள் உள்ளன. இப்பாறைகள் உடைக்கப்பட்டு கோட்டை கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது. வெட்டி எடுக்கப்பட்ட பெரிய அளவிலான பாறைகள் தற்போதும் அப்பகுதியில் கிடப்பது இதை உறுதியாக்குகிறது.
கி.பி.1877-ம் ஆண்டு குண்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இக்கோட்டையின் பல பகுதிகள் சேதமடைந்தன. வெள்ளத்தின் காரணமாகவோ, பெயர்த்தெடுத்ததன் காரணமாகவோ இக்கோட்டையில் பொருத்தப்பட்டிருந்த கற்கள் தற்போது பெருமளவில் இல்லை. கற்கள் பெயர்ந்து போன நிலையில் கற்கோட்டையாக இல்லாமல் வெறும் செங்கல் கோட்டையாகவே இப்போது காட்சியளிக்கிறது.
சேதுநாட்டின் அனைத்துக் கோட்டைகளையும் இடித்தபோது, இக்கோட்டையையும் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியினர் இடித்துவிட்டனர். அவர்கள் இடித்தது போக எஞ்சிய கோட்டையின் பகுதிகளே தற்போது நாம் காண்பது. இக்கோட்டையை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பராமரித்து வருகிறது 

கமுதி சூரிய மின் திட்டம் (Kamuthi Solar Power Project) என்பது 2,500 ஏக்கர்கள் (10 km2) பரப்பில் நிறுவப்பட்டுள்ள ஒளிமின்னழுத்த மின் நிலையம் ஆகும்ஒரு குறிப்பிட்ட பகுதியில் 648 மெகாவாட் மின் உருவாக்கும் திறன் கொண்ட, உலகின் 12வது பெரிய பெரிய திறன் கொண்ட சூரிய சக்தி பூங்காவாக இது உள்ளது.
13 ஜூன் 2016 அன்று சூரிய பூங்காவைத் தேசிய கட்டமைப்புடன் இணைக்க ஐந்து துணை நிலையங்களை ஏபிபி நியமித்தது.
கமுதி சூரிய மின்சக்தி திட்டம் 21 செப்டம்பர் 2016 அன்று ₹4,550 கோடி (2020 இல் நிகர மதிப்பு ₹49 billion or US$610 மில்லியன்) செலவில் அமைக்கப்பட்டுள்ளது. சூரிய ஆலையில் 2.5 மில்லியன் சூரிய தொகுதிகள், 380,000 அடித்தளங்கள், 27,000 மீட்டர் கட்டமைப்புகள், 576 மாறுமின் எதிர் மாற்றிகள், 154 மின்மாற்றிகள் மற்றும் கிட்டத்தட்ட 6,000 கி.மீ. கம்பி வடங்கள் நிறுவப்பட்டுள்ளன.சூரிய பதாகைகளைத் தாங்குவதற்குத் தேவையான கட்டமைப்புகளை நிர்மாணிக்க 30,000 டன் கால்வனேற்றப்பட்ட எஃகு தேவைப்பட்டது. இந்த திட்டத்தை 8 மாதங்களுக்குள் முடிக்க சுமார் 8,500 தொழிலாளர்கள் ஒரு நாளைக்குச் சராசரியாக 11 மெகாவாட் திறன் கொண்டதாக நிறுவினர்
முழு சூரிய பூங்காவும் தமிழ்நாடு மின்பகிர்மான நிறுவனத்துடன் 400 கி.வி துணை மின்நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.சூரியசக்தி பலகைகள் சுய-மின்னேற்றம் செய்யப்பட்ட பொறியன்கள் மூலம் தினமும் சுத்தம் செய்யப்படுகின்றன.

ராசி பலன்

பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உருவாகும். எதிலும் பற்றற்ற தன்மை உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். சிந்தனையின் போக்கில் புதுமைகள் பிறக்கும். கடினமான வேலைகளையும் எளிமையாகச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான... மேலும் படிக்க

அரசு சார்ந்த பணிகளில் துரிதம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். மனைவி வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். மனவள கலையில் நாட்டம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் மரியாதை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் எண்ணங்கள் ஈடேறும்.... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். பூர்வீகத்தில் இருந்துவந்த  பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். இடமாற்றம் தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய தொழில்நுட்பக் கருவிகள் வாங்குவீர்கள்.... மேலும் படிக்க

விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். புதிய முயற்சிகளால் அலைச்சல் உண்டாகும். விளையாட்டுக்களில் கவனத்துடன் செயல்படவும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். புதிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.... மேலும் படிக்க

ஆடம்பர எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். தோற்றப் பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு சிறு புதுமைகள் ஏற்படும். மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உங்கள்... மேலும் படிக்க

மனதில் புதுவிதமான தெளிவுடன் காணப்படுவீர்கள். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். வாகனப் பழுதுகளைச் சீர் செய்வீர்கள். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப அனுகூலம்... மேலும் படிக்க

பணி நிமித்தமான புதிய முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பழைய பிரச்சனைகள் குறையும். வியாபார இடமாற்ற சிந்தனைகள் உருவாகும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்புத்... மேலும் படிக்க

வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். எண்ணிய சில பணிகள் நினைத்தபடி நிறைவேறும்.... மேலும் படிக்க

வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் தெளிவுகள் உண்டாகும். வியாபார பணிகளில் ஒரு விதமான மந்தத்தன்மை உண்டாகும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள்.... மேலும் படிக்க


எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதளவில் குழப்பங்கள் ஏற்படும். செயல்களில் நிதானத்தை கடைபிடிக்கவும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனம் வேண்டும்.... மேலும் படிக்க

வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவு மேம்படும். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரிய செயல்கள் சாதகமாக முடியும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும்.... மேலும் படிக்க

ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசுப் பணிகளில் ஆதாயம் ஏற்படும். தன நெருக்கடிகள் குறையும். மாறுபட்ட அணுகுமுறைகளால் புதுமைகளை ஏற்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகள் மூலம் சில விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.... மேலும் படிக்க