tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

இராமநாதபுரம் மாவட்டம் கடுகுசந்தை அரசு உயர்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

கடுகுசந்தை அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த கல்வியாண்டில் 100% தேர்ச்சி அளித்த பாட ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, தமிழ் மன்றத் தொடக்க விழா, சாதனை மாணவர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடைபெற்றன. பள்ளியின் பெற்றோர் கழகத் தலைவர் திருமிகு.சிவசுப்பிரமணியன் தலைமையில், பள்ளியின் தலைமையாசிரியர் (பொ) இராஜேஸ் வின்சென்ட் முன்னிலையில் நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் திருமதி.மலர்விழி பங்கேற்றோர். தமிழ்த்தாய்வாழ்த்துப் பாடலுடன் முப்பெரும் விழா இனிதே தொடங்கியது. பள்ளியின் இளநிலை உதவியாளர் சரவணக்குமார் வரவேற்றார். பள்ளியின் நான்கு அணிகளிலுமிருந்து மாணவர்கள் வழங்கிய பாடல்,பேச்சு,மாறுவேடம், நடனம் உள்ளிட்ட கலைநிகழ்வுகள் நடைபெற்றன.பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிவசுப்பிரமணியன் 100% தேர்ச்சி அளித்த செலஸ்டின் மகிமை ராஜ், பிரபு இம்மானுவேல், திவ்யா,லெட்சுமணன்,பாரதி ஆகிய ஆசிரியர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவித்து பாராட்டுக் கேடயம் வழங்கினார். பள்ளித் தலைமையாசிரியர்(பொ)இராஜேஸ் வின்சென்ட் ஜெய்சிங் 100% தேர்ச்சி பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக அரசால் சென்னையில் வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரிடம் வழங்கினார்.தொடர்ந்து சிறப்பு விருந்தினர் தலைமையாசிரியை மலர்விழி கடுகுசந்தை அரசு உயர்நிலைப் பள்ளியின் சாதனைகளையும் சிறப்பியல்புகளையும், அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வேண்டியதன் அவசியத்தையும் அதனால் கிடைக்கும் பயன்களையும் எடுத்துரைத்தார்.தொடர்ந்து ஆய்வக உதவியாளர் சாந்தி நன்றியுரை நிகழ்த்த விழா இனிதே நிறைவுற்றது. விழா ஏற்பாடுகளை தமிழ்மன்ற பொறுப்பாளர் தமிழாசிரியர் செலஸ்டின் மகிமைராஜ், தமிழ் மன்றச் செயலர்கள் மாணவி உதயநளினி மற்றும் ஜெயிஸ்ரீ ஆகியோர் செய்திருந்தனர்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க