tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

எங்கள் ஊர் செஞ்சி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி வட்டம் மற்றும் செஞ்சி ஊராட்சி மன்றம் ஆகியவற்றின் நிர்வாக தலைமையிடமும்  பேரூராட்சியும் ஆகும். இது செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்

சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் எனப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது

இப்பேருராட்சியின் சிறப்பம்சமாக வரலாற்று புகழ்மிக்க தேசிங்கு ராஜா ஆட்சிப்புரிந்த செஞ்சிக் கோட்டை உள்ளது. இப்பேருராட்சி ஒரு சுற்றுலா தலமாகும். இது புதுச்சேரி - திருவண்ணாமலை - பெங்களூரு நெடுஞ்சாலை மற்றும் சென்னை நெடுஞ்சாலை மற்றும் விழுப்புரம் - ஆற்காடு, நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இப்பேருராட்சியை சுற்றி சுமார் 60 கிராமங்கள் உள்ளன.

செஞ்சி பேரூராட்சி மாவட்டத் தலைமையிடமான விழுப்புரத்திலிருந்து 37 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கே உள்ள தொடருந்து நிலையம், 27 கிமீ தொலைவில் உள்ள திண்டிவனம் ஆகும். இதன் மேற்கே திருவண்ணாமலை 37 கிமீ; வடக்கே சேத்துப்பட்டு 27 கிமீ மற்றும் ஆரணி 54 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

செஞ்சி நகரை பொறுத்தவரை புதுச்சேரி, திண்டிவனம், சென்னை மற்றும் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, பெங்களூரு ஆகிய நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 66 இந்நகரை கடந்து செல்கிறது. அதேபோல் மாநில நெடுஞ்சாலை 4 உம் விழுப்புரம் மற்றும் ஆரணி, ஆற்காடு மற்றும் வேலூர் ஆகிய பெரிய நகரங்களை இணைக்கும் வகையில் சாலை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

11.66 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 156 தெருக்களையும் கொண்டது எங்கள் செஞ்சி பேரூராட்சி.கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 92 மீட்டர் (301 அடி) உயரத்தில் இருக்கின்றது.

செஞ்சி வட்டம் , தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களில் ஒன்றாகும்.இந்த வட்டத்தின் தலைமையகமாக செஞ்சி நகரம் உள்ளது.இந்த வட்டம் மேலக்கூர், வல்லம், சத்தியமங்கலம் மற்றும் செஞ்சி என நான்கு உள் வட்டங்களும், 166 வருவாய் கிராமங்களும் கொண்டது.[2]மேலும் இவ்வட்டத்தில் செஞ்சி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

இவ்வட்டத்தில் அனந்தபுரம் பேரூராட்சி உள்ளது. 

 

தமிழ்நாட்டில் செஞ்சி கோட்டையைப்போல் சிறப்பு மிக்கது வேறு எதுவும் இல்லை எனலாம். இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைந்தது முக்கோண வடிவமாக அமைந்துள்ளது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது. சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் எனப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது. இக்கோட்டை நமது பண்பாட்டை அறிய உதவும் சிறந்த தொல்பொருள் சின்னமாகும்.செஞ்சியிலிருந்து 1 கி.மீ தொலைவில் செஞ்சிக் கோட்டை உள்ளது.செஞ்சிக் கோட்டையை சிறிய அளவில் கட்டியவர் ஆனந்த கோன் என்பவர். இவர் 11 வயதிலேயே மன்னராக முடிசூட்டிக் கொண்டவர். இவரைத் தொடர்ந்து இவர் பரம்பரையினர் 300 வருடமாக செஞ்சி கோட்டையை ஆண்டு வந்தனர். ஆனந்த கோன், ஆனந்தகிரி அல்லது ராஜகிரி கோட்டையை கட்டினார். இவரின் மகன் கிருஷ்ணகோன் செஞ்சி கோட்டையை விரிவுப்படுத்தி மேலும் உட்புற கிருஷ்ணகிரி கோட்டை கட்டி கொத்தளங்கள் படைகளை விரிவுபடுத்தி ஆட்சி செய்தார். இக்கோட்டையை பல மன்னர்கள் கைப்பற்ற முயன்றனர் இவர்கள் வலிமை குன்றிய பொழுது இக்கோட்டையை பிற மன்னர்கள் ஆக்கிரமித்து ஆட்சி செய்தனர். 

 

கிருஷ்ணகிரி, இராஜகிரி, சந்திரகிரி என்ற மூன்று குன்றுகளை வளைத்து, சுமார் 5 கி.மீ. சுற்றளவில் முக்கோண வடிவில் இப்போது இருக்கும் செஞ்சிக் கோட்டை கட்டப்பட்டுள்ளது. முக்கோண வடிவிலுள்ள இக்கோட்டை கீழ்க்கோட்டை (Lower Fort) எனப்படும். ஒவ்வொரு குன்றின்மீதும் பாதுகாப்பான கோட்டையும் கொத்தளங்களும் உள்ளன. கீழ்க்கோட்டையினுள் நுழைய ஆர்க்காடு அல்லது வேலூர் வாயில், பாண்டிச்சேரி வாயில் என்ற இரு வாயில்கள் உள்ளன. 

