tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஜூன் 26–

இந்து கோவில்களில் இருந்து ஷீரடி சாய்பாபா சிலைகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சாய்பாபா வழிபாடு இந்து மதத்தில் மட்டும் இல்லை என்பதால், அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களை இந்து சமய அறநிலையத்துறை துறையினர் நிர்வகிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மனுதாரர் குறிப்பிட்டார்.

 கோவை உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த டி.சுரேஷ்பாபு என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: 

சிவன் வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சைவர் நான். பல இந்து கோவில்களில் ஷீரடி சாய்பாபாவின் வெள்ளை பளிங்கு சிலைகளை நிறுவும் பழக்கம் அதிகரித்து வருவது குறித்து கவலை அளிக்கிறது. இந்த நடைமுறை ஆகமங்களுக்கு எதிரானது.  

 சாயிபாபாவின் பெற்றோரைப் பற்றி முரண்பட்ட கருத்துக்கள் இருக்கின்றன. அதாவது அவரது தந்தை ஒரு ஏழை முதியவர் அல்லது புனித தந்தை அல்லது துறவி தந்தை என்கிறார்கள். சாயிபாபாவின் உண்மையான பெயர் கூட தெரியவில்லை. அவரை இஸ்லாம் சமயத்தவர்கள் பலரும் பின்பற்றும் நிலையில், அவரது மத அடையாளம் குறித்து எந்த உறுதிப்படுத்தலும் இல்லை. 

   சாயிபாபா அடிக்கடி பாரசீக வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார். சாய்பாபாவின் வாழ்க்கை மற்றும் போதனைகளில் அல்லாஹ், மற்றும் குரானைப் பற்றி பேசுகிறார். 'நம்மிடம் இருப்பதில் திருப்தியடைவோம், நம் விருப்பத்தை அல்லாஹ்விடம் சமர்ப்பிப்போம் (அல்லாஹ் ரக்கேகா வையா ரஹேனா)' என்ற சொற்றொடரை சாய்பாபா அடிக்கடி பயன்படுத்தியுள்ளார். அவரே சில சமயங்களில் இந்துக் கடவுள்களைப் பற்றியும் பேசுகிறார். சாய்பாபா வழிபாடு இந்து மதத்தில் மட்டும் இல்லை என்பதால், அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களை இந்து சமய அறநிலையத்துறை துறையினர் நிர்வகிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். 

 ஷீரடி சாய்பாபாவின் சிலைகள் இந்து கோவில்களில் தாராளமாக நிறுவப்படுகின்றன. அவர் இஸ்லாம் மற்றும் இந்து மதம் இரண்டையும் போதித்த நபராக இருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் ஷீரடி சாய்பாபாவின் வெள்ளை பளிங்கு சிலைகள் இந்து மதத் தளங்களில் இருக்கிறது. மேலும், இது ஆகமங்களுக்கு எதிரான நந்திக்கு அருகில் நிறுவப்படுகிறது. இந்து கோவில்களில் உள்ள ஷீரடி சாய்பாபாவின் சிலைகளை அகற்றவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சிலைகள் இந்த கோவில்களில் நிறுவப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறி உள்ளார். 

 இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை அரசின் தலைமை காஜி மற்றும் அகில இந்திய சாய் சமாஜ் ஆகியோருக்கு எதிராக வலியுறுத்தவில்லை என்று மனுதாரரின் வழக்கறிஞர் குறிப்பிட்டார். இதனையடுத்து, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை துறையிடம் இருந்து மட்டும் இரண்டு வாரங்களுக்குள் அறிவுறுத்தல்களைப் பெறுமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க