tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஜூலை 26-

‘சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தில், மாநில அரசுகள் வரி விதிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு இல்லை. எனவே, மாநில அரசுகள் வரி விதிக்கலாம். இதில் பார்லிமென்ட் மூலம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாத வரை, மாநில அரசுகள் வரி விதிக்க முடியும்’ என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்சில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உள்ளிட்ட 8 நீதிபதிகள் ‘கனிமங்களுக்கு மாநில அரசு வரி விதிக்கலாம்’ என்று தீர்ப்பளித்தனர். நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும், இதில் மாநில அரசுகளுக்கு அதிகாரம் கிடையாது என்று முரண்பட்ட தீர்ப்பு வழங்கினார்.

9 நீதிபதிகள் பெஞ்ச்

கனிமங்களுக்கு மாநில அரசுகள் வரி விதிக்கலாமா, கூடாதா என்ற குழப்பம் நீண்டகாலமாகத் தொடர்கிறது. இது தொடர்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், அபய் எஸ்,ஓகா, பி.வி.நாகரத்னா, ஜெ.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, உஜ்ஜல் புயான், சதீஷ் சந்திர சர்மா, அகஸ்டின் ஜார்ஜ் மஸி ஆகிய 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், கடந்த பிப்ரவரி 27 முதல் மார்ச் 14ம் தேதி வரை 7 நாட்கள் விசாரித்தது. பின்னர் ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு, நேற்று அறிவிக்கப்பட்டது.

தீர்ப்பு சாரம்சம்

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உள்ளிட்ட 8 நீதிபதிகள், ‘கனிமங்களுக்கு மாநில அரசு வரி விதிக்கலாம்’ என்று தீர்ப்பளித்தனர். நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும், ‘ராயல்டி என்பது, ஒரு வகை வரிதான். கனிமங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் கிடையாது’ என்று முரண்பட்ட தீர்ப்பு வழங்கினார். பெரும்பான்மை கருத்து அடிப்படையில், ‘ மாநில அரசுகள் வரி விதிக்கலாம்’ என்று தீர்ப்பளிக்கப்ட்டது.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் :

* இப்போது அமலில் உள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தில், மாநில அரசுகள் வரி விதிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு இல்லை. எனவே, மாநில அரசுகள் வரி விதிக்கலாம். இதில் பார்லிமென்ட் மூலம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாத வரை, மாநில அரசுகள் வரி விதிக்க முடியும்.

* ராயல்டி தொகை, சுரங்க நில குத்தகை ஒப்பந்த அடிப்படையில், எடுக்கப்படும் கனிமங்களின் அளவைப் பொருத்து தீர்மானிக்கப்படுகிறது. ஒப்பந்த தொகையை, வரி என்று கூற முடியாது. வரி நிலுவை வசூலிக்க சட்டம் இருப்பதுபோல், ராயல்டி நிலுவையை வசூலிக்க சட்டம் இருக்கிறது என்ற அடிப்படையில், ராயல்டியை ஒரு வரி என்று தீர்மானிக்க முடியாது. மத்திய அரசு வசூலிக்கும் சுரங்க ராயல்டி தொகை, பின்னர் மாநில அரசுகளுக்கு வழங்கப்படுகிறது என்ற அடிப்படையில், ராயல்டியும் ஒரு வரி என்று கூற முடியாது. சுரங்க ராயல்டி தொகை என்பது, சுரங்க நிலத்தின் உரிமையாளர், அந்த நிலத்தில் இருந்து கிடைக்கும் கனிமங்களின் உரிமையை ஒருவருக்கு தற்காலிகமாக விட்டுக்கொடுப்பதற்காகப் பெறப்படும் தொகை. வரி என்பது, வரி விதிப்பு சட்டப்படி, அரசால் விதிக்கப்படும் தொகை. எனவே, ராயல்டி எனபது வரி அல்ல. 1989ல் வழங்கப்பட்ட தீர்ப்பில், ‘ராயல்டியும் ஒரு வரி’ என்று முடிவு செய்யப்பட்டது சரியல்ல.

* ‘நிலங்களில் வரி விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு’ என்ற சட்ட வாசகத்தில் இடம்பெற்றுள்ள ‘நிலம்’ என்ற வார்த்தை, சுரங்க நிலம் மற்றும் குவாரி நிலம் ஆகியவற்றுக்கும் பொருந்தும். இதில் பார்லிமென்ட் மூலம் கட்டுப்பாடு வரையறை வராத வரை, இவ்வாறு வரி விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு.

இவ்வாறு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

=======

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க