tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஜூன் 23–

 

‘‘கள்ளச்சாராயத்தை அரசு ஒருபோதும் அனுமதிக்காது. தற்போது, கள்ளுக்கடைகளை திறக்க வேண்டிய அவசியம் எழவில்லை,’’ என, அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

 

அவர் அளித்த பேட்டி:

 

லோக்சபா தேர்தலில் தோல்வி கண்டதால், சட்டசபையில் ஏதேனும் பிரச்னையை கிளப்ப வேண்டும் என்பதற்காக, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, இரண்டு நாட்களாக இல்லாத குற்றச்சாட்டுகளைக் கூறி, சட்டசபையை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 

எங்களுக்கு பேச வாய்ப்பில்லை என்று கூறுவது அப்பட்டமான பொய். எப்போதும் கேள்வி நேரத்தில், எந்த பிரச்னையையும் எழுப்ப மாட்டார்கள். பூஜ்ய நேரத்தில் தான் எழுப்புவர். அவர்கள் வேண்டுமென்றே, கேள்வி நேரத்தை கெடுக்கும் நோக்குடன், பிரச்னையை எழுப்பினர். சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். 

 

முதல்வர் ஜனநாயகத்துக்கு மதிப்பு கொடுக்கிறார். கடந்த ஆட்சியில், எங்களை  

‘சஸ்பெண்ட்’ செய்தனர். ஜனநாயகத்தில் நம்பிக்கை உடைய முதல்வர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்து அவசியம் என விரும்புவதால், அவர்களை அழைக்கும்படி கூறினார். 

மக்கள் மன்றத்தில் தோற்று விட்டதால், அரசியல் செய்வதற்காக இதை செய்கின்றனர். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு முன் நடந்த கள்ளச்சாராய சம்பவங்களுக்கு, சி.பி.ஐ., விசாரணை வைக்கவில்லை; கமிஷன் அமைக்கவில்லை. நாங்கள் சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். 

 

எனவே, சி.பி.ஐ., விசாரணை தேவை இல்லை. கள்ளச்சாராயம் குறித்த தகவல் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கள்ளச்சாராயத்தை அரசு அனுமதிக்காது. இதில் அரசியல் செய்ய விட மாட்டோம். 

 

டாஸ்மாக் கடைகளை காலையில் திறந்தால், காலை முதல் குடிக்க வைப்பதாகக் கூறுகின்றனர். தாமதமாக திறந்தால், அதனால் வெளியில் குடிப்பதாகக் கூறுகின்றனர். கள்ளுக்கடைகளை திறக்க வேண்டிய அவசியம் தற்போது எழவில்லை; எழுந்தால் அதுகுறித்து பார்ப்போம். 

 

இவ்வாறு ரகுபதி கூறினார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க