tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

 

 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுக்காவில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது எங்கள்  பூம்பாறை கிராமம். பழனி மலையின் இதயம் போன்று அமைந்திருக்கிறது எங்கள் ஊர். பெயருக்கு ஏற்றாற்போல் அழகிய கிராமமாகும். இது 6,300 அடி உயரத்தில் அமைந்துள்ளது இது பச்சை போர்த்திய மலைகள் மற்றும் பசுமைப் பள்ளத்தாக்குகளால் சூழப்பட்ட  பிரமிப்பூட்டுகிற அடுக்கடுக்கான நிலப்பரப்புகளை கொண்டுள்ளது. 

 

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இங்கு  வர முடியும். ரயில் மூலம் வருபவர்கள் திண்டுக்கல் ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து கொடைக்கானல் வழியாக பூம்பாறை செல்லலாம். 

 

திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானலுக்கு பேருந்தில் வந்தால், இரண்டு காதுகளையும் குளிர்காற்று அடைத்தது போன்று வரவேற்கும். அங்கிருந்து மீண்டும் பயணத்தை தொடர்ந்தால் அமைதியான வனப்பகுதி நடுவே ரீங்காரம் ஒலிக்கும் வாகன இரைச்சல்களைக் கேட்டுக் கொண்டு ஒரு அரைமணி நேரம் பயணித்தால் பூம்பாறை இயற்கையோடு இயற்கையாக உங்களை வரவேற்கும். ஆரம்பத்தில் தொடங்கும் வளைவுப் பாதை பூம்பாறையில் உங்களை  சேர்க்கும் வரை உடன் பயணிக்கும் அற்புத பயணமாகும்.கவர்ச்சிகரமான மலைகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்ட வண்ணமயமான வீடுகளின் மேற் கூரைகளின் காட்சியால்  பூம்பாறை இன்னும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  

 

இப்படிப்பட்ட இந்த அழகிய கிராமத்தின் வழிநெடுங்கிலும் கேரட், பூண்டு, அரிய வகை பழ மரங்கள் என மூலிகை வாசத்துடன் உங்களைக் கட்டி இழுக்கும். மாலை நேரத்து பனிகாற்று, சலசலக்கும் சிறிய அருவிகள், சத்தான உணவு முறை என உங்களை  திரும்பவும் நகர வாழ்க்கைக்கு போகவிடாமல் வளைத்து போடும் என்பதில் ஐயமில்லை. வயல்வெளிகளுக்கு நடுவே கூடாரம் அமைத்து இரவை கழித்தால் வாழ்நாள் முழுவதும் அசைப்போடும் நினைவாக அமையும்.

பூம்பாறை பகுதியில் அரசு ரப்பர் கழக தோட்டம் உள்ளது

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், கவுஞ்சி, பூண்டி, கிளாவரை, கூக்கால், பழம்புத்தூர், வில்பட்டி, பள்ளங்கி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் கேரட், பூண்டு, பீன்ஸ், உருளை போன்ற காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இப் பயிர்களில் தண்ணீர் தேங்கி இருக்கக் கூடாது என்பதற்காக படிக்கட்டு போன்ற வடிவில் மண் திட்டுகள் அமைத்து சாகுபடி செய்வது வழக்கம்.  

 

பூம்பாறை வனக் காப்பகம் தமிழ்நாட்டின் பூம்பாறையில் அமைந்துள்ள ஒரு அழகிய வனப்பகுதியாகும். இது அரிய வகை பறவைகள் மற்றும் விலங்குகள் உட்பட பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பெயர் பெற்றது. 

 

பூம்பாறையில் உள்ள கொடைக்கானல் சோலார் அப்சர்வேட்டரி, கொடைக்கானலின் அழகிய மலைவாசஸ்தலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வானியல் ஆய்வுக்கூடமாகும். இது இந்தியாவின் பழமையான சூரிய ஆய்வகங்களில் ஒன்றாகும் மற்றும் சூரிய இயற்பியல் ஆராய்ச்சிக்காக அறியப்படுகிறது. எங்கள் பூம்பாறை.

மன்னவனூர் ஏரி பூம்பாறையில் அமைந்துள்ள ஒரு அமைதியான மற்றும் அழகிய ஏரியாகும், இது பசுமையான மற்றும் உருளும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. இது சுற்றுலா மற்றும் இயற்கை நடைப்பயணங்களுக்கு பிரபலமான இடமாகும்.

பெரிஜம் ஏரி பூம்பாறையில் அமைந்துள்ள ஒரு அமைதியான மற்றும் அழகிய ஏரியாகும், இது பசுமையான பசுமையால் சூழப்பட்டுள்ளது மற்றும் சுற்றியுள்ள மலைகளின் அற்புதமான காட்சிகளை வழங்குகிறது. இது

 

 

பூம்பாறைக்கு அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான யானைமுட்டுக்கு வந்த சித்தர் போகர் நவபாசணம் மற்றும் மூலிகைகளால் ஆன 3 முருகன் சிலைகளை வடிவமைத்தார். முதல் சிலையை பழநியில் உள்ள மலைக்குன்றில் பிரதிஷ்டை செய்தார். 2வது சிலையை பூம்பாறை பகுதியில் பிரதிஷ்டை செய்தார். 3வது சிலையை பூம்பாறை அருகே மதிகெட்டான் சோலை என அழைக்கப்படும் அடர்ந்த வனப்பகுதியில் பிரதிஷ்டை செய்தார். பழநி மலை மீதுள்ள முருகன் சிலையை தண்டம் கொண்டு வடிவமைத்ததால் அதற்கு தண்டபாணி என பெயரிட்டார். 

