tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

குன்னூர் உப தலை அரசு பள்ளியில் புதிய பள்ளி மேலாண்மை குழு பொறுப்பேற்பு          

 நீலகிரி மாவட்டம் உப தலை அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் தேர்தலும் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு பள்ளியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள காரணமாக இருந்த பழைய பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. பள்ளியின் தமிழாசிரியை திருமதி அல்லிராணிவரவேற்புரை நிகழ்த்தினார்.பள்ளி தலைமை ஆசிரியர் ஐயறின் ரெஜி பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கங்கள், பள்ளி வளர்ச்சிக்கு நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் ஆகியவற்றை விளக்கிப் பேசினார். தொடர்ந்து நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் தேர்தலில் தலைவராக உமா மகேஸ்வரி, துணைத் தலைவராக மல்லிகா, ஆசிரியர் பிரதிநிதியாக கிருபா பாஸ், கல்வியாளராக சத்ய சாய் அறக்கட்டளைத் தலைவர் திரு சாய் மேகநாதன், முன்னாள் மாணவர் சங்கப் பிரதிநிதியாக முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பாபு, உள்ளாட்சி பிரதிநிதிகளாக உபதலை பஞ்சாயத்து தலைவர் பாக்கியலட்சுமி சிதம்பரம், வார்டு உறுப்பினர் ஷோபனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.பெற்றோர் பிரதிநிதிகளாக பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமச்சந்திரன், ரீட்டா ப்ரீத்தி, திருமதி மஞ்சுளா உட்பட 14 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்தத் தேர்தல் நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பட்ட பார்வையாளர் செல்வி ராஜேஸ்வரி தேர்வு செய்யப்பட்ட புதிய பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.நிகழ்ச்சியை பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் பிரகாசம் தொகுத்து வழங்கினார்.பள்ளியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை முன்னேற்றுவதற்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான கற்றல் சூழலை உருவாக்குவதற்கும் தங்கள் உழைப்பை வழங்கிட போவதாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றனர். புதிய உறுப்பினர்களின் குழு புகைப்படம் எடுக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க