tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் திருக்களம்பூரில் அருள் பாலித்து கொண்டு இருக்கும் கதலிவனேஸ்வரர் என்கிற வைத்தியநாதசுவாமி சுயம்பு லிங்கமாகும் இரண்டாம் மாற வர்ம பாண்டியன் தனது குதிரையின் மீது ஏறி வேட்டைக்கு வருகிற பொழுது ஒரு அடர்ந்த வாழைத் தோப்பை பார்க்கிறார் அந்த வாழைத் தோப்பிற்குள் தன் குதிரையை செலுத்துகிற பொழுது ஒரு இடத்தில் குதிரை கால் குழம்புபட்டு அந்த இடத்தில இருந்து குருதி போன்ற ஒரு திரவம் பீறிட்டு அடித்திருக்கிறது, அதை ஆச்சரியமாக பார்த்த மன்னனுக்கு திடீரென்று கண் பார்வை போய்விடுகிறது, சொக்கநாதர் மீனாட்சியை தொடர்ந்து வணங்கி வருகிற பாண்டிய மன்னன் சொக்கநாதா!!! எனக்கு என்ன சோதனை? ஏன் இந்த சோதனை? என் கண்கள் தெரியாமல் போய்விட்டதே!!! என்று வேதனையோடு வேண்டுகிற பொழுது அசரீரியாக சொக்கநாதர் தோன்றி இந்த இடத்தில் நான் எழுந்தருளியிருக்கிறேன் எனக்கு ஒரு ஆலயம் கட்டு அதற்காகத்தான் உன்னிடம் இந்த நிகழ்வை நடத்தினேன் என்று இறைவன் சொல்ல, உடனே மன்னனுக்கு கண் பார்வையும் கிடைத்தது, அடுத்த நாளே அந்த இடத்தில் ஆலயம் எழுப்புவதற்கான பணியை மன்னர் தொடங்கினார், தனது சேனாதிபதி உள்ளிட்ட படை பரிவாரங்களை அனுப்பி அந்த இடத்தில் ஆலயம் எழுப்பச் சொல்லி உத்தரவிட்டு நிம்மதியாக உறங்கி இருக்கிறார், ஆலயம் வெகு விரைவாக கட்டப்பட்டு நிறைவடையும் தருவாயில் இருக்கும் பொழுது இறைவன் மீண்டும் மன்னரின் கனவில் தோன்றி நான் குறிப்பிட்ட இடத்தில் நீ ஆலயம் கட்டவில்லை வேறொரு இடத்தில் கட்டி விட்டாய் என்று சொல்லுகிறார், உடனே மன்னனே நேரில் வந்து பார்த்துவிட்டு இந்த கோவில் இருக்கட்டும் மிகச்சரியாக அந்த இடத்தில் மற்றும் ஒரு கோவிலை கட்ட வேண்டும் என்று சொல்லி, அந்த இடத்தை கண்டுபிடித்து அங்கே இருந்த சுயம்பு லிங்கத்தை கண்டுபிடித்து அந்த இடத்திலே ஆலயம் எழுப்புகிறார் அந்த ஆலயம் தான் தற்போது இருக்கிற கதலிவனேஸ்வரர் ஆலயம், முதலில் கட்டிய ஆலயம் திருவளர்ஒளி ஈஸ்வரர் என்று இந்த ஆலயத்திற்கு கிழக்கு பகுதியில் இருக்கிறது, கதலிவனேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிவலிங்க சிலையின் சிறப்பு எல்லா சிவலிங்கங்களும் அதனுடைய மேல் பகுதி பளபளப்பாக இருக்கும், ஆனால் இந்த சிலையின் மேற்பகுதியில் குதிரையின் கால் குழம்புபட்டதால் மூன்றாக பிளவுபட்டு இருக்கும் இன்றும் அதே வடிவில் தான் காட்சி தருகிறது, இந்த சிலையையும் கீழே உள்ள பீடத்தையும் இணைக்கிற வகையில் சில வருடங்களுக்கு முன்பு செப்பு பட்டயம் பொருத்தப்பட்டது சிறிதும் இடைவெளி இல்லாமல் பொருத்தப்பட்ட செப்புப் பட்டயம் தற்பொழுது பீடத்திற்கும் சிலைக்கும் இடையிலே இடைவெளி ஏற்பட்டு இருக்கிறது ஏனெனில் கொஞ்சம் கொஞ்சமாக சாமி சிலை வளர்ந்து கொண்டிருக்கிறது, குழம்புபட்ட சிவலிங்கமாக சிவபெருமான் தோன்றிருப்பதால் இந்த ஊருக்கு திருக்குளம்பூர் என்ற பெயர் வந்தது இந்த ஆலயத்தின் மற்றுமொரு சிறப்பு ஸ்தல விருட்சமாக இருக்கிறவாழை மரங்கள் ஆகும் இவை எந்த வகையான வாழை என்று தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை ஆய்வாளர்கள் வந்து ஆராய்ச்சி செய்தும் கண்டுபிடிக்க முடியாத ஒரு புது வகையான வாழைகள் ஆகும் இந்த வாழையில் இருந்து காய்க்கிற காயை எடுத்து பழுக்க வைத்து அதை வெறும் சர்க்கரை மட்டும் சேர்த்து பஞ்சாமிர்தம் ஆக்கி சாமிக்கு அபிஷேகம் செய்து சாப்பிடுகிற பொழுது அது எல்லா வகையும் சேர்த்த