tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

திருச்சி, நவ. 21– அதிமுக கூட்டணிக்கு வருபவர்கள் சும்மா வருவது இல்லை. 20 சீட் கேட்பதோடு, ரூ.50 கோடிஅல்லது ரூ.100 கோடி பணம் கேட்கின்றனர். இதனால்எடப்பாடி மாட்டிக்கொண்டு முழிக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பான தகவலை வெளியிட்டார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி கைக்குஅதிமுக வந்தபின்னர், தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இரு மக்களவைத் தேர்தல், 2021 சட்டசபை பொதுத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல் உள்பட தொடர்ந்து பத்து முறை அதிமுக தோற்றது. எனவே 2026 சட்டசபை தேர்தலில் மெகா கூட்டணி அமைத்துஎப்படியாவது திமுகவை தனிமைப்படுத்தி தோற்கடிக்க வேண்டும் என்பதே பழனிசாமியின் திட்டமாக உள்ளது. இதற்காக திமுக அணியில் உள்ள விசிக மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் திமுக அணியில் யாரும் அசைவதாக தெரிய வில்லை. திமுக கூட்டணியிலேயே நீடிப்பதாக அறிவித்து விட்டனர். புதிதாக கட்சி துவங்கிய விஜய்யுடன்பேச்சு நடத்திய போதிலும் அதில்உடன்பாடு எட்டப்படவில்லை. முதல்வராகும் ஆசையில் கட்சி துவங்கிய விஜய், அதிமுக அணியில் சங்கமம் ஆகி இரட்டை இலக்கத்தை பிடிக்க விரும்பவில்லை. எனவே அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்று விஜய் அறிவித்து விட்டார்.இதனால் அதிமுகவின் அணியில் யாருமே சேருவதற்கு முன்வரவில்லை. இதனால் அதிமுக தலைவர்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.

கோடிகளில் பேரம்

 இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியை பலப்படுத்தும் பணியில் அதிமுக ஈடுபட்டு வருகிறது. அதன்படி திருச்சி மாவட்ட அதிமுக கள ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், அதிமுக கூட்டயில் சேர சில கட்சிகள் பேரம் பேசியதை பகிரங்கமாக வெ ளிப்படுத்தினார். அவர் பேசியதாவது:

எடப்பாடியார் இந்த கூட்டத்திற்கு வரும்போதே பேட்டி கொடுத்து கூட்டணியை கெடுத்துவிடாதீர்கள் என்று எங்களிடம் அறிவுறுத்தினார். 'நீங்கள் பேட்டியில் யாரையாவது திட்டிவிடுவீர்கள், அவர்கள் கோபித்துக் கொள்வார்கள். அதனால் பார்த்து பேசுங்கனு அவர் கையெடுத்து கும்பிட்டார்.அதனால் நாங்கள் ஊடகங்களிடம் பேசுவதில்லை.

 கூட்டணி தொடர்பான விஷயங்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார். நம்முடைய கூட்டணிக்கு வர வேண்டும் என்றால் ரணவேதனை இருக்கிறது. ஆனால் எவன் வந்தாலும் சும்மாவா வரான். ஒரு 20 சீட் கொடுங்க. ஒரு 50 கோடி கையில் கொடுங்க. ரூ.100 கோடி கொடுங்கனு கேட்குறாங்க.. ஏதோ நெல், அரிசி விற்பது மாதிரி பேரம் பேசுகிறார்கள்.

 நாம் எங்கே போவது? இப்போது அதிமுக மார்க்கெட் போய் கொண்டிருக்கிறது. எடப்பாடியாரை தான் மக்கள் பேசி கொண்டு இருக்கிறார்கள் என்று அந்த கட்சி தலைவர்கள் கூறுகின்றனர். அப்போது ஏன் தலைவரே.. ரூபாயை குறைச்சிக்க கூடாதா? என்று சொன்னால்.. இதை வைத்து தான் பிஸ்னஸ் நடத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். அந்த கொடுமையில் எடப்பாடி மாட்டி கொண்டு இருக்கிறார். கூட்டணிக்கு பேசி கொண்டு இருக்கிறார். விரைவில் நல்ல செய்தி வரும். கள ஆய்வு என்பது நிர்வாகிகளை உற்சாகப்படுத்துவதுதான்.. ஆகவே, நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு கட்சிக்கு வெற்றியைத் தேடி தர வேண்டும்.

இவ்வாறு திண்டுக்கல்சீனிவாசன் கூறினார். 

 திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பேச்சு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு அதிமுக கூட்டணியில் இணைய எந்த கட்சி ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி கேட்டுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க