 

முருகப்பெருமானின் அருகிலேயே அருணகிரிநாதருக்கும் சிலை உள்ளது. இங்கு வந்து வழிபடுபவர்களின் பாவ வினைகள் தீரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. 

 

குழந்தை வேலப்பர்  பழனி தண்டாயுதபாணியை ஒத்த உருவத்தில் உள்ளார். இரு கைகளுடன் உள்ள அவர் வலக் கையில் தண்டத்தையும், இடக் கையை தொடையின் முன்புறம் வைத்த வலதம்பி முத்திரையுடன் நின்ற கோலத்தில் உள்ளார். இந்த குழந்தை வேலப்பர் சம்பாத நிலையிலும் பழனி தண்டாயுதபாணி திரிபங்க நிலையிலும் காணப்படுகிறார். கருவறையின் வடக்கில் கிழக்கு நோக்கி சிவனுக்கு சிற்றாலயம் அமைந்துள்ளது. முருகன் கோயில் பிரகாரத்தைச் சுற்றி விநாயகர், பைரவர், நவகிரகம், இடும்பன், நாகர், அருணகிரிநாதர், மள்ளர், பத்திரகாளியம்மன் ஆகியோருக்கு சந்நிதிகள் அமைந்துள்ளன. கருவறைக்கு முன்புறம் இடைநாழிகையின் வெளிப்புறச் சுவரில் சிவகாமி உடனுறை நடராசர், பிரம்மன் ஆகியோரின் திருமேனிகள் நிறுவப்பட்டுள்ளன 

 

பழநி தைப்பூச திருவிழாவின் மறுநாள் மகம் நட்சத்திரத்தில் கொடியேற்றம், அடுத்து திருவீதியுலாவாக வாகனப்புறப்பாடு. 9ம்நாள்(கேட்டை நட்சத்திரம்) திருத்தேர் உலா, 10ம் நாள் முருகனை பழநிக்கு வழியனுப்பும் விழா.

 

 

கோயிலுக்கு வெளியே உள்ள பூண்டு சந்தை  தவறாமல் பார்க்க வேண்டிய இடம் ஆகும்.குறிப்பாக ‘மலைப்பூண்டு’ அதன் சுவை மற்றும் மருத்துவ மதிப்புக்காக போற்றப்படுகிறது.  பூண்டு பண்ணைகளுக்குச் சென்று, பூண்டு எவ்வாறு வளர்க்கப்படுகிறது, அறுவடை செய்யப்படுகிறது மற்றும் பதப்படுத்தப்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.பூண்டு ஊறுகாய், பூண்டு சூப் மற்றும் பூண்டு சாதம் போன்ற பூண்டு சார்ந்த சில உணவுகளை சுவைக்கலாம்.பூம்பாறை காட்டிலிருந்து சேகரிக்கப்படும் காட்டுத் தேனும் இங்கு பிரசித்தி பெற்றுள்ளது.  

 

பழனி மலைகள், வட்டக்கானல் மலைகள், பெருமாள் மலைகள் போன்ற அழகிய மலைகளால் பூம்பாறை சூழப்பட்டுள்ளது 

 

மன்னவனூர் ஏரி பூம்பாறையிலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள அமைதியான மற்றும் அழகிய ஏரியாகும் . இந்த ஏரி பச்சை புல்வெளிகள், பைன் காடுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. ஏரியில் படகு சவாரி, மீன்பிடித்தல் மற்றும் பறவைகளை பார்த்து மகிழலாம், மேலும் அருகிலுள்ள செம்மறி பண்ணை மற்றும் முயல் பண்ணையையும் பார்வையிடலாம்.

-SANMUGASUNDAR .S

KOVAI

ராசி பலன்

விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்கவும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பணி நிமித்தமான ரகசியங்கள் பகிர்வதை தவிர்க்கவும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும். நண்பர்களின்... மேலும் படிக்க

உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். கடன் செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். அரசு காரியத்தில் அலைச்சல் மேம்படும். பணிமாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மாறுபட்ட சிந்தனைகள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள்.... மேலும் படிக்க

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். விவசாய பணிகளில் லாபம் ஏற்படும். உற்பத்தி பணிகளில் மேன்மை அடைவீர்கள். கற்பனைத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.... மேலும் படிக்க

விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே வேறுபாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியான பயணங்களால்... மேலும் படிக்க

வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப நபர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தருணங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூர பயணங்கள்... மேலும் படிக்க

எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்துச் செயல்படவும். குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கால்நடைகள் மூலம் சில விரயங்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் செயல்களில் சிந்தித்து முடிவு... மேலும் படிக்க

உத்தியோக பணிகளில் இருந்துவந்த இடர்பாடுகள் குறையும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளின் வழியில் சுபச்செய்திகளும், சுபவிரயங்களும் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களால் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஆதாயம்... மேலும் படிக்க

எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளின் முக்கியத்துவம் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். பழைய பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். கால்நடை பணிகளில் லாபம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். முயற்சிகளை செயல்வடிவில் மாற்றுவீர்கள். உயர் கல்வியில் தெளிவுகள் ஏற்படும். மனதில் ஒருவிதமான ஏக்கம் ஏற்பட்டு நீங்கும். எதிலும் உணர்வுப்பூர்வமாக செயல்படுவீர்கள். மனதில்... மேலும் படிக்க

உத்தியோக பணிகளில் எதிர்பாராத சில பொறுப்புகள் மூலம் உயர்வுகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். பயணங்களின்போது உடைமைகளில் கவனம் வேண்டும். வழக்கு தொடர்பான விசயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள்... மேலும் படிக்க

வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். தடைப்பட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் குறையும். மனை சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் காணப்படும். சாதுரியமான பேச்சுக்கள் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள்... மேலும் படிக்க