tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஜூலை 18–

எஸ்சி பட்டியலை திருத்த மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது.நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியே திருத்த முடியும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பீகாரில் உள்ள தன்டி தன்ட்வா இனத்தவர், மாநில அரசின் ‘மிகமிக பின்தங்கிய வகுப்பினர்’ (எக்ஸ்ட்ரீம்லி பேக்வேர்ட் கிளாஸ்-இபிசி) என்ற பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். மாநில அரசின் பிற்பட்டோர் ஆணையம் அளித்த பரிந்துரையில், ‘இபிசி பட்டியலில் உள்ள ஒதுக்கீட்டால், இவர்களின் சமூக பொருளாதார நிலையில் முன்னேற்றம் வரவில்லை. எனவே, இவர்களை முன்னேற்ற, இந்த பட்டியலில் இருந்து மாற்றலாம்’ என்று தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, தன்டி தன்ட்வா இனத்தவரை எஸ்சி பட்டியலில் சேர்க்க, பீகார் அரசு 2015 ஜூலை 1ல் தீர்மானம் நிறைவேற்றியது. அதன்பின், அவர்கள் எஸ்சி பட்டியலில் 20வது பிரிவில் உள்ள பான், சவாஸி .உளளிட்ட இனத்தவருடன் சேர்க்கப்பட்டனர். அதை எதிர்த்து எஸ்சி அமைப்புகள் தாக்கல் செய்த அப்பீலை, பாட்னா ஐகோர்ட் 2017ல் தள்ளுபடி செய்தது. அதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்திருந்தனர்.

இந்த அப்பீலை விசாரித்து வந்த நீதிபதிகள் விக்ரம் நாத், பிரசாந்த் குமார் மிஸ்ரா கொண்ட பெஞ்ச், நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. தீர்ப்பின் சாராம்சம்:

* இபிசி பட்டியலில் இருப்பதால் தன்டி தன்ட்வா இனத்தவரின் சமூக பொருளாதார நிலையில் முன்னேற்றம் வராததால், அந்த பட்டியலில் இருந்து அவர்களை மாற்றலாம் என்று, மாநில அரசின் பிற்பட்டோர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அதில் தவறு இல்லை. அவர்களை பின்தங்கிய வகுப்பினர் பட்டியலில் இருந்து பீகார் அரசு மாற்றிய நடவடிக்கையும் தவறு இல்லை. ஆனால், அவர்களை எஸ்சி பட்டியலில் பீகார் அரசு சேர்த்தது சரியல்ல.

* தன்டி தன்ட்வா இனத்தவரை முன்னேற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கில்தான், அவர்களை எஸ்சி பட்டியலில் பீகார் அரசு சேர்த்திருக்கிறது. ஆனால், இவ்வாறு எஸ்சி பட்டியலை திருத்த மாநில அரசுக்கு சட்டப்படியான அதிகாரம் எதுவும் கிடையாது. பார்லிமென்ட்டில் சட்டம் நிறைவேற்றிதான், இப்படிப்பட்ட திருத்தங்களை சேர்க்க முடியும். 

எனவே, பீகார் அரசின் 2015 ஜூலை 1 தீர்மானம், எஸ்சி பட்டியலில் சேர்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் சட்டவிரோதம். அவை ரத்து செய்யப்படுகின்றன.

* எஸ்சி பட்டியலில் சேர்க்கப்பட்ட தன்டி தன்ட்வா இனத்தவர், எஸ்சி இடஒதுக்கீடு அடிப்படையில், அரசு பணிகளில் சேர்ந்திருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை. அவர்களை பணிநீக்கம் செய்யவோ, இதுவரை பெற்று வந்த சம்பளம், படிகள் போன்றவற்றை திருப்பி வசூலிக்கவோ தேவையில்லை. அவர்களை இபிசி இடஒதுக்கீடு கொண்ட அரசு பணிகளுக்கு மாற்றி, அந்த பணிகளுக்கான சம்பள விகிதப்படி சம்பளம் வழங்கலாம்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

===

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க