tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஆக. 18– 

மூன்று தலைமுறை கனவான அத்திக்கடவு –அவிநாசி திட்டம், ஒரு வழியாக நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இதன் மூலம் , பவானி ஆற்றில், காளிங்கராயன் அணைக்கட்டிலிருந்து ஆண்டுக்கு 1.50 டிஎம்சி உபரி நீர், 6 நீரேற்று நிலையங்கள் வாயிலாக, ஆயிரத்து 45 நீர் நிலைகளில் நிரப்பப்படும். இதனால், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில், 24 ஆயிரத்து 468 ஏக்கர் நிலம் பயன்பெறும். இதனால் 3 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

 

அத்திக்கடவு– அவிநாசி திட்டம், ஈரோடு, திருப்பூர், கோவை என 3 மாவட்டங்களின் மூன்று தலைமுறை கனவு. 1957ம் ஆண்டு முதன்முதலாக எழுந்த கோரிக்கையை நிறைவேற்ற அன்றைய முதல்வர் காமராஜரிடம் கூறி அழுத்தம் தந்தவர், அவிநாசி தொகுதி காங். எம்எல்ஏவாக இருந்த கே.மாரப்பக்கவுண்டர். 

1972ம் ஆண்டில் அத்திக்கடவு– - அவிநாசி திட்டத்தைச் செயல்படுத்த அப்போதைய முதல்வர் கருணாநிதி முயற்சி மேற்கொண்டார். ஆட்சி மாற்றத்தால் 1976க்குப் பின் இத்திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. மீண்டும் 1996ல் முதல்வராகப் பொறுப்பேற்ற கருணாநிதி, இத்திட்டம் குறித்து மறுபடியும் ஆய்வு செய்து, நிறைவேற்ற ஒப்புதல் வழங்கினார். ஆனால் ஆட்சி மாற்றம் எற்பட்டதால் மீண்டும் இத்திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டது.  

 இப்படி 60 ஆண்டுக்காலமாக அந்தப் பகுதி மக்களின் தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து இப்போது ரூ.1916.41 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து அத்திக்கடவு– அவிநாசி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து, காணொலிக்காட்சிவழியாக நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி வைத்து, மாநிலத்துக்கு அர்ப்பணித்தார்.  

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கயல்விழி, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, நீர்வளத்துறை செயலர் மணிவாசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். 

ஈரோட்டில் இருந்து அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், கலெக்டர்கள் ராஜகோபால் சுன்கரா (ஈரோடு), கிறிஸ்துராஜ் (திருப்பூர்), கிராந்தி குமார் பாடி (கோவை), எம்பிகள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். 

24,468 ஏக்கர் 

இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்ப்புறத்திலிருந்து ஆண்டுக்கு 1.50 டிஎம்சி உபரி நீரை பெறமுடியும்.  

இங்கிருந்து வினாடிக்கு 250 கன அடி வீதம் 70 நாட்களுக்கு 6 நீரேற்று நிலையங்கள் மூலம், ஆயிரத்து 65 கிமீ நீளத்துக்கு நிலத்தடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு, உபரி நீரானது, நீர்வளத்துறையின் 32 ஏரிகள், ஊராட்சி ஒன்றியங்களின் 42 ஏரிகள், 971 குளம், குட்டைகள் என மொத்தம் ஆயிரத்து 45 நீர் நிலைகளில் நிரப்பப்படும். 

இந்த நீரைக்கொண்டு, ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 24 ஆயிரத்து 468 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். 

ஒரு நூற்றாண்டு கனவு, மூன்று தலைமுறை கனவு என அழைக்கப்படும் அத்திக்கடவு –அவிநாசி திட்டம், ஒரு வழியாக செயல்பாட்டுக்கு வந்திருப்பது கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கும் மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க