tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, அக். 19–
‘சபா­நா­ய­கர் அப்­பாவு பேச்­சால், அ.தி.மு.க.,வுக்கு எப்­படி களங்­கம் ஏற்­பட்­டது’ என, சென்னை உயர் நீதி­மன்­றம் கேள்வி எழுப்பி உள்­ளது.
சென்­னை­யில் நடந்த நிகழ்ச்சி ஒன்­றில், சபா­நா­ய­கர் அப்­பாவு பேசும்­போது, முதல்­வர் ஜெய­ல­லிதா மர­ணம் அடைந்த நேரத்­தில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த 40 எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க.,வில் சேர தயா­ராக இருந்­த­தா­க­வும், அதை தி.மு.க., தலை­வர் ஸ்டா­லின் ஏற்க மறுத்­த­தா­க­வும் தெரி­வித்­தி­ருந்­தார்.
    அவ­ரது பேச்சு, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்க­ளுக்­கும், அ.தி.மு.க.,வுக்­கும் களங்­கம் ஏற்­ப­டுத்­தும் வித­மாக உள்­ளது எனக் கூறி, அந்த கட்­சி­யின் வழக்­க­றி­ஞர் பிரிவு இணைச் செய­ல­ரும், முன்­னாள் எம்.எல்.ஏ.,வுமான ஆர்.எம்.பாபு­மு­ரு­க­வேல், வழக்கு தொடர்ந்­தார். இந்த வழக்கு, எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்­கு­களை விசா­ரிக்­கும் சென்னை சிறப்பு நீதி­மன்­றத்­தில், விசா­ர­ணை­யில் உள்­ளது. இவ்­வ­ழக்­கில் சபா­நா­ய­கர் அப்­பாவு ஆஜ­ரானார். 
    
இந்­நி­லை­யில், தனக்கு எதி­ரான வழக்கை ரத்து செய்­ய­வும், விசா­ரணை முடி­யும் வரை தடை விதிக்­க­வும் கோரி­யும், சென்னை உயர் நீதி­மன்­றத்­தில், சபா­நா­ய­கர் அப்­பாவு மனு  தாக்­கல் செய்­தார். இம்­மனு, நீதி­பதி ஜெயச்­சந்­தி­ரன் முன், விசா­ர­ணைக்கு வந்­தது.
சபா­நா­ய­கர் அப்­பாவு சார்­பில், மூத்த வழக்­க­றி­ஞர் பி.வில்­சன், வழக்­க­றி­ஞர் ரிச்­சர்ட்­சன் ஆஜ­ராகி, ‘வழக்கு தொடுத்­த­வ­ருக்கு எதி­ராக, அப்­பாவு எந்த கருத்­தை­யும் தெரி­விக்­க­வில்லை. அப்பா­வு­வின் பேச்சு, அர­சி­யல் கட்­சியை அவ­தூறு செய்­த­தாக கூற முடி­யாது. ‘கட்சி சார்­பில் என்­றால், அதன் தலை­வர் அல்­லது பொதுச்­செ­ய­லர் தான், அப்­பா­வுக்கு எதி­ராக அவ­தூறு வழக்கு தாக்­கல் செய்ய முடி­யும். எனவே, அவ­தூறு வழக்கை ரத்து செய்ய வேண்­டும்’ என்­ற­னர்.
பாபு முரு­க­வேல் சார்­பில் ஆஜ­ரான வழக்­க­றி­ஞர், ‘கட்சி சார்­பில் அவ­துாறு வழக்­குத் தொட­ரு­வ­தற்­கான அங்­கீ­கா­ரத்தை கட்சி அளித்­துள்­ளது’  என்­றார். 
கட்சி தாவவில்லை
அப்­போது குறுக்­கிட்ட நீதி­பதி, ‘பாபு முரு­க­வேல், அவ­தூறு வழக்கு தாக்­கல் செய்ய, என்ன உரிமை உள்­ளது; 40 எம்.எல்.ஏ.,க்களில் ஒரு­வ­ரும் வழக்கு தொட­ர­வில்லை. அப்­பாவு பேச்­சில், யார் பெய­ரை­யும் குறிப்­பி­ட­வில்லை’ என்­றார்.
மேலும், ‘கட்­சிக்கு களங்­கம் ஏற்­ப­டுத்தி விட்­ட­தாக, கற்­ப­னை­யாக கரு­தக் கூடாது. 5 ஆண்டு பதவி காலத்தை, அ.தி.மு.க., பூர்த்தி செய்­தது. யாரும் கட்சி தாவ­வில்லை. அப்­பாவு பேச்­சால் எப்­படி அ.தி.மு.க.,வின் நற்­பெ­ய­ருக்கு களங்­கம் ஏற்­பட்­டது; இது எப்­படி அவ­தூ­றா­கும்’ என கேட்­டார்.
அதைத்­தொ­டர்ந்து, மனு­வுக்கு வரும் 22ம் தேதிக்­குள் பதில் அளிக்­கும்­படி, பாபு முரு­க­வே­லுக்கு உத்­த­ர­விட்டு, விசா­ர­ணையை, நீதி­பதி ஜெயச்­சந்­தி­ரன் தள்ளி வைத்­தார்.
++

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க