tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஜூலை 7–

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் அரசியல் பழிவாங்கல் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறியதாவது: .

 ஆம்ஸ்ட்ராங் படுகொலை நடந்த மூன்று மணிநேரத்தில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. ஆம்ஸ்ட்ராங் உடன் வீட்டின் வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்த நபர்கள் படுகாயத்துடன் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையின் படி, இந்த கொலை அரசியல் பழிவாங்கலுக்காக நடந்தது போல் தெரியவில்லை. எந்த வாகனத்தில் வந்தார்கள், எம்மாதிரியான ஆயுதங்களை பயன்படுத்தினார்கள் என்பது குறித்த விசாரணை நடக்கிறது.

மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பொன்னை பாலுவின் அண்ணன் ஆற்காடு சுரேஷ் சிறையில் இருக்கும் போது என்ன நடந்தது என விசாரித்து, அதற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இருகிறதா என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட பொன்னை பாலு மீது 4 வழக்கு, மணிவண்ணன் மீது 4 வழக்கு என ஒருவர் தவிர மற்றவர்கள் மீது வழக்குகள் உள்ளன.

இதுவரை பிடிப்பட்டவர்களில் தென்மாவட்ட குற்றவாளிகள் இல்லை. பாலு வேலூர் மாவட்டம், மணிவண்ணன் திருவள்ளுர், திருமலை பெரம்பலூர். கடந்த ஓராண்டு காலமாக ஆயிரத்து 192 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் போடப்படுள்ளது. இதனால் அனைத்து ரவுடிகள் மீதும் இப்போது தீவிர கண்காணிப்பு உள்ளது. தற்பொழுது கூடுதல் கண்காணிப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கிற்கு நேரடியாக மிரட்டல் இருந்ததாக தகவல் இல்லை. அவர் அரசியலில் உள்ளதால் இதுகுறித்து உளவுத்துறை கண்காணிப்பில் கூட இதுமாதிரியான தகவல் வரவில்லை. ஆம்ஸ்ட்ராங் மீது 7 வழக்குகள் இருந்தது. அவை அனைத்தும் முடிவடைந்தது. கடந்த 2023ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 63 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் இது 58-வது கொலை.

இவ்வாறு அவர் கூறினார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க