பஞ்சாமிர்தத்தை போன்று இனிமையான சுவையாக இருக்கும் அந்த பஞ்சாமிர்தத்தை சாப்பிடுபவர்களுக்கு தீராத நோய்கள் தீர்ந்திருக்கிறது கண்கூடாக நாம் பார்த்திருக்கிறோம், மேலும் இந்த காயை வெட்டி எடுக்கும் பொருட்டு மரத்தை வெட்டும்போது அதனுடைய அடிப்பகுதியில் இருந்து சிவப்பு நிறத்தில் குருதி போன்ற ஒரு திரவம் வருவது இன்றும் நடந்து கொண்டிருக்கிறது, மேலும் இந்த வாழை மரத்திலிருந்து காய், இலை,கனி எதையும் பொதுமக்கள் பயன்படுத்த மாட்டோம், அதனுடைய பலத்தை மட்டும் சுவாமிக்கு அபிஷேகம் செய்து பிரசாதமாக சாப்பிடுவோம், அந்த மரத்தின் இலையை வெட்டி சாமிக்கு மாவிளக்கு வைத்த ஒரு பெண் தன் உடல் முழுவதும் வெண்குட்டம் வந்து சிரமப்பட்டதை நாங்கள் நேரடியாகவே பார்த்தோம், அதேபோல அந்த வாழையின் பழங்களை, காய்களை கொத்துகிற அணில்,எலி போன்ற உயிரினங்களுக்கும் உடம்பில் வெண்மையாக தோன்றுவது வாடிக்கையாக இருக்கிறது, இந்த வாழையை ஆலயத்தின் பிரகாரத்துக்கு வெளியில் எடுத்துக் கொண்டு நட்டால் வராது அதே போல வெளியில் இருந்து ஒரு வாழையை கொண்டு வந்து இந்த கோவில் வளாகத்திற்குள்ளே வைத்தாலும் வராது, பொதுவாக வாழை பயிரிட வேண்டும் என்றால் சரியாக வெட்டி, கொத்தி, தண்ணீர் பாய்ச்சி பராமரிக்க வேண்டும் ஆனால் இந்த வாழையை யாரும் பராமரிப்பதில்லை அது தானாகவே வளர்ந்து வருகிறது, கோடை காலத்தில் கூட அது குளிர் தென்றலாய் வளர்ந்து வருவது ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது, கோவில் பிரகாரம் சுற்றி வருகிற பொழுது அந்த வாழைக்குள் நுழைந்து நுழைந்து தான் செல்ல வேண்டும் அப்படித்தான் அந்த ஆலயம் இருக்கிறது, ஆன்மிக அனுபவம் பெற்ற சிலர் இந்த ஒவ்வொரு வாலையும் ஒவ்வொரு சித்தர்கள் என்று கருதுகிறார்கள்,இந்த ஆலயத்திற்கு வந்த காஞ்சி பெரியவர் (மூத்தவர் ) இந்த ஆலயத்தில் சிவபெருமான் உக்கிரமாக இருக்கிறார் எனவே அருகிலே ஒரு அம்மன் கோவில் எழுப்ப வேண்டும் என்று கூறி, அவரே அதற்கான ஏற்பாடுகளைச் செய்து காஞ்சியில் இருந்து கொண்டுவரப்பட்ட காமகோடீஸ்வரி என்கிற அம்மன் சாமிக்கு வடக்கு புறத்திலே ஆலயமாக கட்டி அமைக்கப்பட்டிருக்கிறது, காசி மன்னன் ஒருமுறை காஞ்சி பெரியவரிடம் பாவம் தீர்க்கும் வழிகளை சொல்லுங்கள் என்று கேட்கிற பொழுது நீ தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திருக்களம்பூர் சென்று வா உன் பாவங்கள் எல்லாம் தீர்ந்துவிடும் என்று சொல்லி இருக்கிறார் பாவங்கள் தீர்க்க எல்லோரும் காசிக்கு வருகிற பொழுது என்னை திருக்களம்பூருக்குப் போகச் சொல்லுகிறீர்களே என்று அவர் கேட்கிற பொழுது காசிக்கு வந்தால் பாவங்கள் தீரும் மோட்சம் கிட்டும் என்பது உண்மைதான் ஆனால் திருக்களம்பூர் சென்றால் பாவங்கள் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும் என்று கூறி இருக்கிறார் அதற்காக திருக்களம்பூர் வந்த காசி மன்னன் கனவில் தோன்றிய சிவபெருமான் இவ்வளவு தூரம் ஏழை எளிய மக்கள் வயதானவர்கள் காசிக்கு வர இயலாது எனவே உன்னுடன் கொண்டு வந்திருக்கிற அந்த காசிலிங்கம் சிலையை இந்த கோவிலிலேயே பிரதிஷ்டை செய்து விட்டு செல் என்று சொன்னதாகவும் அதன் அடிப்படையிலேயே சிவபெருமானுக்கு பின்பு பிரகாரத்திலே அந்த காசி விசுவநாதர் சிலை நிர்மானிக்கப்பட்டு இருக்கிறது, இந்த ஆலயத்தில் சித்திரை மாதம் வருடப்பிறப்பு விழா பால் குடங்கள் எடுக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது, வைகாசி