tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

தஞ்சன் என்ற அரக்கனை சிவபெருமான் போரிட்டு ,சம்ஹாரம் செய்ததால் தஞ்சன் ஊர் தஞ்சாவூர் ஆயிற்று.

 தஞ்சை வெண்ணாற்றங்கரை என்ற இடத்தில் உள்ள சிவாலயத்தில் சிவபெருமானின் பெயர் தஞ்சபுரீஸ்வரர்.

  ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோவிலும் , நந்தியும் மிகவும் பிரும்மாண்டமானவை.

அந்தப் பெரிய கோவில் என்னும் பிரஹதீஸ்வரர் ஆலயம் , உலகப் பிரசித்தி பெற்ற WORLD HERITAGE MONUMENT என்ற அமைப்பின் கீழ் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெரிய கோவிலைச் சுற்றியுள்ள அகழி , அருகிலுள்ள சிவகங்கைத் தோட்டம் , அதிலுள்ள ராஜராஜ சோழன் காலத்து ஆலமரம் , ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் உள்ளது.

     வடக்கு , மேற்கு , கிழக்கு அலங்கம்களில்

ஆங்காங்கே உள்ள கோட்டை மதில் சுவர்கள் பழமையைப் பறை சாற்றுகின்றன.

கீழ அலங்கம் முடிவில் கோட்டை நுழைவு வாசல் ஒன்று இருந்தது.சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அது இடிக்கப்பட்டது.

அதன் எதிரில் பீரங்கி மேடு என்ற இடத்தில் , கோட்டை பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட பீரங்கியை இன்றும் காணலாம்.

    தெற்கு வீதியில் , சரபோஜி மன்னர் காலத்து கட்டடம் ஒன்று உள்ளது.

இரண்டாம் சரபோஜி மன்னர் காலத்தில் நிறுவப்பட்ட சரஸ்வதி மஹால் ஆயிரக்கணக்கான பல அரிய ஓலைச் சுவடிகளைக் கொண்டது. சிற்பக்கலை ,ஆகமம் , மருத்துவம் ,இசை , நாட்டியம் , ஜோஸியம் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்ற இடம்.

  சரபோஜி மன்னரால் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து அழைத்து வரப்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் வைர வியாபாரம் , பட்டு நெசவு முதலியவற்றில் ஈடுபட்டார்கள்.

   பல கலைகளின் பிறப்பிடம் தஞ்சாவூர்.

பரத நாட்டியம் , கர்நாடக சங்கீதம் , நாதஸ்வரம் , கரகாட்டம் , பொய்க்கால் குதிரை ஆட்டம் , பொம்மலாட்டம் , ஹரிகதா காலட்சேபம் , பாகவத மேளா 375 ஆண்டுகளுக்கும் மேலாக , இன்றளவும் மெலட்டூர் , சாலியமங்கலம் மற்றும் வேப்பத்தூரிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூரில் தயாரிக்கப்படும் வீணை , மிருதங்கம் இவைகளுக்கு வாத்தியக் கலைஞர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

 தஞ்சாவூர் மேல வீதியில் உள்ள பங்காரு காமாட்சி அம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தமானது .காஞ்சியிலிருந்து , எதிரி மன்னர்களின் படையெடுப்பு சமயத்தில் , பாதுகாப்பு வேண்டி , தஞ்சாவூருக்கு எடுத்து வரப்பட்டார். 1786 ம் ஆண்டு மராட்டிய மன்னர் தற்போது உள்ள இடத்தில் அம்பாளை ஸ்தாபிதம் செய்தார்.இந்தக் கோவிலில் நவராத்திரி விழா மிகவும் விசேஷம்.இக்கோவில் காஞ்சி காமகோடி பீடத்தின் நிர்வாகத்தில் உள்ளது.வாழைநாரில் தொடுக்கப்பட்ட வாசனை உள்ள பூக்கள் மட்டுமே கோவிலில் ஏற்கப்படுகிறது .கோவிலின் பின்புறம் உள்ள தெருவில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரி வாழ்ந்த இல்லம் உள்ளது.

    ஆண்டுதோறும் வைகாசி மாதம் தஞ்சாவூரில் முத்துப்பல்லக்கு விழா நடைபெறும்.கீழ வீதி , தெற்கு வீதி , மேல வீதி , வடக்கு வீதி ஆகிய நான்கு வீதிகளிலும் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட , மின் விளக்குகளுடன் கூடிய , அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்குகளில் , சிறிய , பெரிய கோவில்களின் விநாயகர்கள் வீதி உலா வருவதைக் காணக் கண் கொள்ளாக் காட்சியாகும்.

ஒவ்வொரு பல்லக்கு முன்பும் தனித்தனியாக நாதஸ்வரக் கோஷ்டிகள் ஆங்காங்கே நின்றுகொண்டோ அல்லது ரோடில் தார்ப்பாயில் அமர்ந்து கச்சேரிகள் செய்வார்கள்.சங்கீத ரசிகர்களுக்கு , செவிக்கு நல்ல இசை விருந்து கிடைக்கும்.தஞ்சாவூரின் முக்கிய விழாவாகும் இது.

