tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

பஸ்ஸிலிருந்து கண்ணீருடன் இறங்கிய கண்ணன் பஸ் நகர்ந்ததும் 'ஹா..ஹா..” வென்று உரத்த குரலில் வாய் விட்டுச் 

சிரித்தான்.

            'டேய்..டேய்...இப்பத்தான் பஸ்ல செல்போனை யாரோ அடிச்சிட்டதா சொல்லிக் 

கத்திக் களேபரம் பண்ணி… அழுதே…கீழே இறங்கியதும் சிரிக்கறியே…உனக்கென்ன பைத்தியமா?”  நண்பன்  பிரகாஷ் கேட்க,

 

  "பைத்தியக்காரன் நானில்லை…அந்த பஸ்ல இருந்தவங்கதான்  பைத்தியக்காரர்கள்…” மீண்டும் சிரித்தான்.

 

 "என்னடா உளர்றே?”

      

"ஆக்சுவலா இன்னிக்கு செல்போனை 

மறந்து வீட்டுல வெச்சிட்டு வந்திட்டேன்…சரி...சும்மா ஒரு சீன் கிரியேட் பண்ணி 

எல்லோரையும் கலாய்க்கலாம்ன்னு தோணிச்சு...அதான் சும்மா கத்திக் களேபரம் பண்ணினேன்…எப்படி என் நடிப்பு?”

 

"ச்சை…இதிலென்னடா லாபம் உனக்கு?”

             "என்ன மச்சான் அப்படிக் கேட்டுட்டே?…பஸ்ல இருந்த காலேஜ் பொண்ணுங்க  எல்லாரும் என்னையே பார்த்திட்டிருந்தாங்க...நானும் பாவமா அவங்களையே

 பார்த்திட்டிருந்தேன்…அதுல ரெண்டு பேரு லேசாய்ச் சிரிச்ச

 மாதிரி இருந்திச்சு…சொல்ல முடியாது..நாளைக்கு  "என்ன 

சார் உங்க செல்போன் கெடைச்சுதா?” ன்னு கேட்டாலும் கேட்பாங்க...அது தொடர்ந்து காதலா மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...அனுதாபத்துல கூடக் காதல் பொறக்குமாம்..”

 

"ஹும்... ஒரு கேரக்டரா?” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு,  எதிர்த்திசையில் நடந்தான் பிரகாஷ்..

 

  சந்தோஷமாய் வீடு திரும்பிய கண்ணன் வீடே அமைதியாயிருக்க தாயிடம் கேட்டான் 'என்னாச்சும்மா?..ஏன் அப்பாவும்  சுகன்யாவும் சோகமாயிருக்காங்க?" 

           

"உன் அருமைத் தங்கச்சி கிட்டக் கேளு”

 

 சுகன்யாவிடம் சென்று கேட்டான்.

 

  "அண்ணா… நீ உன் செல்போனை இன்னிக்கு மறந்து வெச்சிட்டுப் போனதைப் பார்த்தேன்..சரி..இன்னிக்கு ஒரு நாளைக்கு நாம காலேஜூக்குக் கொண்டு போகலாமேன்னு எடுத்திட்டுப் போனேன்…பஸ்ல…பஸ்ல யாரோ அதை அடிச்சிட்டுப் போயிட்டாங்கண்ணா…” சொல்லிவிட்டு அவள் அழுகையைத்தொடர,

 

 தன்னுடன் பஸ்ஸில் பயணித்த அனைவரும் கோரஸாய் 'போடா பைத்தியக்காரா…!” என்று கத்துவது போலிருந்தது கண்ணனுக்கு.

 

(முற்றும்)

 

முகில் தினகரன், கோயமுத்தூர்

 

 

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க