tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஆக. 24–

 

‘‘காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் ஒப்பந்தத்தை, மதுபான தயாரிப்பு நிறுவனங்களிடமே வழங்கலாமா என்பது குறித்து பரிசீலனை செய்யப்படுகிறது,’’ என, அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

 

‘டாஸ்மாக்’ கடைகளில் மது வாங்குவோர், மதுவை அருந்தி விட்டு காலி பாட்டில்களை சாலைகளில் வீசுகின்றனர். இதனால், மலைப்பகுதிகளில் பாட்டிலை மிதித்து வன விலங்குகள் உயிரிழக்கின்றன. எனவே, மது கடைகளிலேயே காலி பாட்டிலை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த, டாஸ்மாக் நிறுவனத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘காலி மது பாட்டிலை திரும்ப பெறும் திட்டம், வரும் நவம்பருக்குள் மாநிலம் முழுதும் அமல்படுத்தப்படும்’ என, உயர் நீதிமன்றத்தில் அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. 

 

இதுகுறித்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி அளித்த பேட்டி:

 

காலி பாட்டிலை சாலை, வயல், நீர் நிலைகளில் வீசி செல்வதை தடுக்க, ஒன்பது மாவட்டங்களில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் முறை செயல்படுத்தப்படுகிறது. இதனால் சிரமம், கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாக ஊழியர்கள் கூறுகின்றனர். 

நீதிமன்ற வழிகாட்டுதல் படி, மதுபானங்கள் தயாரித்து வழங்கும் ஆலைகளே காலி பாட்டில்களை திரும்ப எடுத்துக் கொள்ள செய்யலாமா அல்லது, ‘டெண்டர்’ கோரி ஒப்பந்த நிறுவனங்களுக்கு மது பாட்டில்களை எடுத்து கொள்ள அனுமதிக்கலாமா என்ற பரிசீலனை நடக்கிறது. 

இதில், மது ஆலைகளே பாட்டிலை திரும்ப பெறுவதில் சிரமங்கள் குறைவு என்ற ரீதியில், அவர்களிடமே டெண்டரை ஒப்படைக்க பரிசீலிக்கப்படுகிறது. எப்படி இருந்தாலும் நீதிமன்றத்தில் நவம்பர் மாதம் வழக்கு விசாரணை வருவதால், அதற்கு முன் முடிவு செய்யப்படும். 

 

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

 

***

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க