tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுக்கோட்டை, நவ.18–
அண்ணாமலை பட்டியல் கொடுத்து புஸ்வானம் ஆனது. விஜய் பட்டியல் கொடுத்தாலும் பிசுபிசுத்துப் போகும் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
புதுக்கோட்டை மாவட்ட திமுக   அலுவலகத்தில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது
அவர் கூறியதாவது: 
    "2021 ஆக இருக்கட்டும் 2024 நாடாளுமன்ற தேர்தலாக இருக்கட்டும் வலுவான கூட்டணி அமைப்பேன் என்று தான் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.  ஆனால் அவரால் வலுவான கூட்டணி அமைக்க முடியவில்லை. அதுதான் அவருக்கு 2026ன் நிலைமையும்.  2024 ல் முடியாதது 2026 லும் முடியாது. அதற்கான வாய்ப்பு நிச்சயம் கிடையாது.
     அனைவருமே முதலமைச்சராக வரவேண்டும் என்ற கனவோடு பலர் வந்து கொண்டிருக்கிறார்கள். திருமாவளவன் எங்களுடன் தான்: முதலமைச்சர் நாற்காலிக்கு பலர் வந்தாலும் இந்த நாற்காலியை விடாப்படியாக கெட்டியாக எங்களது முதலமைச்சர் ஸ்டாலின் பிடித்துக் கொள்வார். அதை யாராலும் தடுக்க முடியாது. திருமாவளவன் உறுதியாக திமுக கூட்டணியில் தான் இருக்கிறேன். 2026லும் திமுக கூட்டணியில் தான் இருப்பேன் என்று கூறிவிட்டார். அவர் கூறிய பிறகும் இந்த கேள்விகளை எழுப்பி குழப்பத்தை உண்டு பண்ண வேண்டும் என்று நிருபர்கள் தான் நினைக்கிறார்கள் தவிர வேறு யாரும் நினைக்கவில்லை. திருமாவளவன் எங்களோடு தான் இருப்பார். திருமாவளவன், விஜய், சீமான் இவர்கள் எல்லாம் ஒருங்கிணைந்தால் பார்த்துக் கொள்ளலாம். அத்தைக்கு முதலில் மீசை முளைக்கட்டும் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
எம்.ஜி.ஆர். ஆக முடியாது
 சர்வாதிகாரிகளுக்கு நிச்சயம் தமிழ்நாட்டில் மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள். அதை புரியாமல் கூறினால் நாங்கள் பொறுப்பாக முடியாது. விஜய்,  எம்ஜிஆர் பாணியை பின்பற்ற பார்க்கிறார். எல்லாரும் எம்ஜிஆர் ஆகி
விட முடியாது. நிச்சயமாக அதில் அவர் தோல்வியைத்தான் சந்திப்பார். ஏற்கனவே
அண்ணாமலை ஊழல் பட்டியலை எல்லாம் கொடுத்து இருக்கிறார். புஸ்வானமாக
போய்விட்டது. அதேபோல் இதுவும் பிசுபிசுப்பு போகுமே தவிர அவருக்கு எந்தவித
பலனும் பயனும் கிடைக்கப்போவதில்லை. 
 இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க