tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சிதம்பரம், மே 4

கால்பந்து போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பெண்கள் அணியை அண்ணாமலைப் பல்கலைக் கழக துணைவேந்தர் கதிரேசன் பாராட்டினார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக பெண்கள் கால்பந்து அணி கடந்த மாதம் அசாம் மாநில தலைநகர் கௌகாத்தியில் நடைபெற்ற கேலோ இண்டியா பல்கலைக் கழககங்களுக்கிடையேயான கால்பந்து போட்டியில் தங்க பதக்கம் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்கள். இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பதக்கத்தோடு பல்கலைக்கழகம் திரும்பிய பெண்கள் கால்பந்து அணியை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம். கதிரேசன் சிதம்பரம் இரயில் நிலையம் சென்று நேரில் வரவேற்று வாழ்த்தினார்.

தொடர்ந்து நடந்த பாராட்டு விழாவில் வாழ்த்துறை வழங்கிய பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம். கதிரேசன் பெண்கள் கால்பந்து அணிக்கு பொன்னாடை அணிவித்து கேடயங்களை வழங்கி வாழ்த்தி பேசினார்கள். வரும் கல்வி ஆண்டிலும் இதுபோல பல வெற்றிகளை பெற்று பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். விழாவில் கல்விப்புல முதல்வர் எஸ். குலசேகரபெருமாள் பிள்ளை வாழ்த்தி பேசினார். பெண்கள் கால்பந்து அணியின் பயிற்றுனர் கே. சிவக்குமார் மற்றும் துறைத் தலைவரும் கால்பந்து அணியின் பயிற்சியாளருமான எம். இராஜசேகரனுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.

முன்னதாக பல்கலைக்கழக என்சிசி மாணவ மாணவிகள் 2024 ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற குடியரசுதின விழாவின் அணிவகுப்பில் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கும் பொன்னாடை போற்றி கேடயம் வழங்கி துணைவேந்தர் வாழ்த்தினார்.

இறுதியில் பல்கலைக்கழக விளையாட்டுத்துறை இணை இயக்குனர் ஆர். வெங்கடாஜலபதி, உடற்கல்வித் துறையின் சார்பாக அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவில் துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் பாக்கியராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி ரெத்தின சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க