tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

எங்கள் ஊர் ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தின்  தலைமையிடம மற்றும் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.இந்த வட்டத்தின் தலைமையகமாக ஸ்ரஸ்ரீவைகுண்டம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் வல்லநாடு, தெய்வச்செயல்புரம், செய்துங்கநல்லூர், ஆறுமுகங்குளம், ஸ்ரீவைகுண்டம் என ஆறு உள்வட்டங்களும், சேரகுளம், காரசேரி, அரசர்குளம், வள்ளுவர் காலனி, தாதன்குளம், கருங்குளம், ஆதிச்சநல்லூர், கால்வாய், வெள்ளூர் உட்பட 69 வருவாய் கிராமங்களும் உள்ளன. 

 

வைணவ மரபுப்படி வைகுண்டம் என்ற சொல்லுக்கு விஷ்ணு என்றும், விஷ்ணுவின் பரமபதம் என்றும் இரண்டு அர்த்தங்களைப் பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள்.

எங்கள் ஊர் ஸ்ரீவைகுண்டம் தூத்துக்குடியிலிருந்து 39 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 30 கிமீ தொலைவிலும், திருச்செந்தூரிலிருந்து 30 கிமீ தொலைவிலும் உள்ளது. இங்குள்ள பராங்குசநல்லூரில், ஸ்ரீவைகுண்டம் தொடருந்து நிலையம் உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 4,159 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 15,847 ஆகும்.5.5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 102 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 

 

இப்பேரூராட்சியில் உள்ள ஸ்ரீவைகுண்டநாதர் திருக்கோவில் மற்றும் ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் திருக்கோவில் ஆகியவை நவதிருப்பதி தலங்களாகும். திருவேங்கமுடையார் மண்டபத்தில் உள்ள சிலைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. வைகுண்ட ஏகாதசி நாட்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடைபெறும். பன்னிரண்டு ஆழ்வார்களால் பாடப்பெற்ற நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாகக் கருதப்படும் இத்தலம், நவக்கிரகங்களில் சூரியனுக்குரியது.இத்தலம் 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகவும் நவதிருப்பதிகளில் முதன்மையானதாவும் உள்ளது. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் ஸ்ரீவைகுண்டத்தை வைப்புத் தலமாகப் பாடியுள்ளார். இக்கோவிலில் உள்ள திருவேங்கடமுடையான் சந்நிதியில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த அற்புதமான சிற்பங்கள் உள்ளன. சித்திரை, ஐப்பசிமாதங்களில் 6 ஆம் நாளன்று சூரிய ஒளி வைகுண்டநாதர் மீது விழுகின்றது. அதற்கு ஏற்றாற்போல கொடிமரம் சற்றே விலகி உள்ளது. ஆங்கிலேயருக்கு எதிராகக் கட்டபொம்மன் நடத்திய விடுதலைப் போரில் இக்கோவில் கோட்டையாகப் பயன்படுத்தப்பட்டது.

இங்கு நடைபெறும் திருவிழாக்களுள் முக்கியமானது கருடசேவைத் திருவிழா ஆகும். இவ்விழா தமிழ் மாதமான வைகாசியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. விழாவில் நவதிருப்பதிகளிலும் உள்ள 9 உற்சவப் பெருமாளும் கருடவாகனத்தில் எழுந்தருளுவதைக் காணலாம். நம்மாழ்வாரின் உற்சவர் திருவுருவச்சிலை அன்னவாகனத்தில் ஒவ்வொரு நவதிருப்பதிக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அந்தந்த தலங்களில், அந்தந்த தலங்கள் குறித்து அவர் பாடிய பாடல்கள் பாடப்படும்.வைகுண்ட ஏகாதசி தினத்தில் உற்சவர் கள்ளபிரானை அர்த்த மண்டபத்துக்குள் கொண்டு செல்வர். அப்போது சந்நிதி அடைக்கப்பட்டிருக்கும். கண் இமைக்கும் நேரத்துக்குள் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு தீபாராதனை காட்டி உடனே நடை சாத்தப்படும். இந்த ஒரு சில மணித்துளிகளே இந்த வைபவம் நடைபெறும். இந்த தரிசனம் கண்டால் பிறப்பில்லா நிலை கிடைப்பதாக ஐதீகம்.திருமாலும், திருமகளும் இத்தலத்தில் தங்கியிருப்பதாக ஐதீகம். எனவே இத்தலம் “ஸ்ரீவைகுண்டம்’ என்றழைக்கப்படுகிறது. “வைகுதல்’ என்றால் “தங்குதல்’ என பொருள்

 

 

ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள சிவகாமி அம்மை உடனுறை கைலாசநாதர் கோயில் நவகைலாயங்களில் ஒன்றாகும். இறைவனுக்கு எதிரே உள்ள கோபுரம் திருமலை நாயக்கரால் துவங்கப்பட்டுக் கைவிடப்பட்டு அரைகுறையாக நிற்கிறது. இங்குள்ள யாளியின் சிற்பங்கள் குறிப்பிடத் தக்கவை. யாளியின் வாயில் உள்ள உருளும் பந்து நாயக்கர் கால சிற்பங்களின் சிறப்பு அம்சம்.இத்திருக்கோயிலை வழிபடுவது காரைக்கால் அருகில் உள்ள திருநள்ளாறு திருக்கோயிலை வழிபடுவதற்கு சமமாகும் என கூறப்படுகிறது.இங்கு தமிழ்ப் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, திருவாதிரை, பங்குனி உத்திரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகிறது. 