  தஞ்சாவூரில் சில கலைகள் அழிந்து வருவதால் ,அதைச் சார்ந்த கலைஞர்களும் நலிவடைந்து வருகிறார்கள்.அப்படிப்பட்ட சிலவற்றைப் பார்க்கலாம் ;-

தஞ்சாவூர்க் கதம்பம் :-

----------------------------------------

வெட்டிவேர் , மருதாணிப் பூ , தாமரைப் பூ , தாழம் பூ , நீல சங்குப் பூ , மரு , மரிக்கொழுந்து ,மாசிப்பச்சை , கதிர்ப்பச்சை போன்ற 27 வகையான சரக்குகளைக் கொண்டு தொடுக்கப்பட்ட கதம்பம் , தஞ்சாவூரில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை பூக்கடைகளில் கிடைத்து வந்த பூச்சரம் -- தஞ்சாவூர்க் கதம்பம்.

தஞ்சாவூர் கதம்பத்தை முழம் போட்டு வாங்கி என்ற ஒரு சினிமாப் பாட்டும் உண்டு.

நெய் வறுவல் சீவல் :-

---------------------------------------

தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் ஒரு குறிப்பிட்ட கடையில் மட்டும் கிடைத்து வந்தது.

டிகிரி காப்பி :-

-------------------------

ஆனந்தா லாட்ஜ் , மங்களாம்பிகா , சரவண பவன் ஹோட்டல்களில் கிடைத்தது.

கதம்பம் , நெய் வறுவல் சீவல் , டிகிரி காப்பி இவையெல்லாம் இப்போது கிடைப்பதில்லை.

வீணை ;-

---------------

தஞ்சாவூரில் தயாராகும் வீணைகளுக்குத் தனி மதிப்பு உண்டு.சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை தினமும் பத்து வீணைகள் செங்கோட்டை பாசஞ்சரில் சென்னைக்கு வாங்கிச் செல்வார்கள்.இப்பொழுது ஒரு வீணை கூட சென்னை செல்லும் ரயில்களில் பார்க்க முடியாதது நமது துரதிர்ஷ்டமே. தெற்கு வீதியில் கோ-ஆபரேடிவ் சொசைட்டி மூலம் தயாரிப்பு மற்றும் விற்பனை நிலயம் உள்ளது.சிவகங்கை கார்டனில் வீணைக்கான " குடம் " தயாரிக்கப்படுகிறது .ஆயினும் வீணைத் தயாரிப்பு தொய்வு கண்டுள்ளது.

கரகாட்டம் :-

----------------------

நாட்டுப்புறக் கலைகளான கரகாட்டம் , பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடுபவர்கள் தஞ்சாவூரில் ஒரு காலத்தில் நிறைய பேர்கள் இருந்தார்கள்.இப்பொழுது இந்தக் கலைஞர்கள் சிலர் உள்ளனர்.அவர்களது வருமானமும் ஒன்றும் பிரகாசமாக இல்லை.

தஞ்சாவூர் ஓவியம் :-

--------------------------------------

தங்கத் தகடுகள் , வெள்ளி ரேக்குகள் பதித்த ராதாகிருஷ்ணன் , ராமர் பட்டாபிஷேகப் படங்கள் இல்லாத வீடே தஞ்சை மாவட்டத்தில் இல்லை எனலாம்.அப்படிப்பட்ட தஞ்சாவூர் ஓவியம் தயாரிப்பவர்கள் ஒரு சிலரே உள்ளனர்.

தஞ்சாவூர் ஆர்ட் பிளேட் :-

---------------

அரசாங்க விழாக்களிலும் , விளையாட்டுத்துறைகளிலும் நினைவுப் பரிசாகவும் , பரிசுப் பொருளாகவும் கொடுக்கப்படுகிறது.இது வெள்ளி , செம்பு போன்ற உலோகங்களைப் பயன்படுத்தி , கையளவு பிளேட் முதல் மூன்று அடி விட்டம் உள்ள அளவிற்குத் தயாரிக்கப்படுகின்றன.இதில் ஹிந்து , முஸ்லீம் , கிறிஸ்தவர் கடவுள்கள் உருவம் பொறிக்கப்பட்டவை மற்றும் வேறு மாடல்கள் , டிசைன்களிலும் கிடைக்கும்.இந்தக் கலை ஓரளவுதான் பாதிக்கப்பட்டுள்ளது.இதைத் தயாரிப்பவர்கள் தஞ்சை மற்றும் பள்ளியக்ரஹாரம் என்ற ஊரிலும் இருக்கிறார்கள்.

   ஜரிகை மாலை , சந்தன மாலை , நெல்மாலை , ஏலக்காய் மாலைகள் , நெட்டி வேலைகள் , தலையாட்டிப் பொம்மைகள் , கண்ணாடிகள் பதிக்கப்பட்ட கலசம் , தட்டு , பருப்புத் தேங்காய் கூடு , குங்குமச் சிமிழ் , தஞ்சாவூர் முந்திரிப் பருப்பு , தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் , 1784 ல் தொடங்கப்பட்ட செயின்ட் பீட்டர்ஸ் ஸ்கூல் முதலியவை தஞ்சாவூருக்குப் பெருமை சேர்ப்பதாகும்.

  குஜராத்தியர்கள் , மராட்டியர்கள் , சௌராஷ்டிரர்கள் அதிகம் உள்ள ஊர்.

  ரகுநாத நாயக்கர் மன்னரின் அமைச்சரான கோவிந்த தீக்ஷிதர் பெயரில் தஞ்சாவூரில் ஐயன்கடைத் தெரு , ஐயன் குளம் , அய்யம் பேட்டை என்ற ஊரும் அவர் பெயரில் உள்ளது.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க