tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஆக.1–-

டெல்லி ராஜேந்திர நகரில் உள்ள ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் கீழ் தளத்தில் கடந்த சனிக்கிழமை மழை வெள்ளம் புகுந்ததில் 2 மாணவிகளும் ஒரு மாணவரும் பரிதாபமாகப் பலியாயினர். இதுகுறித்து மேல்நிலை குழு விசாரணை நடத்தக் கோரி ‘குடும்ப்’ என்ற சேவை அமைப்பு, ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளது.

 இதை, பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன், நீதிபதி துஷார் ராவ் கெடேலா கொண்ட பெஞ்ச் நேற்று விசாரித்தது.

விசாரணையின் போது, டெல்லி அரசை நீதிபதிகள் கடுமையாகக் கண்டித்தனர். நீதிபதிகள் கூறியதாவது:

நீங்கள் (டெல்லி அரசு), பல பகுதிகளிலும் பல மாடி கட்டடங்களை கட்ட அனுமதி வழங்குகிறீர்கள். ஆனால், அந்த பகுதிகளில் போதிய வடிகால்கள் அமைக்கப்படுவதில்லை. மழை நீர் சேகரிப்பு திட்டத்தையும் சரிவர செயல்படுத்தவில்லை. இந்த நிலவரத்தால்தான், டெல்லியில் தண்ணீர் பஞ்சம், மழைவள்ள பாதிப்பு என முரண்பட்ட பாதிப்புகள் அடிக்கடி வருகின்றன. இதற்கு என்ன காரணம் என்று கேட்டால், நிதி வசதி இல்லை என்கிறீர்கள். 

 நீங்கள் இலவச கலாச்சாரத்தை வளர்த்து விட்டீர்கள். அதனால்தான் அரசுக்கு வருவாய் குறைந்து, நிதி நெருக்கடி வருகிறது. வடிகால் அமைப்பு, பராமரிப்பு போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு பணம் இல்லாமல் போய் விட்டது. வடிகால்கள், பராமரிப்பு இல்லாததால்தான் 3 பேர் பலியாகியுள்ளனர். தாராள இலவசங்களின் விளைவாகத்தான் இப்படிப்பட்ட பல விபரீதங்கள் நடக்கின்றன. இதற்கு நீங்கள்தானே பொறுப்பு?.

அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்வதில் அலட்சியம் இருக்கக் கூடாது என்று நாங்கள் (ஐகோர்ட்) அடிக்கடி அறிவறுத்துகிறோம். அந்த வேளைகளில், ‘ரூ.5 கோடிக்கு அதிகமான செலவு கொண்ட திட்டப்பணிகளில் நிலைக்குழு ஒப்பதல் பெற வேண்டும்’ என்கிறீர்கள். ஆனால், நிலைக்குழு இன்னும் அமைக்கப்படவில்லை. நிலைக்குழு இல்லாததால், அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்வோம் என்கிறீர்கள். ஆனால், அமைச்சரவை கூட்டம் எப்போது நடக்கும் என்ற கேள்விக்கு பதில் இல்லை.

இந்த பயிற்சி மையம் இயங்கும் கட்டடம், ஏறக்குறைய நுாறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது அதை, இப்போதைய தேவைகளுக்கு ஏற்றபடி மாற்றி அமைக்காமல். போதிய பாதுகாப்பு வசதிகளை செய்யாமல், தொடர்ந்து செயல்பட அனுமதித்தது ஏன்? பயிற்சி மைய கீழ்தளத்தில், கார் பார்க்கிங் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், நுாலகத்தை அமைத்திருக்கிறார்கள். அந்த விதிமீறல் பற்றி பல முறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. விதிமீறலை அலட்சியப்படுத்தியது ஏன்?

இந்த விபரீதத்துக்கு பின், சில ஜூனியர் அதிகாரிகள் மீது சில நடவடிக்கைகள் வந்தள்ளன. ஆனால், ஏசி அறைகளை விட்டு வெளியே வராத சீனியர் அதிகாரிகளின் கண்காணிப்பு குறைபாடும் இந்த விபத்துக்கு ஒரு காரணம் அல்லவா? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை?

இவ்வாறு பல கேள்விகளால் கண்டனம் வெளியிட்ட நீதிபதிகள், ‘‘இந்த வழக்கில், டில்லி காவல்துறையை இணைக்க வேண்டும். விசாரணை, வெள்ளிக்கிழமை (ஆக.2) தொடரும், அப்போது, மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க