tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

நீலகிரி மாவட்டம் குன்னூர் உபதலை அரசு மேனிலைப் பள்ளியில் 200 மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு தமிழக அரசின் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதும் 10 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது இத்தொகை மூலம் பள்ளியின் அனைத்து வகுப்பறைகளும் ஆய்வகங்களும் வண்ணம் அடிக்கப்பட்டு அழகுற திகழ்கிறது. பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் டிஜிட்டல் வகுப்பறை ஒன்றும் மேடை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி கீதா அவர்கள் கல்வி வளர்ச்சி நாள் விழாவில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு புது பொலிவுடன் காணப்படும் வகுப்பறைகள், மேடை, டிஜிட்டல் வகுப்பறை ஆகியவற்றை திறந்து வைத்தார். விழாவில் பேசிய முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் இப்பள்ளி வரும் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற வேண்டும் என்று ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி,ஓவியப்போட்டி ஆகியவற்றில் ஆரம்பப் பள்ளி பிரிவு, நடுநிலைப்பள்ளி பிரிவு, மேல்நிலைப்பள்ளி பிரிவுகளில் முதலிடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் முன்னாள் மாணவியும் தற்போதைய பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி பேராசிரியருமான முனைவர் இரா செல்வி அவர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினார். பள்ளிக்கு தேவையான பொருட்களை மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு ராமச்சந்திரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி உமா மகேஸ்வரி, முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் திரு பாபு ஆகியோர் தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் திரு ஐயறின் ரெஜி மற்றும் ஆசிரியர்களிடம் வழங்கினர். விழாவில் பேசிய நீலகிரி மாவட்டக் கல்வி அலுவலர் திரு நந்தகுமார் அவர்கள் மாணவர்கள் செல்போன் அதிகளவு பயன்படுத்துவது வரும் காலங்களில் அவர்களுக்கு தூக்கம் சார்ந்த பிரச்சினைகளை உருவாக்கும் என அறிவுரை வழங்கினார். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் நீலகிரி மாவட்ட உதவி திட்ட அலுவலரும் பள்ளியின் முன்னாள் மாணவருமான திரு அர்ஜுனன், சத்யசாய் அறக்கட்டளை நிர்வாகிகள், உபதலை பஞ்சாயத்து தலைவர் திருமதி பாக்கியலட்சுமி சிதம்பரம், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி அக்கமாதேவி அவர்களின் மகள் திருமதி ஹேமா ராமன், பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் திரு சந்துரு, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை செல்வி உஷா தேவி, ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி நிர்மலா, முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் திரு பாபு, பள்ளிக்கு வண்ணம் அடித்த ஒப்பந்ததாரர் திரு சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை புரிந்தவர்களை பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் திரு.சிவகுரு வரவேற்று பேசினார். விழா நிகழ்ச்சிகளை பள்ளியின் முதுகலை கணித ஆசிரியை திருமதி எபனேசர் ராஜாத்தி தொகுத்து வழங்கினார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க