tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஜூலை 12

அண்ணாமலை எதற்காக அரசியலுக்க வந்திருக்கிறார் என்றகதை தெரியும்,நீ யாரை விட்டுவைத்துள்ளாய்,யாரை கடிக்கவில்லை என்று செல்வப்பெருந்தகை அதிரடியாக கூறிஉள்ளார். 

 தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை சமூகவலைதளத்தில் வெ ளியிட்ட வீடியோ பதிவு:

 எல்லாரையும் மிரட்டுவதுபோல என்னையும் வழக்கு.. வழக்கு.. என அண்ணாமலை மிரட்டுகிறார். என் வழக்கு தன்மை அவருக்கு தெரியவில்லை. என்னை குற்றவாளி என சொல்லும் போலீசிடம், என் வழக்கை சிபிஐ விசாரிக்கட்டும் என சொன்னவர்கள் நாங்கள். உயர்நீதிமன்ற உத்தரவை அண்ணாமலை படிக்க வேண்டும். அவர் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது எவ்வளவு பேரை துன்புறுத்தியிருப்பார், எவ்வளவு பேரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருப்பார் என்பது இப்போது புரிகிறது.

எதற்காக வந்தாய்?

அதனால் தான் நீண்ட நாட்களாக பணியில் நீடிக்க முடியாமல் ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிறார். இது பற்றி கர்நாடக முதல்வர், துணை முதல்வரிடம் விசாரிக்க கோரியுள்ளேன். நாங்கள் அடிமட்டத்தில் இருந்து மக்களுக்காக பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள். ஆனால் நீ (அண்ணாமலை) அப்படியில்லை. பல மடங்களை பிடித்து, சாமியார் கால்களில் விழுந்து, எதற்காக வந்திருக்கிறாய் எனத் தெரியும். என் பின்னால் உண்மையான சக்திவாய்ந்த மக்கள் இருக்கின்றனர். உன் பின்னால் வியாபாரிகள் தான் இருக்கின்றனர்.

 வாழ்க்கையும், அரசியலும் நிரந்தரமில்லை. ஆனால், உண்மையுடன் மக்கள் சேவை செய்பவனே தலைவன். உன்னை மாதிரி வெறுப்பு அரசியல் செய்பவன் தலைவன் அல்ல. இதுவரை நீ யாரை திட்டவில்லை? யாரை கடிக்கவில்லை? நீ யாரை விட்டு வைத்துள்ளாய்? என் தாய் என்னை பார்த்து பெருமைப்படுவார்; ஆனால் உன்னுடைய தாய் உன்னைப்பற்றி பெருமைக்கொள்ள ஏதேனும் இருக்கிறதா? இறந்தவர்களை கூட குற்றவாளிகள், தண்டனை பெற்றவர்கள் என கூறி வருகிறாய்.

கோழைகள்

ஒருவரை அவமானப்படுத்த வேண்டும், அசிங்கப்படுத்த வேண்டும், சங்கடப்பட வேண்டும் என்பதற்காக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் அண்ணாமலை. அவர் சொல்லி யாராவது சங்கடப்படுவார்கள் எனில் அவர்கள் கோழைகள். ஒரு சாமானியன் மீது வழக்கு போட்டு அவ்வளவு துன்புறுத்தி, உயர்நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பே என் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக கூறியது. என் வழக்கு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை படித்து பாருங்கள் அண்ணாமலை.

 இவ்வாறு அதில் கூறியிருக்கிறார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க