tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

திருச்சி, ஜூலை 5–

தென்சென்னையில் மகன் டெபாசிட் இழந்துள்ளார். ஜெயக்குமார் எல்லாம் பேசக்கூடாது. அதிமுக அழிவுக்கு முதல் காரணம் ஜெயக்குமார். லுங்கி கட்டி அவர் பிரஸ்மீட் நடத்தினால் அதிமுக வளர்ந்து விடுமா என்று அண்ணாமலை சரமாரியாக சாடினார்.

பா.ஜ. மாநில தலைவர் அண்ணாமலை திருச்சியில் நேற்று நிருபர்களிடம் கூறியது: 

 இடைத்தேர்தல் என்றாலே, அதில் ஆளுங்கட்சியின் அத்துமீறல் அதிகம் இருக்கும். இந்தியாவில் 90 சதவிகிதம் இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சினர் தான் வெற்றிபெறுகிறார்கள். காரணம், ஒவ்வொரு தெருவுக்கும் ஓர் அமைச்சர் போடுவார்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இப்போதே 9 அமைச்சர்கள் அங்கு இருக்கிறார்கள். அதையும் தாண்டி இந்தமுறை எங்கள் தே.ஜ.கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. 

பி டீம் அதிமுக

 ஒரு தேர்தலில் நிற்காமல் ஒதுங்கிகொண்ட கட்சி இந்த தேர்தலில் இவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள், இவர்களுக்கு போடாதீர்கள் என்று சமூகவலைதளங்களில் பிரசாரம் செய்வதை பார்க்கிறோம். ஆனால், அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் நின்றால், மூன்றாவது, நான்காவது இடத்தில் தான் வருவார்கள் என்பதால் நிற்கவில்லை. ஆனால், நாங்கள் முதல் இடத்தில் வரக்கூடாது என்பதற்காக அவர்கள் பிரசாரம் செய்கிறார்கள். ஏ டீம் என்கிற தி.மு.க ஜெயிப்பதற்காக பி டீம் என்கிற அ.தி.மு.க தேர்தலில் நிற்காமல் ஒதுங்கிகொண்டது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மற்றுமொரு முறை அது நிரூபணமாகிறது. கள்ளச்சாராய மரண விவகாரம் கண்டிப்பாக இடைத்தேர்தலில் எதிரொலிக்க வேண்டும். எதிரொலிக்கும் என்று நம்புகிறோம். ஒரு எம்.எல்.ஏ வருவதால் நாங்கள் ஆட்சியைப் பிடிக்க போவதில்லை. ஆனால், அரசுக்கு அதுவொரு எச்சரிக்கை செய்தியாக மாறும். 

அரசியலில் பீடை

  அரசியலில் படிக்காதவர்கள் இருந்தால் என்ன ஆகும் என்பதற்கு ஜெயக்குமார் நல்ல உதாரணம். வெள்ளை வேட்டிக் கட்டிக்கொண்டு, அவர் நாமம் வாழ்க, இவர் நாமம் வாழ்க என்று பலர் தமிழக அரசியலில் சுற்றிக்கொண்டு வருகிறார்கள். அவர்களால் தான் தமிழக அரசியலில் பீடை பிடித்திருக்கிறது. அதிமுக அழிவுக்கு பலபேர் காரணம் என்றாலும், அதில் ஜெயக்குமார் முதல் காரணம். சொந்த ஊர்...அமைச்சராக இருந்தார்..தென் சென்னை தனது கோட்டை என்றார். ஆனால், தென்சென்னை தொகுதியில் அவரது மகன் டெபாசிட் இழந்துள்ளார். அவரெல்லாம் பேசலாமா?. அதனால், அவரது பேச்சை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஒரு பொலிட்டிசியன் அப்டேட்டடாக இருக்க வேண்டும் என இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள். ஆனால், எந்த அப்டேட்டையும் தெரிந்துகொள்ளாமல் காலையிலும், மாலையிலும் தனது வீட்டில் லுங்கியைக் கட்டிக்கொண்டு பிரஸ்மீட் வைக்கிறார். இந்த இரண்டையும் வைத்தால் கட்சி வளர்ந்துவிடுமா?. என்னை பா.ஜ. கட்சியில் இருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்று அ.தி.மு.க-வினர் துடிக்கிறார்கள். அதனால், அவர்கள் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.

 ஆனால், நான் எங்கேயும் போகபோவதில்லை. இங்கேதான் இருக்கப் போகிறேன். ஜெயக்குமார் அண்ணா எவ்வளவு சாமியை வேண்டுமானாலும் கும்பிடட்டும். அதேநேரம், இந்த அண்ணாமலை பா.ஜ.-வில் லட்சத்தில் ஒருவர்தான். நான் கட்சியை விட்டுப் போனால், அடுத்து ராமசாமியோ, குப்புசாமியோ, சுந்தரோ இந்த பதவிக்கு வந்து என்னைவிட இன்னும் பத்து மடங்கு சிறப்பாக செயல்பட போகிறார். அல்லது மாலினியோ, நளினியோ வரலாம். அதனால், எத்தனை பிரஸ்மீட் கொடுத்தாலும், அ.தி.மு.க அழிந்துகொண்டிருக்கிறது என்பது தொண்டர்களுக்கு தெரியும். முனுசாமியும், ஜெயக்குமாரும் ஒரு பிரஸ்மீட் மூலம் பேசினால், இந்தப் பக்கம் பா.ஜ.-வுக்கு வாக்கு வங்கி ஒரு சதவிகிதம் அதிகரிக்கும்.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க