tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஜூலை 27–

இது மத்திய பட்ஜெட் அல்ல, நிதீஷ்–நாயுடு பட்ஜெட் என்று மக்களவையில்  

 மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் திருச்சி தொகுதி மதிமுக எம்.பி. துரைவைகோ பேசியது:   

 மத்திய பட்ஜெட்டில் எனது மாநிலமான தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 6 சதவீதம் பங்களிப்பை கொண்டுள்ள தமிழ்நாட்டுக்கான, மத்திய அரசின் வரி பங்கீடு 4 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஏதும் அறிவிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பீட்டு தொகையான 63 ஆயிரம் ரூபாய் கோடியில், தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியிலும் இதுவரை 21 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. இதேபோன்று மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்த அறிவிப்பும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. தமிழ்நாட்டில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் கூட பாஜ வெற்றி பெறவில்லை என்பதால் தான் மத்திய அரசு இப்படி நடந்து கொள்கிறது.

 மாநிலத்தின் மையப் பகுதியாக திகழும் திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தின் தேவை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை அளிக்கப்பட்டும், திட்டத்தை தொடங்குவது தொடர்பான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. வெறுப்பு அரசியலுக்கு தமிழ்நாடு இடமளிக்கவில்லை என்பதாலேயே மத்திய அரசு இப்படி செய்கிறது. சென்னை மாநகர போக்குவரத்துக்கு நெரிசலை குறைப்பதற்கு முக்கிய தேவையான, தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான விரைவு சாலைத் திட்டம் குறித்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு மட்டும் புறக்கணிக்கப்படவில்லை. இந்த நாட்டின் விவசாயிகள், ஏழைகள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் நலனும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையேயான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் இந்த நாட்டின் ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான பட்ஜெட் அல்ல. மாறாக, தங்களது கூட்டணிக் கட்சிகளை திருப்திப்படுத்துவதன் மூலம் ஆட்சியை தக்கவைத்து கொள்வதற்கான பட்ஜெட்.அதாவது இது 'நிதீஷ் -நாயுடு பட்ஜெட்' .

இவ்வாறு துரைவைகோ பேசினார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க