விசாகத் திருவிழா, ஆனித் திருமஞ்சன விழா, ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் திருவிளக்கு வழிபாடு , ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி விழா , புரட்டாசி மாதம் நவராத்திரி விழா , ஐப்பசி மாதம் சஷ்டி விழா, கார்த்திகை மாதம் தீபத்திருவிழா, மார்கழி மாதம் 10 நாட்கள் திருவாதிரை திருவிழா, தை மாதம் பூசத் திருவிழா, மாசி மாதம் மகம் திருவிழா, பங்குனி மாதம் உத்திர திருவிழா, போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுவதோடு ஒவ்வொரு பிரதோஷம் மற்றும் பௌர்ணமி மிக சிறப்பான வகையிலே கொண்டாடப்பட்டு வருகிறது ஏராளமான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வருகை தந்து குழந்தை வரம் மற்றும் திருமண தடை நீக்கம் மற்றும் கணவன் மனைவி பிரிந்து இருப்பது ஒன்று சேர்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து ஆலயத்தை 108 முறை வலம் வந்து குழந்தைகளுக்கு பாயாசம் செய்து பிரசாதமாக வினியோகம் செய்து வந்தால் அவர்கள் கேட்ட கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறி வருகிறது என்பது நிதர்சனமான உண்மை, ராமாயண காலத்தில் லவனும் குசலவனும் விசுவாமித்திர முனிவர் உதவியோடு தன் தாய் சீதா தேவியோடு இந்த வனத்தில் தங்கியிருந்ததாகவும் அவர்களைக் காண வந்த இராமபிரானை எதிர்த்து அவர்கள் போரிட்டு இராமனுடைய குதிரைகளை இங்கிருந்த வாழை மரத்தில் பிடித்து கட்டி வைத்ததாகவும் தகப்பனுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே நடந்த போராட்டத்தின் விளைவாக களம் கண்டதால் இந்த ஊருக்கு திருக்களம்பூர் என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது, புதுக்கோட்டை மாவட்டத்தின் தென்கோடியில் இருக்கிற இந்த ஊர் வறியவர்க்கு வாரி வழங்கிய கடையெழு வள்ளல்களில் ஒருவராய் திகழ்ந்த வள்ளல் பாரி ஆண்ட பரம்பு மலை சாரலில் உள்ளது சுற்றிலும் சிவகங்கை மாவட்டம் இருக்கிறது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஊர் இருக்கிறது, இந்த ஆலயம் ஒவ்வொரு நாளும் காலை ஆறு மணி தொடங்கி நண்பகல் 12 மணி வரையும் மீண்டும் பிற்பகல் 4 மணி தொடங்கி இரவு 8:30 மணி வரைக்கும் திறந்திருக்கும், மேலும் இந்த ஊருக்கு முல்லை மங்கலம் என்று ஒரு பெயரும் உண்டு அருகில் இருக்கிற பரம்பு மலையை ஆண்ட வள்ளல் பாரி தேரில் பயணித்து வரும் பொழுது பற்றி படர கொழு கொம்பின்றி பரிதவித்த முல்லைக்கொடிக்கு தான் பயணித்த தேரையே பரிசாக வழங்கிய இடம் இந்த ஊர் என்றும் அதனால் முல்லை மங்கலம் என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது எங்கள் திருக்களம்பூரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக முத்தமிழ் மன்றம் என்கிற ஒரு இலக்கிய அமைப்பும், 40 ஆண்டுகளுக்கும் மேலாக வள்ளல் பாரி நற்பணி மன்றம் என்கிற அமைப்பும் பள்ளி கல்லூரி மாணவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவதும், அரசுப் பள்ளியில் 100 விழுக்காடு தேர்ச்சியை கொண்டுவர பாடுபடுவதும், சமூக நலனுக்காக அக்கறையோடு பாடுபடுவதும் என்கிற உயரிய நோக்கத்தோடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது, இப்படி பல பெருமைகளை தன்னகத்தே கொண்ட திருக்குளம்பூர் என்கிற இந்த திருக்களம்பூரில் நானும் பிறந்திருக்கிறேன் என்பதை எண்ணுகிற பொழுது பெருமையாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது அனைவரும் வாருங்கள் ஒரு முறை எங்கள் ஊருக்கு... 

