tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

 

மார்கழி மாதத்தில் வரும் மிக முக்கியமான பெரிய விரதமாகவும், வருடத்தின் மிக முக்கியமான ஏகாதசி விரதமாகவும் கருதப்படுவது வைகுண்ட ஏகாதசி திருநாளாகும். பாவங்களை போக்கி, பலவிதமான துன்பங்களில் இருந்து விடுபட்டு, செல்வ வளம், அதிர்ஷ்டம் ஆகியவற்றை பெறுவதற்கான அற்புதமான நாளாக வைகுண்ட ஏகாதசி கருதப்படுகிறது.

 

பெருமாளுக்கே உரிய மிக முக்கியமான விரத நாளாக கருதப்படுவது வைண்ட ஏகாதசி திருநாளாகும். வருடத்தின் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருக்க முடியாதவர்கள் மார்கழி மாத வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து வழிபட்டாலே, வருடத்தின் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபட்ட பலனை பெற முடியும். இருப்பதிலேயே மிக உயர்ந்த பலனை தரக் கூடிய விரதமாக கருதப்படுவதும், பெருமாளின் அருளை பெறுவதற்கும் ஏற்ற விரதமாக கருதப்படுவது வைகுண்ட ஏகாதசி.

 

வைகுண்ட ஏகாதசி விரதம் என்பது மூன்று நாட்கள் இருக்கக் கூடிய விரதம் ஆகும். அதாவது தசமி திதியில் துவங்கி, ஏகாதசி திதியில் உபவாசமாக இருந்து, துவாதசி திதியில் பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இந்த ஆண்டு ஜனவரி 10ம் தேதி வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசி வருகிறது. ஜனவரி 09ம் தேதி பகல் 12.03 வரை தசமி திதி உள்ளது. அதற்கு பிறகு ஏகாதசி திதி துவங்கி, ஜனவரி 10ம் தேதி காலை 10.02 வரை உள்ளது. துவாதசி திதி ஜனவரி 11 ம் தேதி காலை 08.13 ம் தேதி வரை உள்ளது.

 

ஜனவரி 10ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பெருமாள் கோவில்களில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வை கண்டு தரிசித்த பிறகு, அன்று பகல் பொழுதில் தூங்காமல், உணவு எடுத்துக் கொள்ளாமல் விரதத்தை தொடர வேண்டும். ஜனவரி 10ம் தேதியன்று இரவு கண் விழித்து, ஜனவரி 11ம் தேதி காலை பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

 

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வே சொர்க்க வாசல் திறப்பு தான். அதனால் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று, சொர்க்க வாசல் கடந்து வந்து நமக்கு அருள்பாலிக்கும் பெருமாளை கண்டிப்பாக தரிசனம் செய்ய வேண்டும். விரதம் இருக்கும் மூன்று நாட்களும் பெருமாளின் திருநாமங்களை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

 

தொகுப்பு: பா. சீனிவாசன், வந்தவாசி.

ராசி பலன்

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் காணப்படும். பொன், பொருட்ச்சேர்க்கை சிலருக்கு உண்டாகும். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். நண்பர்களால் வருமான வாய்ப்புகள் உண்டாகும்.... மேலும் படிக்க

தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சமூகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள்... மேலும் படிக்க

இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் மறைமுகமாக சில இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். பயணங்கள் மூலம் புதிய... மேலும் படிக்க

அரசுப் பணிகளில் அனுகூலம் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். கடன் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். சேமிப்பு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும்.  நிலையான வருமானம்... மேலும் படிக்க

உயரதிகாரிகள் மூலம் ஒத்துழைப்புகள் ஏற்படும். குழந்தைகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். உல்லாச பயணம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தன வரவு மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். உடன் இருப்பவர்களால் புதிய... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். நீண்ட நாள் சேமிப்பு திட்டங்கள் பற்றிய எண்ணங்கள் உண்டாகும். பேச்சுக்களில் விவேகமும், பொறுமையும் வேண்டும். பெரியோர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத... மேலும் படிக்க

எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். சகோதரர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில்நுட்ப கருவிகளால் சில... மேலும் படிக்க

தடைகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற பாராட்டுக்கள் கிடைக்கும். பொன், பொருட்ச்சேர்க்கை உண்டாகும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். பேச்சு வன்மையால் காரிய சித்தி ஏற்படும். கணவன், மனைவிக்கு இடையே... மேலும் படிக்க

கலை பணிகளில் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிர்காலம் குறித்த சில முடிவுகளை எடுப்பீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி... மேலும் படிக்க

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதில் புது விதமான எண்ணங்களும் ஆசைகளும் உருவாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் சாதகமான சூழல்கள் ஏற்படும். பொழுதுபோக்கான விஷயங்களில் ஈடுபட்டு மனம்... மேலும் படிக்க


நண்பர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். கணிதம் சார்ந்த துறைகளில் வாய்ப்புகள் மேம்படும். விவசாயப்... மேலும் படிக்க

வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கற்பனை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை... மேலும் படிக்க