 

ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் என்ற மகானின் அவதாரத் தலமும் ஆகும். இவர் தமது ஐந்தாவது வயது வரை வாய் பேசாதிருந்தார். இவரது பெற்றோர் அருகிலுள்ள திருச்செந்தூர்ப் பதியில் தங்கி விரதம் இருந்தனர். முருகன் இவர் முன் தோன்றி ஒரு மலரைக் காட்ட உடன் பூமேவு செங்கமல என்று துவங்கும் கந்தர் கலிவெண்பா பாடினார் என்பது வரலாறு. பின்னர் இவர் மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ், மீனாட்சி அம்மை குறம், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களையும் அருளினார். காசி

சென்று அங்கு சைவ மடத்தை நிறுவ விரும்பினார். அதற்கு நிலம் தந்து உதவி செய்ய வேண்டி தில்லி சுல்தானை அணுகினார். அவரிடம் பேச இந்தி மொழி அறிவு தேவைப்பட்டது. கலைவாணியைக் குறித்துப் பத்துப் பாடல்கள் அடங்கிய சகலகலா வல்லி மாலை என்ற நூலை இயற்ற, கலைவாணியின் அருளால் இந்தி மொழியில் அப்போதே வல்லமை பெற்று சுல்தானிடம் வேண்டிய உதவியைப் பெற்றார் என்பதும் வரலாறு ஆகும். 

 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் முக்கியமான தொகுதியாக ஸ்ரீவைகுண்டம் உள்ளது. தாமிரபரணி கரையோரம் அமைந்துள்ளதால் இந்த தொகுதியின் பிரதான தொழில் விவசாயம்.இந்த பகுதியில் வாழை விவசாயம் அதிகம்.

நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி ஆற்றின் கடைசி இரண்டு அணைக்கட்டுகள் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளன. மருதூர் அணை மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணையின் மூலம் பிரியும் 53 பாசன குளங்கள் மூலம் சுமார் 48 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.ஸ்ரீவைகுண்டம் அணை கட்டப்படும் முன்பு மருதூர் அணையே மிக நீளமான பெரிய அணையாக இருந்தது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை மருதூர் அணைக்கு கீழே தாமிரபரணி ஆற்றில் இருந்து வெவ்வேறு இடங்களில் கால் வெட்டி 4 குளங்களுக்கு மட்டுமே தண்ணீர் சென்றது. தென்திருப்பேரை கால்வாய் மூலம் கடம்பாகுளத்திற்கும், கீழ்பிடாகை கால்வாய் மூலமாக ஆறுமுகமங்கலம் குளத்திற்கும், கொற்கை கால்வாய் மூலம் கொற்கை குளத்திற்கும், ஆத்தூரான் கால்வாய் மூலம் ஆத்தூர் குளத்திற்கும் மட்டுமே மழைக் காலங்களில் தண்ணீர் கிடைக்கும். இதனால் ஸ்ரீவைகுண்டம் முதல் திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதிகள் வரை தண்ணீர் செல்லாமல் நிலப்பகுதிகள் சுண்ணாம்பு மண்ணால் வறண்டு வெந்து கிடந்தது.இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அப்போதைய ஆங்கிலேய அரசு, ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட தீர்மானித்தது. இதற்காக கடந்த 1853ல் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து வடகால் மூலம் தூத்துக்குடி வரையும், தென்கால் மூலம் குலசேகரன்பட்டினம் வரையும் பாசனத்திற்கும் மற்றும் நீர்வழிப் போக்குவரத்திற்கும் வழிவகை செய்து வெள்ளக் காலங்களில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருபுறமும் மக்கள் செல்ல முடியாத நிலையில் சாலை போக்குவரத்துக்கு வசதியாக அணையின் மேல் பாலம் கட்டுவதற்கும், உப்பு நிலமான தூத்துக்குடி நகரத்திற்கு குடிநீர் வழங்கவும் திட்டம் தயாரிக்கப்பட்டது.பல்வேறு தடங்கல்களுக்கு இடையே 1873 ஜனவரி மாதம் பணி நிறைவு பெற்றது. இதை குறிக்கும் கல்வெட்டு, தற்போதும் ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகால் சுவரில் உள்ளது. ஸ்ரீவைகுண்டம் அணை 1380 அடி நீளத்துடன் 6 அடி உயரத்தில் கட்டப்பட்டு 1739 சதுர மைல் அளவில் தண்ணீர் தேங்கும் வகையில் அமைக்கப்பட்டது. 

 

ஸ்ரீவைகுண்டம், ஏரல், சாத்தான்குளம் ஆகிய 3 தாலுகாக்களை உள்ளடக்கிய தொகுதியாகவும் உள்ளது. மறுசீரமைப்பில் சாத்தான்குளம் தொகுதி நீக்கப்பட்டதால் அந்த தொகுதியின் பெரும்பாலான பகுதிகள் ஸ்ரீவைகுண்டம் தொகுதியுடன் இணைக்கப்பட்டன. சாத்தான்குளம் தாலுகா முழுவதும், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் தாலுகாக்களில் பகுதியளவு இந்த தொகுதியில் உள்ளன. சாயர்புரம், ஸ்ரீவைகுண்டம், பெருங்குளம், ஏரல், ஆழ்வார்திருநகரி போன்ற பேரூராட்சிகள் இந்த தொகுதியில் அடங்கி உள்ளன.

 

K. முனியாண்டி

வடக்கு மலையடிபட்டி

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க