tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

காசாவில் இஸ்ரேல் நடத்துவது இனப்படு கொலை இல்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற யூத அமெரிக்க பாரம்பரிய நிகழ்வில் தெரிவித்துள்ளார். ஆயுதங்கள் கொடுப்பது முதல் ஐநா அவையில் போர் நிறுத்தத்தை நிராகரிப் பது வரை அமெரிக்கா இஸ்ரேலின் இனப்படுகொ லைக்கு முழு ஆதரவு கொடுத்து வருவது குறிப்பி டத்தக்கது. அமெரிக்காவின் இனப்படுகொலை ஆத ரவை கண்டித்து பைடன் பங்கேற்கும் ஒவ்வொரு நிகழ்விலும் பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விபத்து ஏற்படுத்திய இந்திய மாணவர்கள் பலி

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அல்பரெட்டாவில் மிக அதிவேக மாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் மூன்று இந்திய-அமெரிக்க மாணவர்கள் பலியாகி யுள்ளனர். ஐந்து பேர் பயணித்த காரில் ஆர்யன் ஜோஷி, ஸ்ரீயா அவ்சராலா அன்வி ஷர்மா ஆகிய மூன்று பேர் பலியாகியுள்ளனர். பலியான மூன்று பெரும் 18 வயதானவர்கள் என்றும் அதில் இரு வர் பெண்கள் என்றும் அல்பரெட்டா காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இருவர் படுகாயங்க ளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆப்கன் வெள்ளத்தால் 30 ஆயிரம் பேர் பாதிப்பு

இந்த ஆண்டு துவக்கம் முதல் ஆப்கானிஸ் தானில் ஏற்பட்ட வெள்ளத்தால் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா அவை தெரிவித்துள்ளது. மேலும் அம்மக்களு க்கு மிக வேகமாக தங்குமிடம், மருந்துகள், உணவு, பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்யவேண்டிய தேவை உள்ளது. இதற்கு அதிக உதவிகளும் வேண்டும் என கோரியுள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து வயிற்றுப் போக்கு மற்றும் நோய்த்தொற்றுகள் அதிகரித்துள் ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பொருளாதார மேம்பாட்டிற்கு புதிய சட்ட மசோதாக்கள்

இலங்கையின் பொருளாதாரத்தை மேம் படுத்தும் நோக்கில் இரண்டு முக்கிய சட்ட மசோதாக்களை இலங்கை அரசு சமர்ப்பிக்க வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளா தார உருமாற்ற சட்ட மசோதா மற்றும் பொது நிதி மேலாண்மை சட்ட மசோதா ஆகிய இரு மசோ தாக்களை இலங்கை அரசு கொண்டுவர உள்ளது. இந்த சட்டங்கள் வருவாயை அதிகரித்து எதிர் கால பொருளாதார வீழ்ச்சியை தடுக்கும் என வும் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க செய்தி யாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பாக் - சீனா உறவு உறுதியானது

பாகிஸ்தான் - சீனாவிற்கு இடையிலான உறவு பாறை போல மிகவும் உறுதியா னது என பாக் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி தெரி வித்துள்ளார். சீனா - பாக் தூதரக உறவு துவங் கப்பட்டு 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னி ட்டு, மே 21 அன்று அவர் சீன ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி கொடுத்த போது இதனை தெரிவித்தார்.சர்வதேச நிலைமை எவ்வாறு மாறினாலும், பாக் - சீன உறவு எப்போதும் பாறை போல உறு தியாக இருக்கும் என்றும் நாடுகளுக்கிடையிலான நல்ல நட்பிற்கு முன்மாதிரியாக இரு நாடுகளும் திகழ்ந்து வருகின்றன என்றும் ஜர்தாரி கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க