tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

தென்காசி ஆக. 18

 

 ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி முன்னாள் மாணவர் சங்க 23ஆவது பொதுக் குழுக்கூட்டம் நடை பெற்றது.கல்லூரி சுயநிதிப்பிரிவு கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் எஸ்.வி. பெருமாள் தலைமை வகித்தார். மாணவிகள் கே.ஸ்ருதி கோமதி, ஆர்.சௌர்ந்தர்யா கடவுள் வாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். வணிகவியல் இரண்டாமாண்டு மாணவி எஸ்.செளமியா வரவேற்பு பரதநாட்டியம் ஆடினார். துணைத் தலைவர் ஆர்.எஸ்.சிவராமன் வரவேற்றார். செயலர் முகைதீன் பிச்சை ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் கே.சிவசங்கர் நிதி அறிக்கை வாசித்தார். கல்லூரிச் செயலர் ஜி.தேவராஜன், முதல்வர் எஸ். மீனாட்சி சுந்தர், மாணவர் சங்க முன்னாள் தலைவர் வி.டி.ராஜன், பெங்களூரு மண்டல செயலர் வி.ராம சுப்பிரமணியன், எஸ்.ஹரிகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கத் தலைவர் எஸ்.வி. பெருமாள் தலைமை உரையாற்றினார். துணைத் தலைவர் எஸ்.தங்கம் சிறப்பு விருந்தினர் அறிமுக உரையாற்றினார். தமிழக நில வரன்முறை குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் மாணவர் எல். சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து கல்லூரியில் பயின்று 50 ஆண்கடுள் நிறைவடைந்த முன்னாள் மாணவர்கள், கல்லூரியில் பயின்று அரசு மற்றும் வங்கிகளில் பணியில் சேர்ந்த முன்னாள் மாணவர்கள், தேசிய மாணவர்படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டங்களில் சாதனைப் படைத்த மாணவர்கள் உள்ளிட்டோருக்கு சாதனையாளர் விருது வழங்கப் பட்டது. நிகழ்ச்சிகளை வணிகவியல் மூன்றாமாண்டு மாணவிகள் எஸ்.அனிகா, கே. ஃபாசியா ஆகியோர் தொகுத்து வழங்கினர். துணைப் பொதுச் செயலர் எஸ்.முருகேசன் நன்றி கூறினார். 

நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் சுந்தரம், முன்னாள் பேராசிரியர்கள் வி.மகாதேவன், அ. பழனிவேல், முன்னாள் மாணவர்கள் ஆய்க்குடி அமர்சேவா சங்க நிறுவனர் ராமகிருஷ்ணன், மருத்துவர்கள் முருகையா, மூர்த்தி, குஜராத் உமா ராமகிருஷ்ணன் மற்றும் சென்னை, மதுரை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து முன்னாள் மாணவர்கள், மாணவிகள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொருளாளர் கே.சிவசங்கர், அலுவலகச் செயலர் எஸ்.சதீஷ் நாராயணன் மற்றும் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க