 

தொகுப்பு.நெ.இராமச்சந்திரன், தமிழ்நாடு அரசின் தமிழ்ச் செம்மல் விருதாளர், திருக்களம்பூர் அஞ்சல் பொன்னமராவதி வட்டம் புதுக்கோட்டை மாவட்டம் 

ராசி பலன்

பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உருவாகும். எதிலும் பற்றற்ற தன்மை உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். சிந்தனையின் போக்கில் புதுமைகள் பிறக்கும். கடினமான வேலைகளையும் எளிமையாகச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான... மேலும் படிக்க

அரசு சார்ந்த பணிகளில் துரிதம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். மனைவி வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். மனவள கலையில் நாட்டம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் மரியாதை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் எண்ணங்கள் ஈடேறும்.... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். பூர்வீகத்தில் இருந்துவந்த  பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். இடமாற்றம் தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய தொழில்நுட்பக் கருவிகள் வாங்குவீர்கள்.... மேலும் படிக்க

விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். புதிய முயற்சிகளால் அலைச்சல் உண்டாகும். விளையாட்டுக்களில் கவனத்துடன் செயல்படவும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். புதிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.... மேலும் படிக்க

ஆடம்பர எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். தோற்றப் பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு சிறு புதுமைகள் ஏற்படும். மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உங்கள்... மேலும் படிக்க

மனதில் புதுவிதமான தெளிவுடன் காணப்படுவீர்கள். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். வாகனப் பழுதுகளைச் சீர் செய்வீர்கள். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப அனுகூலம்... மேலும் படிக்க

பணி நிமித்தமான புதிய முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பழைய பிரச்சனைகள் குறையும். வியாபார இடமாற்ற சிந்தனைகள் உருவாகும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்புத்... மேலும் படிக்க

வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். எண்ணிய சில பணிகள் நினைத்தபடி நிறைவேறும்.... மேலும் படிக்க

வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் தெளிவுகள் உண்டாகும். வியாபார பணிகளில் ஒரு விதமான மந்தத்தன்மை உண்டாகும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள்.... மேலும் படிக்க


எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதளவில் குழப்பங்கள் ஏற்படும். செயல்களில் நிதானத்தை கடைபிடிக்கவும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனம் வேண்டும்.... மேலும் படிக்க

வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவு மேம்படும். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரிய செயல்கள் சாதகமாக முடியும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும்.... மேலும் படிக்க

ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசுப் பணிகளில் ஆதாயம் ஏற்படும். தன நெருக்கடிகள் குறையும். மாறுபட்ட அணுகுமுறைகளால் புதுமைகளை ஏற்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகள் மூலம் சில விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.... மேலும் படிக்க