tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஆக. 27–

எனது நேர்மை, நாணயத்தைப் பற்றி பழனிசாமி பாடம் நடத்த வேண்டாம். அவர் ஏலத்தில் முதல்வர் பதவியை எடுத்து தவழ்ந்துபோய், காலில் விழுந்து முதல்வர் ஆனவர். அதிமுக இப்போது டெண்டர் கட்சி ஆகி விட்டது என்று அண்ணாமலை காட்டமாக கூறினார்.

 

சென்னையில் நடந்த பா.ஜ.கூட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

என்னைப் பற்றி எடப்பாடி பழனிசாமி சிலகருத்துக்களை கூறி இருக்கிறார்.யாரையோ பிடித்து பதவிக்கு வந்த அண்ணாமலைக்கு என்ன தெரியும்? உழைக்காமலேயே பதவிக்கு வந்திருக்கிறார். அண்ணாமலைக்கு இருப்பது வாயும் நாக்கும் தான்..மைக்கைப் பார்த்தாலே பொய் பேசுவார் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு மறுப்பு பேசாவிட்டால் தவறாகப் போய் விடும். நாளைக்கு மூன்று மாத காலம் படிக்கச் செல்ல இருக்கிறேன். இதே பொய்யை பத்து முறை சொன்னால் உண்மையாகி விடும். எனவே இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

 எடப்பாடி பழனிசாமி சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் நடந்த சண்டையில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.அதே சிலுவம்பாளையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு சிறைக்கு போனார். கைது செய்யப்படாத ஒருவர் மேற்கு தொடர்ச்சி மலையில் ஔிந்து இருந்தார். இன்று திமுக வில் இருக்கிற மூத்த அமைச்சர், அன்று அதிமுக அமைச்சர். அவர் கையை காலை பிடித்து வழக்கை முடித்து விட்டு வெ ளியே வந்து சிலுவம்பாளையம் பஞ்சாயத்து தேர்தலில் நின்று தோற்ற மனிதர் நீங்கள். தயவு செய்து எனக்கு நேர்மையைப் பற்றி, நாணயத்தைப்பற்றி நீங்கள் பாடம் நடத்த வேண்டாம். 

  கூவத்துாரில் நடந்த கட்சியின் பொதுச்செயலாளர் தேர்ந்து எடுக்க கூடிய நிகழ்வா? கூவத்துாரில் நடந்ததுஅலங்கோலம். எம்ஜிஆர், ஜெயலலிதா நடத்திய ஒரு கட்சி, தமிழகத்தில் திமுகவுக்கு மாற்றாக இருக்கவேண்டும் என்று மக்கள் நினைத்த கட்சி. கூவத்துாரில் என்ன அநியாயம் நடந்தது. முதலமைச்சரை தேர்ந்து எடுக்க டெண்டர் சிஸ்டம் நடந்தது. ஹையஸ்ட் பிட்டராக எடப்பாடி பழனிசாமி. மீடியம் பிட்டராக கொங்கு பதவியில் இன்னொரு அமைச்சர். லோயஸ்ட் பிட்டராக தென்பகுதியில் ஒரு அமைச்சர். என்ன பிட்டிங்... எந்த எம்.எல்.ஏ.வுக்கு மாசம் மாசம் என்ன பணம் கொடுக்க வேண்டும் என்பது தான் கூவத்துார் பிட்டிங் முறை. 

 அதன் பிறகு தவழ்ந்து, காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமி, தன்மானம் மிக்க ஒரு விவசாயியின் மகனை... பச்சை மையில் கையெழுத்து போட்டு ஒரு பைசா வாங்காத இந்த அண்ணாமலை பற்றி அவதூறு கூறிய எடப்பாடிபழனிசாமி என்ற தற்குறிக்கு எந்த வித அங்கீகாரமும் கிடையாது. 

  திமுகவுடன் எப்போதும் பா.ஜனதா கூட்டணி வைக்காது. தொண்டர்களை கேட்டுத்தான் தேசிய கட்சியான பாஜ முடிவு எடுக்கும். நமக்கு திமுக, அதிமுக இருவருமே எதிரிகள்தான். திமுக என்பது ஒரு தீய சக்தி. 50 ஆண்டு காலமாக தமிழக மக்கள் நன்றாக உணர்ந்துள்ள தீய சக்தி. மற்றொன்று அதிமுக. முன்பு இருந்த அதிமுக வேறு. தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக டெண்டர் கட்சி போல ஆகிவிட்டது. அதிகமாக விலைக்கு டெண்டர் எடுத்து எடப்பாடி பழனிசாமி கட்சியை நடத்தி வருகிறார். இரண்டு திராவிட கட்சிகளை அகற்றவே என்னை மாநில தலைவராக நியமித்து உள்ளனர்.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

+++

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க