 

திசைகளை வைத்துப் பார்ப்பின் கிருஷ்ணகிரிக் கோட்டை வடக்கிலும், இராஜகிரிக் கோட்டை மேற்கிலும், சந்த்ரயன் துர்க்கம் தெற்கிலும் உள்ளது. இம்மூன்று மலைக்கோட்டைகளின் உச்சிகளுக்கும் செல்லப் படிக்கட்டு வசதி உள்ளது. இம்மூன்றில் இராஜகிரிக் கோட்டையே மிகவும் உயர்ந்தது. இதன் உயரம் 235 மீட்டர் ஆகும். 

 

செஞ்சி-திருவண்ணாமலை சாலைக்கு வெகு அருகில் லையின் வலதுபுறம் கிருஷ்ணகிரி மலைக்கோட்டை உள்ளது. மலைமீது ஏறி உச்சிக்குச் செல்லும் வழியில் இரு பெரிய தானியக் களஞ்சியங்களைக் காணலாம். இதையடுத்துத் தெய்வ மில்லாத ரெங்கநாதர் கோவிலும் சிப்பாய்கள் தங்கிய கட்டடமும் இதர சில கட்டடப் பகுதிகளும் உள்ளன. 

 

செஞ்சி-திருவண்ணாமலை சாலையின் இடதுபுறம் சாலையிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இராஜகிரி மலைக்கோட்டை உள்ளது. இராஜகிரிக்குச் செல்லும் வழியில் பட்டாபி ராமர் கோவில் உள்ளது. 

 

செஞ்சியிலிருந்து 16 கி.மீ. தொலைவில் தளவனூர் என்ற இடம் உள்ளது. இங்குள்ள பஞ்ச பாண்டவர் மலையின் தென் பகுதியில் பல்லவர்காலக் குடைவரைக்கோவில் ஒன்று உள்ளது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் (கி.பி. 600-630) இக்கோவில் குடையப்பெற்றதாக அறியப்படுகிறது. கல்வெட்டுகளிலிருந்து இக்குடைவரைக் கோவில் சத்ரு மல்லீஸ்வரர் என்ற சிவாலயமாக எழுப்பப்பட்டதாக அறியப்படுகிறது. 

 

தளவனூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் மண்டகப்பட்டு குகைக்கோயில் உள்ளது. இக்குகைக் கோவிலை அமைத்தவர் விசித்திர சித்தனான மகேந்திரவர்ம பல்லவர் ஆவார். மற்றும் செஞ்சியிலிருந்து 23 கிமீ தொலைவில் கெங்கவரம் மலை பகுதியில் துருவன் கோட்டை மற்றும் மொக்கை ஓடை அருவியும் உள்ளது.25 கி.மீ தொலைவில் கல்யாணம் பூண்டி கிராமத்தில் ஒரு கொத்தளமும், அரங்கநாதசுவாமி கோயிலும் உள்ளது. 

 

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' என 'அமர்க்களம்' படத்தில் அஜித் ஒரு கோயிலில் நின்றபடி பாடுவார். அந்தக் கோயில் இப்போதும் ஆரவாரம் இல்லாத தனிமையில் அமைதியாக பக்தி மணம் பரப்பிக் கொண்டிருக்கிறது. செஞ்சிக் கோட்டையின் ஒரு பகுதியாக இருக்கும் வெங்கடரமணர் கோயில்தான் அது.செஞ்சி வெங்கட்ரமணசாமி கோவில் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட செஞ்சியிலுள்ள மிகப்பெரிய கோவிலாகும். செஞ்சி கோட்டையில் அமந்துள்ள இது, முத்தையாலு நாயக்கர் காலத்தில் கட்டப்பெற்றதாகும் (

கோட்டைப் பகுதியில் அரங்கநாதார் கோயில், வேணுகோபாலசாமி கோவில், வெங்கடரமணசாமி கோவில், பட்டாபி இராமசாமி கோவில் ஆகிய கோயில்கள் அமைந்துள்ளன. இவற்றில் பிரதானமானது வெங்கடரமணசாமி கோவில்ஆகும் 

 

மேலும் செஞ்சியில் 19 நூற்றாண்டைச் சேர்ந்த அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலும் உள்ளது.இக்கோயிலில் அருணாசலேஸ்வரர், பாலகுஜாம்பிகை சன்னதிகளும், விநாயகர், நவகிரகம், முருகர் உபசன்னதிகளும் உள்ளன.

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

 

கு.ராஜகுரு

ராமலிங்காபுரம்

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க