tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஜூன் 7-

கொங்கு மண்டலத்தில் அண்ணா தி.மு.க., பாரதீய ஜனதா மறைமுக உறவு இருந்துள்ளதை எஸ்.பி.வேலுமணியின் பேட்டி அம்பலப்படுத்தி உள்ளது என்று செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, எங்கள் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பியுள்ளோம். அந்த தீர்மானத்தில் இளம் தலைவர் ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக நியமிக்க நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளோம்.

தேர்தல் ஆணையம் அநீதி

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 100 வாக்கு, ஆயிரம் வாக்கு, 3000 வாக்குகள் வித்தியாசத்தில் 25 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. குறிப்பாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு வாக்கில் பா.ஜ.க. வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள். அதனை நாங்கள் கேள்வி எழுப்பிய போது, மீண்டும் 48 வாக்குகளில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. தொடர்ந்து தேர்தல் ஆணையம் நேர்மையாக நடக்காமல் அநீதி இழைத்து வருகிறது.

அதே வேளையில் விருதுநகரில் தவறுகள் நடந்துள்ளது என்று தேமுதிக தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போதோ, வெளியில் வந்தோ, தேர்தல் அதிகாரியிடமோ மறுவாக்கு எண்ணிக்கை வேண்டும் என்று எந்த விதமான கோரிக்கையையும் வைக்காமல், அடுத்த நாளில் இது போன்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார்கள்.

கொங்கு மண்டலத்தில் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி தொகுதிகளில் அண்ணா தி.மு.க. மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி அளித்துள்ள பேட்டியில், அண்ணா தி.மு.க., பாஜக இணைந்து செயல்பட்டிருந்தால் பல தொகுதிகளில் வென்றிருப்போம் என்று கூறியுள்ளார். இதன் மூலம் பாஜக, அண்ணா தி.மு.க. இடையே கொங்கு மண்டலத்தில் கள்ள உறவு இருந்தது அவருடைய பேட்டி மூலம் வெளிப்பட்டுள்ளது.

ஏனெனில் அண்ணா தி.மு.க. தலைவர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா பற்றி தொடர்ந்து அவதூறான விமர்சனங்களை பாஜக தலைவர் முன்வைத்த போதும் அந்தக் கட்சியோடு தொடர்பு வைத்துக்கொள்ள துடிப்பது ஏன்? அது பாஜக அண்ணா தி.மு.க.வினர் இடையே இருக்கும் உறவை தானே காட்டுகிறது.

தமிழ்நாடு பா.ஜ.க. தோழமைக் கட்சிகளின் வாக்குகளையும் சேர்த்துக் கொண்டு தங்கள் கட்சி 10 சதவீத வாக்கு பெற்று விட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. பா.ம.க, ஓபிஎஸ் தலைமையிலான அணி, அமமுக ஆகியோருடன், பாஜக கூட்டணியில் பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், தேவநாதன், ஜான்பாண்டியன், சரத்குமார் உள்ளிட்ட சாதி ரீதியான கட்சிகள் இணைந்து தாமரை சின்னத்தில் போட்டியிட்டதால்தான் இந்த வாக்குகள் கிடைத்துள்ளது.

மக்களால் நிராகரிக்கபட்ட பாஜக

மோடியையும் பாஜகவையும் தமிழர்கள் நிராகரித்து உள்ளார்கள். மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியிலேயே இரண்டு மடங்கு வாக்குகள் குறைவாக பெற்றுதான் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் ராகுல் காந்தி போட்டியிட்ட தொகுதியில் வாக்கு வித்தியாசத்தை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அதேபோல், ராஜஸ்தானில் மோடி எந்த தொகுதியில் இருந்து வெறுப்பு பேச்சை பேசி, பிளவுவாதத்தை விதைத்தாரோ, அந்தத் தொகுதியிலேயே பாஜக தோல்வி அடைந்திருக்கிறது.

அதேபோல் ஸ்மிருதி ராணி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை பார்த்து, ராகுல் காந்தியின் வீட்டு வேலைக்காரரை நிறுத்தி உள்ளீர்கள் என்று கேவலமாக பேசினார். ஆனால் ராகுல்காந்தி, அவர் எங்கள் குடும்ப உறுப்பினர் என்று கண்ணியமாக பதில் அளித்தார். அந்த எளிய தொண்டரை வைத்து சுமிருதி ராணி தோற்கடிக்கப்பட்டுள்ளார். ஆணவத்திற்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர் என்றார்.

செயற்குழு கூட்டம்

மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் 11 ம் தேதி காமராசர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். அதேபோல் புதுடெல்லியில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்திலும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் பங்கேற்க இருக்கிறோம் என்று செல்ல பெருந்தகை கூறினார்.

முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுப்பராயன், செல்வராஜ், காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் ஆகியோர் செல்வப்பெருந்தகையை சந்தித்து நாடாளுமன்ற வெற்றிக்கு பாடுபட்டதற்கு நன்றி தெரிவித்து பொன்னாடை அணிவித்தனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், பொருளாளர் ரூபி மனோகரன், ஊடகப்பிரிவு தலைவர் ஆனந்த் சீனிவாசன், இதயத்துல்லா, பொதுச் செயலாளர் எஸ்.ஏ.வாசு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க